தூது செல்லும் கவிதை ...!




மாதம் ஒரு முறை 
அழைக்கும் மன்மதனே 
மறந்தாயோ என்னை 

மும்மாரி பொழியும் 
மழையும் மறக்காமல்
மண்ணை வளமாக்கியது 

என்னை வளமாக்கும் 
மன்னவா  உன் 
மனதின் வளம் குறைவோ 
என்னவோ என்று மருகி

மறைந்த பொருளிலும் 
மலரும் முகமாய் 
மணக்கும் காதல் மனம் 
தேடுகிறது கவிதையில் 
தூது சொல்ல ...!


4 comments:

  1. அருமை...

    எங்கே மும்மாரி பெய்கிறது....?

    ReplyDelete
    Replies
    1. மும்மாரி பெய்யவில்லை தான் அண்ணா இருந்தும் எப்படியாவது மலை பொழிந்து மண்ணை வளம்பெற செய்கிறதே அதை தான் கூறினேன் நன்றிகள்

      Delete
  2. கவிதைகள் தூது செல்வதும் அது சாதிப்பதும் மனிதனிடமே உள்ளது.வாழ்த்துக்கள்,

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் சில பல ஒருதலைக் காதல்கள் இந்தமாதிரி கவிதையின் மூலம் வெற்றிபெறுகிறது

      தங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் அன்பு நன்றிகள் ஐயா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145