ஹிஷாலீ - ஹைக்கூ ...!













துரத்தும்  கொடுமைகள் 
ஓய்வெடுக்கிறது 
கவிதையின் நிழலில்


கைரேகைகள் 
அழிப்பதில்லை வியர்வை
விரதத்தில் விதி 


படுத்துறங்கும் கடலில் 
பன்னிரண்டு வண்ணங்கள் 
விழித்தது  சூரியன் 


ருசி மறக்க 
பசியை தேடினான் 
காகித இலை 


நடைப் பழகும் 
சூரியன் 
நழுவியது காலம் 



கனவும் 
பணமானது 
பூர்வ ஜென்ம கல்லூரியில் 

ஹிஷாலீ - ஹைக்கூ ...!



வருகை பதிவேட்டில் 
நிலா 
வரட்டுமா என்றது காலம் 




அலையின் கனவு 
கரையில்
அழித்தது கால்கள் 




ஒருவன் முன்னேற்றத்தில் 
உயிர் கொள்ளியானது 
ஊட்டச்சத்து பானங்கள் 




வாழ்ந்துக் கெட்டவனுக்கு 
வாய்க்கு ருசியானது 
ஆறடி மண் ...!



தளர்ந்த கிளைகளுக்கு 
கண்ணீர் 
முதியோர் இல்லம் 



இருட்டைத் துறந்தும் 
இன்பம் கிடைக்கவில்லை 
தோல்விகள் ...!



ஹைக்கூ - காதல்...!




ஏங்கிய காலம் தூங்கிவிட்டது 
ஏக்கங்கள் தூங்கவில்லை 
விழித்திரையில் காதல் ...!




அழகிழந்த கூட்டில்
அன்னபானம் 
ஞானிகள் ...!

உண்மையான காதல் ...!



கத்தை கத்தையாய் 

பூத்தாலும் 


ஒற்றை மலர் வாசம் போல் 


ஒரே முறை 


உதிப்பது தான் 


உண்மையான காதல் ...!




கலியுகம்...!


444667029index.jpg

கலியுகம் கற்பலிப்புயுகமாய்
கடந்துகொண்டே வருகிறது 
காரணம் கேட்டால் 
கவர்மென்ட் சரியில்லை 
என்கிறார்கள் ...

சற்று யோசியுங்கள் 
உன்ன உணவு 
உடுக்க உடை 
இருக்க இடம் 
இன்பமாய் வாழ பணம் 

இவற்றையெல்லாம் தானே 
தேர்ந்தெடுக்கிறோம் 
தவறை மட்டும் அடுத்தவர் மீது 
திணிப்பது சரியா ?
சிந்தியுங்கள் !

சிற்றின்ப பாவத்தை 
சிறைப்படுத்துங்கள் 

பேரின்ப ஒழுக்கத்தை 
நடைமுறையாக்குங்கள் 

நாடும் செழிக்கும் 
நாமும் செழிப்போம் ...!




காதலர் தினம் ...!






சாதி இரண்டோழிந்து 

சமத்துவ மதம் பிறந்து 

சாற்றும் காதல் 

சரித்திரம் படைக்கும் 


காதலர்களே சாதல் வரை 

காதல் வாழ்வதால் 


மோதல் செய்வீர் மோசம் செய்யாதீர் 

கனவு கொள்வீர் கற்பை பறிக்காதீர் 


தேர்வு செய்ய கல்வி அல்ல காதல் 

தேயும் நிலவில் காயும் சூரியனைப் போல் 


விட்டுக்கொடுங்கள் 

வீழ்வது உடலாயினும் வாழ்வது 

காதலே காதலே காதலே ...!

இரத்தமின்றி யுத்தமின்றி ...!





இரத்தமின்றி 
யுத்தமின்றி 
சத்தம் செய்யும் 
காதலே ...

நித்தம் நித்தம் 
மண்ணில் வீழாமல் 
நிலவு சூரியனை கடந்து 
கனவு மாதரம் சொல்லும் 
கலியுகத்தில் 

விழிப்படம் பிடிக்கவில்லை 
விரல் தாளம் இசைக்கவில்லை 
மொழி மூச்சியில் மட்டும் 
உயிர் மூச்சாய் காத்திருக்கிறேன் 
காதலர் தினத்திற்காக ...!


தூது செல்லும் கவிதை ...!




மாதம் ஒரு முறை 
அழைக்கும் மன்மதனே 
மறந்தாயோ என்னை 

மும்மாரி பொழியும் 
மழையும் மறக்காமல்
மண்ணை வளமாக்கியது 

என்னை வளமாக்கும் 
மன்னவா  உன் 
மனதின் வளம் குறைவோ 
என்னவோ என்று மருகி

மறைந்த பொருளிலும் 
மலரும் முகமாய் 
மணக்கும் காதல் மனம் 
தேடுகிறது கவிதையில் 
தூது சொல்ல ...!


காத்திருந்த காதல்...!


துடிப்புகளோடு  நடிக்கிறேன் 
துணிவில்லா கனவில் மட்டும் 

இனிப்புகளோடு வருவாயா 
இந்த காதலர் தினத்தில் 

அனுப்பிதழ்  தந்து 
அணைக்கிறேன் நிலவே 

ரோஜா மலரில் சிணுங்கும் 
காதல் ராஜா நிழலாக ...!




நரக காலம் ...!


பாறைக்கு அழகு நீர் 

பறவைக்கு அழகு வான்

இரண்டும் வற்றினால்

இறந்த காலம்

என் அன்னமே

ஈர் இதயம் வற்றினால்

நரக காலம் ...!


வறுமைக்கு வயதில்லை ...!



தட்டி விட்டேம்  
தள்ளாடும் வயதில் வரும் 
வறுமையை  - முதல் 
பல்லாடும் வாழ்க்கையில் !

அய்யோ ...
கண்ணிலடங்கா 
கண்ணீர் சொத்துக்கள் 
எண்ணிலடங்கா 
எச்சில் பருக்கைகள் 

கிழிந்த உடையில் 
கேளிக்கை பொருளாய் 
கிளையை தேடுகிறோம் 
அங்கே 

கவிஞர் கற்பனையில் 
நடிக்கும் ஹீரோக்களாய் 
கிழிந்து மடிகிறோம் 
குப்பைத் தொட்டியில் 

அங்கும் 
அவமானங்கள் தாங்காமல் 
எறிந்த புகையில் 
எழுந்து வருகிறோம் 

ஏமாற்றம் உள்ளங்கள் 
நடுவில் 
யாவரும் சாம்பல் தான்  
என்று உணர்த்த 

உணர்ந்தும் திருந்தவில்லை 
உலகம் என்றுமே ! 
ஓர் ஆச்சிரியக் குறியாய் !

முடிவில்லா ஆரம்பத்தை தேடி... !


எனக்கான இரவுகள் 

என்னிடமில்லை என்று 

எழுதிவிட்டான் இறைவன் 

இருந்தும் ...


மண்ணை முட்டி 

மரமாகும் நிழல் போல 

நிலமோடு முட்டி மோதி 

முன்னேறுகிறேன் 

முடிவில்லா ஆரம்பத்தை தேடி ...!



பொங்கல் ஹைக்கூக்கள்



சர்க்கரை நோயாளிக்கு 

அக்கறை சொன்னது 

பொங்கல்....!


இனிப்பு ராணிக்கு

பட்டாபிஷேகம்


பொங்கல்...!



ஒரு மதக் கிளையிலே 

இரு மதக் கொண்டாட்டம் 

பொங்கல் விடுமுறை...!






mhishavideo - 145