| கூறுவைத்த பூவில் |
| கொட்டிக்கிடக்கிறது |
| கணக்கில்லா வாசம் ...! |
| நாற்காலிக்குள் |
| ஓடி ஒளிந்து கொண்டது |
| ரத்தம் குடித்த மூட்டை பூச்சி ...! |
| கோரைப் புல் |
| மினுமினுக்கின்றது... |
| பனித்துளிகள் ! |
| காலத்தின் விதியை |
| எண்ணிக்கொண்டிருக்கும் |
| கைரேகை ஜோசியன் ...! |
| வர்த்தகத்திலும் வணிகத்திலும் |
| கொட்டிக்கிடக்கிறது |
| கணித வளம் ...! |
| காற்றின் உராய்வில் |
| மெய்சிலிர்க்கும் |
| போதிமரங்கள் ! |
| அடிமரத்திலிருந்து |
| எட்டிப் பார்க்கிறது |
| ஒரு துளிர் ! |
| உடைந்த பாலம் |
| ஒப்பனை செய்யும் |
| தவளைகள் ! |
| கோபுர தரிசனம் கிடைத்தும் |
| யாசகம் கேட்கும் |
| காம்பறுந்த பூக்கள் ...! |
| கூடைக்குள் பழங்கள் |
| முகர்ந்து திரும்பும்... |
| பறவைகள் ...! |
| ரசித்துக்கொண்டிருந்தேன் |
| பசுந்தளிரை நசுக்கியபடி |
| காட்டெருமை! |
தமிழ் வாசல் - ஜூலை 2016 !
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
சிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete