நெல்லை ஹெல்த்கேர் இதழ் நவம்பர் 2016 !

பட்டாசு ஆலை விபத்து 
ராக்கெட் வேகத்தில் 
உரிமையாளர் தலைமறைவு ...!

கவிச்சூரியன் நவம்பர் 2016 ...!

மரம் வெட்டிய களைப்பு 
நிழலை தேடுகிறது 
மனம் ...!
செடியின் வாசத்தை 
காம்போடு கிள்ளி எரிகிறது 
விரல்கள் ...!
தத்தெடுக்கின்ற பெயரில் 
அனாதையாக 
கிராமங்கள் ...!
தொடு வானம் 
மெல்ல கண் சிமிட்டுகிறது 
நட்சத்திரங்கள் ...!

ராசியால - ராசியான குடும்பம்

Diwali, Diwali 2016, Diwali puja, Diwali vidhi, Diwali puja timing, Diwali date, Diwali festival, Diwali muhurat, Diwali muhurat 2016, upcoming festival, festival 2016, indian express

அம்மா நாளைக்கு தீபாவளி பாட்டி தாத்தாவை பார்க்க போகலாமா ம்ம்ம் போகலாமே உங்க அப்பா என்ன செய்றாரு கொஞ்சம் கூப்பிடு அப்பா அப்பா அம்மா கூப்பிடுறாங்க இங்க வருவீங்களாம்,அப்பா வந்தார் என்னமா சொல்லு என்றார் 

நான் உங்க அம்மாவை பார்க்க வரவில்லை நீங்களும் உங்க பிள்ளையும் போயிட்டு வாங்க என்றதும்

ஆனந்தத்தில் அப்பாவும் மகளும் புதுத்துணியும் இனிப்பும் எடுத்துவைத்து கிளம்பிப் போனார்கள் 

அங்கு பாட்டி தாத்தாவை கண்டதும் கட்டி அனைத்து முத்தமிட்டாள் பேத்தி பின் பாட்டியிடம் பாட்டி பாட்டி நீங்களும் தாத்தாவும் வீட்டை விட்டு இந்த முதியோர் காப்பகத்திற்கு வந்ததிலிருந்து அம்மா அப்பா இருவருமே ஒரே சண்டை ஒரே கெட்டதாதான் நடக்குது பெரியப்பா பெரியம்மாவும் தனி குடுத்தனம் போய்ட்டாங்க அண்ணனும் அக்காவும் இல்லாம நான் மட்டும் தனியா இருக்கேன் முன்னெல்லாம் நாம கூட்டுக் குடும்பமா இருக்கும் போது எவ்வளவு சந்தோசமா இருந்தோம் அந்த சந்தோசம் இப்ப இல்லையே பாட்டி ஏன்?

பாட்டி சொன்னார் அது ஒன்றும் இல்லை நாம கூட்டுக் குடும்பமா இருக்கும் போது 12 ராசிகளும் ஒண்ணா நம்மளோடையே  குடித்தனம் பண்ணியது ஒருவருக்கு ஒரு ராசி கெட்டதைக் கொடுத்தாலும் இன்னொருவருக்கு இருக்கும் நல்ல ராசி நல்லதைக் கொடுக்கும் அப்போது குடும்பத்தில் இருக்கும் நல்லது கெட்டது சமநிலையாகி சந்தோஷம் பொங்கி பெருகியது இப்போது எல்லோரும் தனித்தனியாக பிரிந்ததால் எல்லா கேட்டதும் தனித்தனியாக இருந்து ஆட்டிப்படைக்கிறது என்று கண்ணீர் விட்டாள் பாட்டி 

ஓ அப்படியா பாட்டி நல்லது இந்த உண்மையை நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சொல்லி புரியவைத்து அடுத்த தீபாவளிக்குள் எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ முயற்சிக்கிறேன்...
நன்றி பாட்டி ,

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .



தாய் தந்தையரின் கனவு ...!



ஊரு விட்டு ஊரு போய் 
உல்லாசமாக வெடித்து சிதறும் 
பட்டாசு வெளிச்சத்தில் 
இருண்டு கிடக்கிறது 
மனித வெடிகுண்டாக வெடித்து சிதறிய 
தாய் தந்தையரின் கனவு ...!

நதிக்கரை_ஞாபகங்கள் ...!

லேசான தென்றல் காற்று 
சிலுசிலுக்கும் மீன்கள் கூட்டம் 
நடு நடுவே மெல்ல சிரிக்கும் தாமரை 
நூலறுந்த தூக்கணாங் குருவி கூடு 
அதை தாங்கி பிடிக்கும் கொடி மலர்கள் 
மின்னும் கோவைப் பழம், மிதந்து வரும் நீர் கோழி 
அத்தனையும் மறந்து நானிசைக்கும் 
ஆலமரக் குழலோசையில் நீ அழைத்த குயிலோசை 
உருவம் மறந்து நிழலையே வெறித்து பார்க்கும் கொக்கு 
கூடவே குதித்து விளையாடும் தவளை 
இதோ பாம்பென்று நானுரைக்க பதறிக் குதித்து 
நீயோட பட்டாம் பூச்சிகள் எல்லாம் 
சுற்றி வளைத்து சுத்திப்போட்ட அழகை நினைக்கையில்
 நிறுத்தற் குறியான கண்ணீரைக் கண்டு 
அடையவரும் பறவை கூட்டம் கீச் கீச் என்று கூச்சலிட 
அலறி எழுந்தேன் ,அந்தி சாய்ந்தது 
அழகு முலாம் பூசியது போல் 
ஆதவன் தன்னை மறைத்து 
அரும்பும் முத்து சுடராய் நிலவொளி வந்து 
முன்னும் பின்னும் உரசுகையில் உயிரே போகுதே 
நாம் உடனிருந்த நாட்களை நினைக்கையில் 
அத்தனையும் மறந்து அமைதியாக 
உறங்குகிறாய் நதிக்கரையில் ...!

காவேரியா இல்லை காவு வெறியா ?

காவேரியை 
இழுத்துப் பிடித்து 
கற்பழிக்கும் ஊடகங்களே
நிறுத்துங்கள் ...

கதவைப் பூட்டி 
சாவியை தொலைத்த 
தமிழினமல்லநாங்கள்
கடன் வாங்கி விவசாயம் 
செய்ய

கார் மேகம் இருக்கும் வரை
கருணை பொழிந்துக் கொண்டே 
தான் இருக்கும் என்பதை
மறந்து விட்டாயோ
நில்....

கல்லணையின் ஒவ்வொரு
உயர்வுக்கும் ஒரு தமிழனின் 
உயிர் பழிகொடுத்ததை 
நினைவு கூர்ந்தால் போதும்

கள்ளச் சாவிப் போட்டு
ஓளித்து வைத்திருக்கும்
கல்லணையை திறக்கும்
சக்தி என் தமிழ் தாயிக்குண்டு
என்பதை மறந்து விடாதே

பரணி இதழ் - ஜூலை - செப்டம்பர் 2016

துவண்ட பொழுதெல்லாம்
உணர்த்திவிட்டு செல்கிறது 
மெளனம்...!
மையிருட்டு
வாசிக்க முடியாமல் திரும்புகிறது 
மின்மினி பூச்சிகள் ...!

நானும் நீயும்  ...!

Image result for நானும் நீயும்

நானும் நீயும் 
சேர்ந்து பயணித்த பாதையைக் 
கடக்கும் தருணத்தில் 
சட்டெனப் பூத்த
பழைய ஞானங்களை 
பறித்து எடுத்து வைத்துக்கொள்ள 
போகும் போது தான் 
புரிந்தது பக்கத்தில் 
நீ இல்லையே என்று ...!

கவிச்சூரியன் அக்டோபர் 2016 ...!

கடுமையான குளிர் 
போர்த்திக் கொள்கிறது 
மேகம் ...!
காட்டுக் கோயில்
பூசாரியானான்
ஆடு மேய்க்கும் சிறுவன் ...!
மண் குதிரை
ஏறி இறங்கியது
சிறுவர் மனசு ....!
மலையடிவாரம் 
கரைந்து கொண்டிருக்கிறது 
விவசாயின் கனவு ...!

தமிழ் வாசல் - அக்டோபர் 2016 !

கொத்தி கொத்தி
குளத்தை நீளமாக்குகிறது
கொக்கு ....!
கைமணம் மாறாத படையல்
ருசிபார்க்கிறது
அமாவாசை ...!
பழையக் கோட்டை
தவமிருக்கும்
சிலந்திகள் ....!
நினைவை தள்ளிவைத்து
கனவை தேடுகிறது
எதிர்காலம் ....!
பைத்தியக்காரனின் வயிற்றை 
சுத்தம் செய்தது 
எச்சில் இலை ...!
வரப்பு சண்டை 
மெலிந்துகொண்டே போகிறது 
காணி நிலம் ...!
கரிசல் காடு
நடவு பார்க்கிறது
மயில் இறகு ....!
மஞ்சள் காமாலை
விலை கொடுத்தது
மஞ்சள் கயிறு ...!
காது குத்து திருவிழா
காதறுந்த நிலையில்
குலதெய்வம் ...!
கொடி ஏற்றம் 
இறங்குகிறது 
ஊழல் ...!

mhishavideo - 145