சென்ரியுவாய்த் திருக்குறள் - 61 to 70

குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

இல்வாழ்க்கையின் பேறு
விஞ்ஞானத்தை வென்ற 
பிள்ளைகள் 

தீமையில்லா நன்மையை 
உணரும் குழந்தை 
மதிப்புடன் திகழ்வார் 

அறிவும் ஆற்றலும் 
பொருந்திய பிள்ளைச்செல்வம் 
பிறப்பின் வெற்றிச்செல்வம் 

குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்.

நல்ல மகனின் 
ஜென்மப் பயன்
தாய் தந்தையின் புண்ணியம் 

ஏழு பிறவிக்கும்  
தீவினை சேராமல் இருக்க 
பழியில்லா குழந்தை பெருக

பழிக்கப்படா சேய்
துன்பம் தீண்டாப் பிறவி   
பெற்றோர் பண்பு 

குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

வினையில்லா பண்பு
தினையில்லா பொருள் 
தம் மக்களின் கடமை  

அறிஞர் கூற்று 
பொருள் அறிந்த மக்களிடம்  
கர்ம வினைச் சேராது  

நற்ச்செயல் மறவா 
பிள்ளைச் செல்வம் 
நாட்டின் பொருள்செல்வம் 

குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

அமிழ்தத்தின் சுவைக்கு ஈடு 
சிறுகை கூழ்
குழந்தையும் தெய்வமாகலாம் 

அமிழ்தத்தைவிட
தாயுக்கு தேவாமிர்தம் 
குழந்தையின் எச்சில்கூழ் 

கூழும் அமிர்தமாகும் 
குழந்தையின் 
பெற்றோருக்கு 

குறள் 65:
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

தாயின் செவிக்கு அமிழ்தம் 
உடலுக்கு காதல் 
குழந்தைகள் 

கட்டி அணைக்கும்
மழலையிடம் உள்ளது 
சிற்றின்பம் பேரின்பம் 

கோடடிச் சொலவத்திற்கு 
ஈடு  
மழலை செல்வம் 

குறள் 66:
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்

குழலும் யாழும் குடியிருக்கும் 
குழந்தையின் 
மழலை சொல்லில் 

யாழும் குழலும் இனிது 
அதனினும் தேன்
குழந்தையின் மழலை மொழி

யாழும் குழலும் இணையும் 
இன்னிசைக்கு முன் 
புரியா மழலையும் புரியும் 

குறள் 67:
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.

கற்றோர் அவை முன் 
கற்று தேறிய மகன் 
தகப்பனின் கடமை 

பிள்ளைக்கு கல்வி 
பெற்றோருக்கு நன்றி 
புகழில் வையகம்

கடமை  உலகில் 
கல்வி கண் 
திறவுகோல் தந்தை 

குறள் 68:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

தகப்பன் மடையன் 
பிள்ளை விஞ்ஞானி 
பாராட்டும் உலகம்
விவசாயின் மகன் 
விண்கலத்தின் தலைவன் 
இன்பத்தில் உலகம் 

வான்கொண்ட புகழில்
வாழும் உயிர் இனிக்கிறது
தகப்பன் பிள்ளை அறிவாற்றலில்

குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய். 

கர்ணனை ஈன்ற தாய் 
காலத்தால் அழியாத 
புகழை பெறுகிறாள் 
குறள் 70:
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல். 
ஒழுக்கம் அறிவு 
போற்றும் பண்புடைய மகன் 
தந்தைக்கு  கைம்மாறு 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145