ஹைக்கூக்கள் ...!

கழுவி கவிழ்த்த பாத்திரம்
நிரம்பி வழிகிறது
தாய்வீட்டு சீதனம்.....!
அலையின் பாரத்தை 
இறக்கி வைக்கிறது 
கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...!
லாரியின் பின்னால் 
ஓடுகிறது 
மணலாறு !
ராமர் பானம் 
வானவில்லாக மாறும் 
சீதை !
தொடும் வானம் 
தாகம் தணிக்க .
மெல்ல கொத்தியது பறவை ...!

2 comments:

  1. சிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன்  மண் விழுந்தது மூடநம்பிக்கையில்