ஹிஷாலீ ஹைக்கூ - 22



ஆறடி அழகில்
அரைகுறை சாபங்கள்
ஊனமுற்றோர்

ம்புலங்களின்
அகிம்சை விரதம்
ஊனமுற்றோர்

அழுதுகொண்டே பிறந்தேன்
அழுதுகொண்டே வாழ்கிறேன்
மாற்றுத்தினாளி

மற்றவருக்கு நான் அழகில்லை
மன்னிப்புக்கு நான் அழகாகிறேன்
ஊனமுற்றோர்

ஆண் பெண்
மருவிய பாலினம்
மாற்றுத்தினாளிகள்

பெற்றோர் இட்ட பெயரை மாற்றி
இறைவன் வைத்த பெயர்
ஊனமுற்றோர்

இறப்பை விரும்பாத
மனித ஜென்மம்
பிறவி ஊனம்

பிறவி பாவம்
ஏழு ஜென்ம சாபம்
மாற்றுத்தினாளி

விடுகதைக்கு
விடை கிடைத்தது
தாய் தந்தை பாவம்

அழகில் பூத்த
அற்புத பிறவி
ஊனம்

சென்ரியுவாய்த் திருக்குறள் - 71 to 75


குறள் 71: 
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும். 
 ஹிஷாலீ சென்ரியு                           
இதயத்  தாழ்பாள் 
மெருகேறும் நேரம் 
அன்பின் வாசல் கண்ணீராகும் 
வானளவு துன்பம் 
கடுகளவும் இன்பம் 
அடக்கம் கண்ணீரில் 
குறள் 72: 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு. 
ஹிஷாலீ சென்ரியு  
உடல் பொருள் ஆவி 
அற்பணிக்கும் பிறப்பு 
உயிரின் சிறப்பு
குறள் 73: 
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு. 
ஹிஷாலீ சென்ரியு  
அன்பின் பயன் 
மனிதனை மனிதன் 
மதித்து வாழ்தல் 
குறள் 74: 
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் 
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 
ஹிஷாலீ சென்ரியு
ஈனும்  பிறவிக்கு   
ஈடான ஒன்று 
நட்புடன் கூடிய அன்பே  
குறள் 75: 
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 
ஹிஷாலீ சென்ரியு
ஆன்மாவின் 
நற்பயன் 
அன்பு கலந்த இல்வாழ்க்கை 

ஹிஷாலீ ஹைக்கூ - 21

பின் விளையும் பணத்திற்கு 
முன் உரம் 
கல்லுரிகள் 
பணக்காரர்கள் பணத்திற்கு 
வரி விளக்கு சாதனம் 
கல்லுரிவளாகம் 
ஆட்கள் மாறலாம் 
அனுபவம் மாறவில்லை 
கல்லூரி அரசியல்  
சீட்டக்காட்டி சீட்டுகேட்கும் 
கலர் வேட்டிகளுக்கு
ஓட்டு போட்ட ஊழல் மக்கள்
நல்ல நோட்டுகள் 
நடுப்பகலில் கைமாறுகிறது
சட்டப்படி பட்டப்படிப்பு 
மூன்று பக்கம் கடல் 
நான்கு பக்கம் கடன் 
இந்தியப்  பட்ஜெட்
சட்டங்களுக்கு 
சாட்சி சொல்கிறது 
காந்தி நோட்டு 

ஹிஷாலீ ஹைக்கூ - 20


விசும்பி அழுதாலும் 
வியர்வை இனிப்பதில்லை 
இன்பத்தோணியில் துன்பக் கடல்...!
பெண்கள் விழித்துவிட்டார்கள் 
ஆண்களுக்கு இணையாக 
சீர் குலைந்தது கலாச்சாரம் 
கட்டைவிரலை உதாசினப்படுத்தியதால்   
காலை வாரி விட்டது 
கையெப்பம்...!  


கருவறையின் 
முகவரி 
பிரம்மன்...! 


பிரம்மனின் 
முதல் வழி 
கருவறை...!
உடல் உயிர் தந்து 
உலகம் வெல்பவள் 
பெண்...!

சென்ரியுவாய்த் திருக்குறள் - 61 to 70

குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

இல்வாழ்க்கையின் பேறு
விஞ்ஞானத்தை வென்ற 
பிள்ளைகள் 

தீமையில்லா நன்மையை 
உணரும் குழந்தை 
மதிப்புடன் திகழ்வார் 

அறிவும் ஆற்றலும் 
பொருந்திய பிள்ளைச்செல்வம் 
பிறப்பின் வெற்றிச்செல்வம் 

குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்.

நல்ல மகனின் 
ஜென்மப் பயன்
தாய் தந்தையின் புண்ணியம் 

ஏழு பிறவிக்கும்  
தீவினை சேராமல் இருக்க 
பழியில்லா குழந்தை பெருக

பழிக்கப்படா சேய்
துன்பம் தீண்டாப் பிறவி   
பெற்றோர் பண்பு 

குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

வினையில்லா பண்பு
தினையில்லா பொருள் 
தம் மக்களின் கடமை  

அறிஞர் கூற்று 
பொருள் அறிந்த மக்களிடம்  
கர்ம வினைச் சேராது  

நற்ச்செயல் மறவா 
பிள்ளைச் செல்வம் 
நாட்டின் பொருள்செல்வம் 

குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

அமிழ்தத்தின் சுவைக்கு ஈடு 
சிறுகை கூழ்
குழந்தையும் தெய்வமாகலாம் 

அமிழ்தத்தைவிட
தாயுக்கு தேவாமிர்தம் 
குழந்தையின் எச்சில்கூழ் 

கூழும் அமிர்தமாகும் 
குழந்தையின் 
பெற்றோருக்கு 

குறள் 65:
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

தாயின் செவிக்கு அமிழ்தம் 
உடலுக்கு காதல் 
குழந்தைகள் 

கட்டி அணைக்கும்
மழலையிடம் உள்ளது 
சிற்றின்பம் பேரின்பம் 

கோடடிச் சொலவத்திற்கு 
ஈடு  
மழலை செல்வம் 

குறள் 66:
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்

குழலும் யாழும் குடியிருக்கும் 
குழந்தையின் 
மழலை சொல்லில் 

யாழும் குழலும் இனிது 
அதனினும் தேன்
குழந்தையின் மழலை மொழி

யாழும் குழலும் இணையும் 
இன்னிசைக்கு முன் 
புரியா மழலையும் புரியும் 

குறள் 67:
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.

கற்றோர் அவை முன் 
கற்று தேறிய மகன் 
தகப்பனின் கடமை 

பிள்ளைக்கு கல்வி 
பெற்றோருக்கு நன்றி 
புகழில் வையகம்

கடமை  உலகில் 
கல்வி கண் 
திறவுகோல் தந்தை 

குறள் 68:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

தகப்பன் மடையன் 
பிள்ளை விஞ்ஞானி 
பாராட்டும் உலகம்
விவசாயின் மகன் 
விண்கலத்தின் தலைவன் 
இன்பத்தில் உலகம் 

வான்கொண்ட புகழில்
வாழும் உயிர் இனிக்கிறது
தகப்பன் பிள்ளை அறிவாற்றலில்

குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய். 

கர்ணனை ஈன்ற தாய் 
காலத்தால் அழியாத 
புகழை பெறுகிறாள் 
குறள் 70:
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல். 
ஒழுக்கம் அறிவு 
போற்றும் பண்புடைய மகன் 
தந்தைக்கு  கைம்மாறு 


ஹிஷாலீ ஹைக்கூ - 19



















எச்சில் 
ஈரம்‌ 
காதலின் முத்தத்தில்

மலர் கணைகளுக்கு 
மாங்கல்யம் 
வண்டின் தீண்டல் 

எரிப்பவனும் 
சுகப்படுகிறான் 
என் புன்னகையில் 

விழுதுகளின் 
விரதம் 
மாலை வெக்கம் 


சென்ரியுவாய்த் திருக்குறள் - 51 to 60


குறள் 51: 
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
குறைந்த வருவாய் 
நிறைந்த அன்பு 
மனைவியின் கடமை 
பசியிலும் பால்முகம் 
மாறா இல்லறம் 
துணைவியின் நற்பண்பு 
தன் குடும்பம் தாய்வீடு 
பிரிக்கா மனைவி 
வருவாய் தலைவி 
குறள் 52:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
நற்பண்புள்ள மனைவி 
அமைவது 
தலைவனின் தனிச்சிறப்பு 
மாசற்ற 
இல்வாழ்க்கை 
மனைவியின் பாக்கியம் 
சிறப்பில்லா வாழ்வு
குடும்பத்தின் அழிவு 
குணம் தவறிய மனைவி 
குறள் 53:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
கோடியில் புரண்டாலும் 
குடும்பம் தழைக்க  
மனைவி சீதையாக 
இருப்பது 
இல்லாமல் போக்குவது 
பண்பற்ற மனைவி 
ஆயிரம் சொந்தங்கள் நடுவில் 
தெய்வமாய் வாழ்கிறாள் 
பண்பு குறையா மனைவி 
குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
வறுமையிலும் 
வாசம் மாற கற்பு 
மண்ணின் பெருமை
பிறப்பில் குறையிருந்தாலும் 
வளர்ப்பில் வானம் தொடுவது 
கற்பின் இலக்கணம்
மாற்றுத்திறநாளி
இல்லா பிறப்பு 
பெண்ணின் கற்பு
குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
மனைவியின் சொல்
வான் வார்க்கும் 
கணவனை வணங்கினாள்
கணவன் வாக்கு 
கன்னியின் நாக்கு 
இடியுடன் மழை 
ஐயும் பூதங்களும் அடிமை 
மனைவியின் கட்டளைக்கு 
கணவனே தெய்வமானால்  
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கணவனின் புகழ்பெருமையை 
நிலைநாட்டுபவள் 
கற்புநெறி தவாறபெண் 
கற்பில் உள்ளது
பெண்ணின் 
கணவன் உயிர் 
அறத்தின் குலவிளக்கு
உடலும் உள்ளமும் 
கணவனுக்கே அர்ப்பணிப்பவள் 
குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
அடிமைபடுத்துவது 
அறியாமை 
மானம்காக்கும் மகளிரை 
கற்பின் பயன் 
பண்பால் நிறையும் 
கணவனில்லா பெண் 
சிறைப்பட்ட கற்பு 
சிதைந்துவிடும் 
மன அடக்கமில்லா பெண் 
குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
காமத்தால் அழியாத 
கணவனின் நற்பண்பு 
பெண்ணின் பெருஞ்சிறப்பு
பெண்ணின் 
இல்வாழ்க்கை சிறக்க   
கணவனின் நற்பண்புகள் 
மனதாலும் உடலாலும் 
கலங்கப்படா பெண்
தேவலோக பெண்ணாவாள் 
குறள் 59:
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
வீதியில் தலை நிமிர்ந்து 
நடப்பதில்லை 
தாசிகள்
கலங்கியது காளை 
கன்னித்தன்மையற்ற 
மனைவியால்  
புகழ் தேடிய மனைவி 
வெக்கத்தில் 
ஆண் சிங்கம் 
குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
மங்கலப் பண்பாடு 
மாசற்ற குழந்தைகள்   
சிறந்த அணிகலன் 
நல்ல கணவன் மனைவி பிள்ளை
அமைந்த இல்வாழ்க்கை
பண்பாட்டின் அணிகலன் 
அகஅழகில் மனைவி 
புறஅழகில் பிள்ளை 
கணவனின் பேறு

ஹிஷாலீ ஹைக்கூ - 18














முன் ஜென்ம பாவம்
மகன் வடிவில் 
புண்ணியத்தை தேடி 

கருவரையும் 
காதலரையும் 
விளக்கியது சுமை 

நரம்புகள் தளர்ந்தாலும் 
தாய்பாலூட்டும் தாய்
கடமை தவறா பெண்

இருமுறை 
சுமக்கிறாள் தாய்
நான் ஒரு மாற்றுத்திரனாளி 

ஹிஷாலீ ஹைக்கூ - 17



எட்டு திசைக்கும் 
ஓர் ஒற்றையடிப்பாதை
ஊழலின் முதல் புள்ளி...!
கருவறை கல்லறை 
பயணங்கள் நடுவில் 
இன்ப நாட்கள்...!
சாலைகளில் ஓர் 
சாணக்கியன்....
தவறிய நேரங்கள்...!
தினமொரு கொலைகள் 
தினத்  தந்தியில்...
குப்பை தொட்டியில் நீதி...!
உணவுக்காக 
உயிரைக்கொன்றவன்
உலகின் கடவுள்...!
எழுத்தறிவித்தவன் 
இதயம் தைக்கிறான்
ஊசியில்லா நூல்...!
அச்சாணி 
கணினி
பந்தய உலகம்...!
இதயம் சுற்றும் 
பறவை மனிதன் 
ஈகை மொழிகள்...!
பறிக்கும் போது 
பார்வை இழந்தேன் 
அழகின் சிரிப்பு...!
கட்டிய கூடு 
வெட்டிய மரங்கள் 
வேடந்தாங்கலாய் பறவைகள்...! 
மரத்தின் மானம் 
மனிதனின் சாபம் 
அழித்தல் காத்தல்...! 
காட்டில் 
தேவதை நிழல்
உயிரின் தாலாட்டு ...!
காக்கையின் கழிப்பிடம் 
கருப்பு சிலைகள்
சுதந்திரம் எங்கே..!
காற்றுக்கும்  
மரணமில்லை 
கண்கள் சாகும் வரை...!
பணத்தின் வரவு 
பாவத்தி செலவு 
ஏற்ற இறக்கங்கள்...!
சென்ற இடமெல்லாம் 
சிறப்பு
ஒன்றுடன் பூஜ்யம்...!

mhishavideo - 145