எது அழகு ...!
பூவே நீ மலரும் போது அழகு 
மலர்ந்து உதிர்ந்தபின் எது அழகு?

நிலவே நீ சாயிம்போது அழகு 
சாயிந்தபின் எது அழகு?

இரவே நீ விடியும் போது அழகு 
விடிந்தபின் எது அழகு?

உறவே நீ சேரும்போது அழகு 
சேர்ந்து பிரியும்போது எது அழகு?

மழையே நீ உதிரும்போது அழகு 
உதிர்ந்தபின் எது அழகு? 

காற்றே நீ வீசும்போது அழகு 
வீசிமுடிந்தபின் எது அழகு?

மொழியே நீ பாடும்போது அழகு 
பாடியபின் எது அழகு?

உயிரே நீ பிறக்கும்போது அழகு 
பிறந்து இறக்கும்போது எது அழகு?

உலகில் எத்தனை அழகுகள் 
இருந்தாலும் அத்தைனையும் 
உண்மையான அன்பிற்கு ஈடாகுமா...!


6 comments:

 1. ஆஹா... அருமையான வரிகள்... சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

   Delete
 2. அருமையான சிந்தனை! அன்பை விட உயர்ந்தது இல்லைதான்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

   Delete
 3. உண்மை அழகை உன்னதமாய் உணர்த்திய அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அக்கா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...