தீபாவளி செய்திகள் கவிதை வடிவில்

வெள்ளை புடவை 

விடிந்தால் தீபாவளி 
விபத்தில் கணவன் 
வாங்கியப் பட்டாசுகள் 
வழியனுப்பியது வாக்கரிசியோடு !
ஆசையே அழிவு 

தலை தீபாவளி 
தாய் மாமன் சீர் 
குறைந்தது குண்டுமணி 
கொலை வெறியில் 
பிழையானாள் மகள் !


வேலைக்காரி 

ஆயிரம் கனவுகளோடு 
அவள் முகம் சிவந்தது 
ஆதரவு யாருமில்லை 
அடுத்தவேலை உணவுமில்லை 
அன்னமிட்டக் கையேடு 
அண்டை வீட்டை நோக்கினாள் 
ஆஹா பழமையில் புதிய தீபாவளி !4 comments:

 1. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 2. நல்ல வரிகள்... (உண்மை)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...