| குறள் 71: |
| அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் |
| புன்கணீர் பூசல் தரும். |
| ஹிஷாலீ சென்ரியு |
| இதயத் தாழ்பாள் |
| மெருகேறும் நேரம் |
| அன்பின் வாசல் கண்ணீராகும் |
| வானளவு துன்பம் |
| கடுகளவும் இன்பம் |
| அடக்கம் கண்ணீரில் |
| குறள் 72: |
| அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் |
| என்பும் உரியர் பிறர்க்கு. |
| ஹிஷாலீ சென்ரியு |
| உடல் பொருள் ஆவி |
| அற்பணிக்கும் பிறப்பு |
| உயிரின் சிறப்பு |
| குறள் 73: |
| அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு |
| என்போடு இயைந்த தொடர்பு. |
| ஹிஷாலீ சென்ரியு |
| அன்பின் பயன் |
| மனிதனை மனிதன் |
| மதித்து வாழ்தல் |
| குறள் 74: |
| அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் |
| நண்பு என்னும் நாடாச் சிறப்பு. |
| ஹிஷாலீ சென்ரியு |
| ஈனும் பிறவிக்கு |
| ஈடான ஒன்று |
| நட்புடன் கூடிய அன்பே |
| குறள் 75: |
| அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து |
| இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
| ஹிஷாலீ சென்ரியு |
| ஆன்மாவின் |
| நற்பயன் |
| அன்பு கலந்த இல்வாழ்க்கை |
சென்ரியுவாய்த் திருக்குறள் - 71 to 75
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
விடுகதை போல் உள்ளது நம் காதல் விடை தருமோ விதி இல்லை விலகிடுமோ நம் விழி இருந்தும் நிலைத் தடுமாறாமல் நினைத்திருக்கிற...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...