| கொத்தி கொத்தி |
| குளத்தை நீளமாக்குகிறது |
| கொக்கு ....! |
| கைமணம் மாறாத படையல் |
| ருசிபார்க்கிறது |
| அமாவாசை ...! |
| பழையக் கோட்டை |
| தவமிருக்கும் |
| சிலந்திகள் ....! |
| நினைவை தள்ளிவைத்து |
| கனவை தேடுகிறது |
| எதிர்காலம் ....! |
| பைத்தியக்காரனின் வயிற்றை |
| சுத்தம் செய்தது |
| எச்சில் இலை ...! |
| வரப்பு சண்டை |
| மெலிந்துகொண்டே போகிறது |
| காணி நிலம் ...! |
| கரிசல் காடு |
| நடவு பார்க்கிறது |
| மயில் இறகு ....! |
| மஞ்சள் காமாலை |
| விலை கொடுத்தது |
| மஞ்சள் கயிறு ...! |
| காது குத்து திருவிழா |
| காதறுந்த நிலையில் |
| குலதெய்வம் ...! |
| கொடி ஏற்றம் |
| இறங்குகிறது |
| ஊழல் ...! |
தமிழ் வாசல் - அக்டோபர் 2016 !
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இதயம் பறக்கவில்லை இடம் பெயர் (கிறது )ந்தது காதல் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...