|
லேசான
தென்றல் காற்று
|
| சிலுசிலுக்கும் மீன்கள் கூட்டம் |
| நடு நடுவே மெல்ல சிரிக்கும் தாமரை |
| நூலறுந்த தூக்கணாங் குருவி கூடு |
| அதை தாங்கி பிடிக்கும் கொடி மலர்கள் |
| மின்னும் கோவைப் பழம், மிதந்து வரும் நீர் கோழி |
| அத்தனையும் மறந்து நானிசைக்கும் |
| ஆலமரக் குழலோசையில் நீ அழைத்த குயிலோசை |
| உருவம் மறந்து நிழலையே வெறித்து பார்க்கும் கொக்கு |
| கூடவே குதித்து விளையாடும் தவளை |
| இதோ பாம்பென்று நானுரைக்க பதறிக் குதித்து |
| நீயோட பட்டாம் பூச்சிகள் எல்லாம் |
| சுற்றி வளைத்து சுத்திப்போட்ட அழகை நினைக்கையில் |
| நிறுத்தற் குறியான கண்ணீரைக் கண்டு |
| அடையவரும் பறவை கூட்டம் கீச் கீச் என்று கூச்சலிட |
| அலறி எழுந்தேன் ,அந்தி சாய்ந்தது |
| அழகு முலாம் பூசியது போல் |
| ஆதவன் தன்னை மறைத்து |
| அரும்பும் முத்து சுடராய் நிலவொளி வந்து |
| முன்னும் பின்னும் உரசுகையில் உயிரே போகுதே |
| நாம் உடனிருந்த நாட்களை நினைக்கையில் |
| அத்தனையும் மறந்து அமைதியாக |
| உறங்குகிறாய் நதிக்கரையில் ...! |
நதிக்கரை_ஞாபகங்கள் ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...