கடவுள் மாற்றமோ ....!



சரும மாற்றம்
உருவ மாற்றம்
கண்ட பொழுதிலும்

காதல் மாற்றம் மட்டும்
கடுகளவு கூட 
மாறவில்லையே
ஏன் ....?

இதற்கு பெயர் தான் 
கடவுள்
மாற்றமோ ....!

நீயோ நீயோ ...!



மல்லியும் கனகாம்பரமும் 
சேர்ந்து மணக்கையில் 
முகர்ந்து பார்த்து 
கூச்சலிட்டேன் 
முத்தமிட்டது நீயோ என்று
உரசும் மஞ்சள் தான் அரச்சு 
உஷ்ணம் தனை நான் மறக்க 
உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம் 
வருடிவிட்ட தென்றலாய் 
புல்லரிக்க வைத்தது நீயோ என்று
ஏழு கடல் தாண்டி 
எல்லை மீறாது 
நினைவுகளை தட்டியெழுப்பி 
விட்டு செல்லும் 
செல்போன் சிணுங்களின் மூலம் 
ஏமாற்றி போனது நீயோ என்று
இன்று வரை 
நீயோ நீயோ என்று 
எனக்கான 
ஏக்கங்கள் குறைந்து கொண்டே 
போனாலும்
உனக்கான வாசிப்புகள் 
அதிகரித்துக் கொண்டு 
தான் இருக்கிறது ...!

என்னிடமிருந்து ...!

தினமும் ஏதாவதொரு 
தண்டனை கொடுக்க 
வேண்டுமென்று 
கவிதை புனைகிறேன்
புனைந்த கவிதையையே 
பனையமாக வைத்து 
தப்பித்துக்கொள்கிறாய் 
என்னிடமிருந்து ...!

இனிப்பான காதல் ...!



கசப்புகளை மட்டுமே 
உட்கொண்டு 
என் இதயத்தில் 
சர்க்கரை நோய் வருவதற்கு 
காரணம் இனிப்பான 
உன் காதலோ...!

மதியார் காதலை நினையாதே ?



நீ 
என்னை
தூக்கி எறிந்துவிட்ட போதும் 
அவ்வப்போது 
தூக்கி நிறுத்தும்
நினைவுகளுக்கு என்ன தெரியும் 
மதியார் காதலை நினையாதே என்று ...!


ஆழமான கவிதை ...!

அவளின் நினைவுகள் 
என்
இதயத்தில் 
சூடு வைக்கும் போதெல்லாம் 
சுருக்கமின்றி பிறக்கிறது 
ஆழமான கவிதை ...!

தமிழ் வாசல் - ஜூலை 2016 !

கூறுவைத்த பூவில் 
கொட்டிக்கிடக்கிறது 
கணக்கில்லா வாசம் ...!
நாற்காலிக்குள்
ஓடி ஒளிந்து கொண்டது 
ரத்தம் குடித்த மூட்டை பூச்சி ...!
கோரைப் புல் 
மினுமினுக்கின்றது...
பனித்துளிகள் !
காலத்தின் விதியை 
எண்ணிக்கொண்டிருக்கும்
கைரேகை ஜோசியன் ...!
வர்த்தகத்திலும் வணிகத்திலும்
கொட்டிக்கிடக்கிறது 
கணித வளம் ...!
காற்றின் உராய்வில் 
மெய்சிலிர்க்கும் 
போதிமரங்கள் !
அடிமரத்திலிருந்து 
எட்டிப் பார்க்கிறது 
ஒரு துளிர் !
உடைந்த பாலம் 
ஒப்பனை செய்யும் 
தவளைகள் !
கோபுர தரிசனம் கிடைத்தும் 
யாசகம் கேட்கும்  
காம்பறுந்த பூக்கள் ...!
கூடைக்குள் பழங்கள் 
முகர்ந்து திரும்பும்... 
பறவைகள் ...!
ரசித்துக்கொண்டிருந்தேன்
பசுந்தளிரை நசுக்கியபடி 
காட்டெருமை!

கீற்று மின்னிதழ் - வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016

rainbow in forest

வண்ணப் புடவையாக வானவில் 
உடுத்திக்கொண்டாள் 
வனதேவதை !
ஆழ்துளை கிணற்றில் 
நீச்சலடிக்கிறது 
நிலா !
அழுது முடிப்பதற்குள் 
சமாதானமடைந்து விட்டேன் 
அம்மாவின் தாலாட்டு ...!
மகுடம் சூட்டிய 
பனி மழை 
உருகிவழியும் ஆறு 
தட்டிகொடுத்த நெற் கதிர்கள் 
வளருவதே இல்லை 
விவசாயி !
பிச்சைக்காரன் தட்டில் 
நிரம்பிவழியுது  
பாவமூட்டை !
குளத்தில் நிலா 
தூண்டில் போடுகிறது 
கடிகார முள் !

முதல் மரியாதை ...!

எத்தனையோ 
கதாபாத்திரங்களை 
கடந்து வந்த 
எனக்கு 
என்னுடைய கதாப்பாத்திரம் 
எதுவென்று 
உணரவைத்தது 
அந்த முதல் மரியாதை ...!

 இன்னொரு தாய் ....!

வயதானாலும் 
இளமையாய் தோன்றும் 
காதலை 
சினிமாவில் மட்டுமே 
என்பதை மாற்றி 
இளமையிலேயே முதுமையின் 
காதலை உணர வைப்பவள்  
இன்னொரு தாய்  ....!

ஞாபகத்தோடு சேர்த்து வயதும் ....!

மறக்க வேண்டும் 
என்று 
ஒவ்வொரு படியாக 
இறங்குகிறேன் 
ஏறிக் கொண்டே போகிறது 
ஞாபகத்தோடு சேர்த்து 
என் வயதும்  ....!

இன்றைய நாளிதழ் ...!

கறந்த பாலை விட 
சுத்தமான என் 
காதலை உன்னிடம் 
சொல்வதற்குள் 
பல காரணம் சொல்லிப் 
பிரித்தது 
இன்றைய நாளிதழ் ...!

உன் காதல் ...!

திடப்பொருளாக இருந்த 
என் 
இதயத்தை 
திரவப் பொருளாக மாற்றியது 
உன் காதல் ...!

வெற்றி உன்வாசம் ...!

ஆ போட பழகும் போது 
அடிகள் பல வாங்கினேன் 
அத்தனையும் 
வெற்றிப் படிகளாக மாற 
உன் வசம் தான் உள்ளது 
என்றாள்  அம்மா ....
நடை பழகும் போது 
விழுந்து விழுந்து அழுதேன் 
இந்த தழும்புகள் எல்லாம் 
ஓர் நாள் இரும்பாகும் 
என்பதை
உணர்த்தினார் அப்பா 
இரண்டையும் இன்று 
இணைத்துக் காட்டினேன் 
வெற்றிக்கும் தோல்விக்கும் 
இடையில் இருப்பது 
வெறும் 
இயலாமையே என்று ...!

"இளமையில் வறுமை"

பாவாடை சட்டையிலிருந்து 
தாவணிக்கு மாறினேன் 
அக்காவின் பழமை எனக்கு 
புதுமையாக காட்சியளித்தது 
கிழிந்த கோனார் நோட்ஸ்யை  
மலிந்த விலையில் வாங்கி 
பொழிந்த முகத்துடன் படிக்கையில் 
அங்கே குறித்துவைத்திருந்த குறிப்புகள் 
முக்கியமாக காட்சியளித்தது   
எண்ணிரண்டு வயதைக் கடந்து 
எங்க ஊர் கல்லூரிக்கு செல்கையில் 
பக்கத்து வீட்டு அக்காவின் 
பழைய சுடிதார்கள் எனக்கு 
சரியாக பொருந்தும் போது 
இன்னொரு அக்காவாக காட்சியளித்தது  
இரவல் படிப்பை முடித்து 
இளைப்பாறும் தருணத்தில் 
இறந்த அப்பாவின் வேலை 
இரவலாக கிடைத்தப் போது 
இன்னும் இனிக்கிறது  
வறுமையை விட வாலிபம் 
மிகவும் கொடுமையை என்று  ...!

கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூலை 2016.


அடுத்தடுத்து விழும் இலை 
சுமையானது 
மழை நீர் ...!
முகம் கழுவாமல் 
அகம் மலர்கிறது 
நீர் நிலைகளில் நிலா ...!
பூக்கும் முன் 
வாசம் வீசி செல்லும் 
மொட்டுகள் ...!
சுருங்கிய முகம் 
விரிந்து கிடக்கிறது 
முதுமையின் காதல் !
சொத்து குவிப்பு வழக்கு
சட்டப்படி குவிகிறது
சொத்துக்கள் ...!

mhishavideo - 145