அருவி இதழ் எண் : 24-25




பழைய மரம் 
அலைமோதும் பறவைகள் 
புதிய பழம் ...!
ஒரு மனதாய் 
தேர்ந்தெடுத்தனர் 
மோதிரவிரல் ...!
எந்த நூற்றாண்டின் 
கண்ணீரோ 
உப்புக்கரிக்கிறது கடல் ...!
எங்கிருந்தோ எரிக்கிறான் 
உருகினேன் 
மெழுகாய் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!

கோவம் சாவம் 
ஆனந்த உலகத்தின் 
இருபடியானது ...!
சிந்தும் மழைத்துளி 
நாற்றங்காலில் தவிக்கும் 
தவளை ...!
இடைத் தேர்தல் 
இழுத்துப் போர்த்திக்கொண்டது 
சேலை ...!
தர்மத்தின் 
உயிர் அழிந்தது 
'அ' தர்மம் ...!
பேச துடிக்கிறது இதம் 
பொய் சொன்னது 
காதுகள் ...!
களத்தில் நிலவு 
பசி மறக்கும் 
பறவைகள் ...!
வரம் கொடு இறைவா 
விரதமும் பாரதமும் 
ஏழைக்கென்று  ...!
சமூகத்தின் சாரால் 
நனையவில்லை 
ஏழை வயிறு ...!
கடலைத் தின்று 
ஏப்பமிட்டான் 
எமதர்மன் ...! சுனாமி )
சீறிவரும் சீருடைகள் 
சின்னபின்னமாகிக் கொண்டிருக்கும் 
இளைய சமுதாயம்
பயந்தாங்கொல்லி 
கொள்ளி வைக்கிறது 
சாதியதீ  ...!
ரயில் பயணம் 
ஏறி இறங்குகிறது 
சருகுகள் ...!

எப்படி ...!



Vinnaithandi Varuvaya hot photo

வெயிலில் அலைந்தேன் 
வேர்க்கவில்லை
மழையில் நடந்தேன் 
நனையவில்லை
நீ 
அருகில் வந்ததும் 
நனைந்தது போல் வேர்க்கிறது 
எப்படி ...!

வம்சம் இனிக்கும் ...!



எளிமையின் உணவு
இரவில் வரும்
நிலவைப் போல்
வெளிச்சம் தரும்

பணத்தின் உணவு
சுட்டெரிக்கும் 
சூரியனைப் போல்
இருளைத் தரும்

வசதியிலும்
வறுமையை
வாழ்வியலாக நினை உன்
வம்சம் இனிக்கும் ...!

மௌன காவியம் ...!


இதயம் என்ன முள்ளா - உன்
இமைகள் இரண்டும் கல்லா - நீ 
உயிரைத் தாண்டி போகையில் - நான் 
உடைந்து போகிறேன் சில்லாய்
அடி பெண்ணே பெண்ணே பெண்ணே
நீ என் முன்னே முன்னே முன்னே
வெறும் கல்லாய் கல்லாய் கல்லாய்
என்று கடவுளிடம் கேட்கின்றேன்
வழுக்கி விழுந்தேன் வார்த்தையில்
வாரி அணைத்தாய் வாழ்க்கையில் 
இயற்கை மட்டும் இசைத்திருந்தால்
இமயம் கூட வாழ்த்தியிருக்கும் (அடி பெண்ணே )
மௌனம் வரைந்த ஓவியத்தை
மழைகள் கூட அழிப்பதில்லை
அந்த தடத்தில் இறக்கின்றேன்
அழுது புலம்ப காதலியில்லை (அடி பெண்ணே )

(முதல் முறையாக கவிதையில் இருந்து பாடல் எழுத முயற்சி செய்துள்ளேன் நிறை குறைகள் இருப்பின் தாரளமாக சுட்டிக்காட்டுங்கள் )

இன்னொரு மும்தாஜ் ...!



இரண்டாம் 
காதலியின் 
நினவு சின்னம் 
உலக அதிசயத்தில் 
ஒன்றானதை 
எடுத்துரைத்தவள்
எனக்கு கிடைத்த
இன்னொரு மும்தாஜ் ...!

இன்றைய சுதந்திரம் ...!



ஆகா வந்திருச்சு
ஆகஸ்ட் பதினைஞ்சு

அடடே விட்டாச்சு
அகிலமே விடுப்பாச்சு

குளிச்சி முடிஞ்சாச்சு
கொடியேற்றப் புறப்பட்டாச்சு

தலைவரெல்லாம் வந்தாச்சு
தலை நகரமே தொலைகாட்சி முன் அமர்ந்தாச்சு

இந்திய கொடி பறந்தாச்சு
இனிப்பும் வழங்கியாச்சு

அலங்கார அணிவகுப்பு ஆரம்பிச்சாச்சு
ஆட்டம் பாட்டம் அமர்க்களாமாச்சு

அசதியும் அலுப்பாச்சு
ஆதவனும் மறைஞ்சாச்சு

நிலவும் இருளாச்சு எல்லோரும்
இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு ...!



நல்ல வேளை ...!





நல்ல வேளை 
எட்டா உயரத்தில் 
இருக்கிறது வானம் 
இல்லையேன் 
பட்டா போட்டிருப்பார்கள் 
நல்ல விலைக்கு ...!

உயிர் கொடுக்கிறது காதல் ...!


Actress Pranitha in Rakshasudu Movie Stills

புற்று நோயை 
அறுத்து எறிந்தாலும் 
ஒட்டிக் கொண்டு 
உயிரை எடுக்கும் 
வெற்று பாம்பை போல்
தாலி கட்டிக் கொண்ட 
பின்னும் 
ஒட்டிக் கொண்டும் 
உயிரை கொடுக்கிறது 
காதல் ...!

பெயர் பலகை ...!

பத்து தலைமுறையை
ஒற்றை வார்த்தையில்
கட்டிக்காக்கிறது
பட்டிக்காடு ...!
ஒற்றை தலைமுறையை
சுட்ட கரும்பலகையில்
சுட்டிக்காட்டுகிறது 
பட்டணம் ...!

சேரும் சகதியும் ...!



விதவிதமான செருப்புகள்
வந்த போதிலும் 
உழுதவனுக்கு 
அழகூட்டியது 
சேரும் சகதியும் ...!

ஜாதி மதம் ..!



நிதியை மணந்த நீதி 
பெற்றெடுக்கிறது 
சதியென்று 
விதியென்று 
இணைந்து 
மறு பரிசிலனை 
பண்ணுகிறது 
ஜாதி மதம் ..!

நினைவுக் கவிதை ...!


கனவை உடைக்கும் 
கண்களுக்கும் 
பரிசளிக்கிறது 
நினைவுக் கவிதை ...!

இடம் கொடுப்பதில்லை ...!


இதழ் முழுக்க 
பொய்கள் நிறைந்திருந்தாலும் 
இதயம் தவிக்கும் 
மெய்களுக்கு 
இடம் கொடுப்பதில்லை 
உண்மை ...!

Dr. A. P. J. Abdul Kalam ...!




மூவுலகையும் ஸ்தம்பிக்க வைத்த மாமனிதனே கலாம் ...!

ராமேஸ்வரத்தின் 
ராணுவ வீரனே 
"கலாம்"
தனது முழு பெயரில் 
"மூன்று" மெய்யெழுத்துடன் 
பயணம் செய்யும் 
எண் கணித 
வாழ்க்கை வரலாறு இதோ...
(அப்துல் கலாம் )

வயதைக் கடிந்தேன் 
கூட்டிக் கழித்துச் 
சொன்னது மூன்று 
(2015-1931=84
8+4=12
1+2=3)

வாழ் நாள் சரித்திரத்தை 
வரலாறாக்க 
முயற்சித்தப்  போது 
சுய சரிதம் கழிந்தது மூன்று
1931=14=5 , 
2015=8 
8-5 = 3

மதத்தின் குறியீட்டை 
இஷ்டப்படு கூட்டிக் கூட்டிப் 
பார்த்த போது மீண்டும் 
துளிர்த்தது அதே மூன்று
(7+8+6=21
2+1=3)

தேதி ஆராய்ச்சியில் 
ஜோதி ஏற்றி வழிபட உன் 
நினைவு நாளை 
கூட்டிக் கழித்தபோது 
வாசலில் நின்றது மூன்று
(OCT 15 = 6, 
JUL 27 = 9 
9-6 = 3)

இயற்கை எய்தி 
செயற்கை மொழி கொண்டு 
இமயத்தையே சரியவைத்த 
தவ நாட்கள் மூன்று
(Jul 27- Jul 30)

ராணுவ மரியாதையில் 
ராமேஸ்வரமே நடுநடுங்க 
நினைவுக் கல் ஏற்றி 
நல்லடக்கம் நடந்த நாள் 
30 என்றாலும் 
முன் நிற்பது மூன்று
( jul 30 )

உலகத் தலைவர்கள் 
ஒன்று கூடி 
உம் பாதம் வணங்க 
ராணுவ சத்தத்தில் 
கூட்டி முடிந்தது மூன்று 
(21 குண்டுகள் முழங்க )

மிச்சமிருக்கும் 
பிறந்த நாளை வரவேற்று 
இனிப்பூட்ட 
மாதம் மூன்றிருக்க 
முடிவுரை எழுதிய 
கலாமே ...
இதைத் தவிர்த்து இன்னும் 
மூன்றைத் தொடர்கிறேன்

உன் திருவாயில்
மொழிந்த மொழிகள் மூன்று 
(T+E+H)

வாதித்த "கடமை" மூன்று 

நீ கண்ட "சோதனை" மூன்று 
அதில் 
வெடித்துச் சிதறிய 
"சாதனை" மூன்று

"வேதனை" மூன்று 
விண்வெளியில் 
பெயரிட்ட SLV-3 rocket - மூன்று

"வேதம்" மூன்று 
விடியலைக் கூவும் 
உன் "கவிதை" மூன்று

அகிலமே விடுப்பளித்து 
அமைதிப் பூ மனம் வீசிய 
மண்ணில் வித்தான 
உன்னை 
வாழ்த்தவிருக்கும் இனி 
காலம் "மூன்று "

சுயலாபம் அறுத்து 
ஞானம் பெற்ற மூன்றின் 
நாயகனே உனக்காக

அகிலமே 
அகல் தீபம் ஏற்றிக் 
கைகூப்பும் ஆஞ்சநேயனே
அக்னி சிறகு கொண்டு 
என்றென்றும் சிரஞ்சீவியாகச் 
சிறக்க வாராயோ ...!

(மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கலாம் அது கலாம் கலாம் அது கலாம் )

( குறிப்பு :- கலாமின் பிறப்பு முதல் இறப்புவரை நடந்த நிகழ்வுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கிடைத்தது மூன்று அதையே கருவாக வைத்து எழுதியுள்ளேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் இப்படிக்கு ஹிஷாலி )

mhishavideo - 145