ஹிஷாலீ லிமரைக்கூ

கூடை நிறைய பூக்கள் 
கொடுப்பனை இல்லை பூக்காரிக்கு 
விதவை கோலத்தில் மகள்


பூ - ஹைக்கூ


இறுதி ஊர்வலத்தில் 
சூரியன் அணைப்பில்   
நானும் இறக்கிறேன் 
விரிந்தது மொட்டுகள் 
அழகிய தோரணம் 
இறந்தது காதல் 
அழுகும் உடலுக்கு 
வெடித்த விதைகள் 
மணக்கும் மரணம் 
ஸ்பரிசம் 
பூமகள்...!
சுதந்திரத்தில் 
ஓர் வயிற்று பூக்கள் 
வண்டிற்கு தேன் 
உலகெங்கும் 
கவிஞருக்கு மோதல் 
வேடந்தாங்கலாய்
வெற்றியில் மரணம்  
பருவ  மொட்டுக்கள்    
தாமரை பூக்கள் 
பாதை மாறியது 
மலர்ந்திருக்கிறது 
சிவப்பு விளக்கில் 
தேவாலயம் 
காற்றின் தாலாட்டில் 
மாணிக்க இதழ்களின் 
கைதியானது  சுவையை திருடியது 
மலர்கள்  மகரந்த பூக்கள் 
தீண்டும் மனங்களுக்கு  இலையின் காதல் 
முத்தமிட்ட  பூவிதழ்கள்    மலருக்கு தெரிவதில்லை 
தீயாக மனப்பான்மை இன வேற்றுமையில் 
நறுமண மலர்களுக்கு
ஆண் பெண்
தூக்குத் தண்டனை 
புரியா தோட்டத்தில் 
நாரில்    
ஆதம் ஏவாள் பூக்கள் 
பல வண்ண மலர்கள் 
ஓர் நாள் 
பாதை மாறியது 
முதல்வர் 
என்றும் சுமங்கலி
பூக்கள் 
கதம்ப மலர்களுக்கு 
தேன் பூ வண்டுக்கு 
புண்ணிய தரிசனம் 
காதல் சொல்லி தந்தது 
கடவுளின் காலடியில் 

பட்டாம்பூச்சி 
சூரியன் எரிக்க 
விடுமுறை தோட்டத்தில் 
தாமைரை சிரிக்க  வெள்ளைப் பூக்கள் 
நடனமாடியது நீர் 
கணவனை இழந்த பெண்
முள்ளின் தவம் 
எனது பெயரில்
காதலர் தினத்தில் 
எத்தனை உயிருள்ள மலர்கள் 
வரம்
நீண்ட ஆயுளில் 
ஆனந்த தாண்டவத்தில் 
சுதந்திரத்  தோட்டத்தில் 
அகிம்சை பூக்கள் 
நிரந்தரப் பூக்கள் 
இல்லறம் நல்லறம் 
தியாகிகள் வரிசையில் 
வெள்ளிக் கொலுசில் 
எனக்கு  இறந்த நாள் 
ஜதிபாடும் மல்லிகைப் பூக்கள் 
உனக்கு பிறந்த நாள் 
வெக்கத்தில் நிலா 
என்பாவம் உன் புண்ணியம் 
சிறையில் பூக்கும் 
வழியனுப்பும் 
மொட்டுக்கள் இரையாகிறது  சாலைப் பூக்கள் 
மண்ணில் …! உடன்கட்டை வரவேற்பு

சென்ரியுவாய்த் திருக்குறள்-221-225

குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


ஈகையின் இலக்கணம் 
இல்லாதவரை
இருப்பவராக்குவது 

குறள் 222:
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 

இல்லெனினும் ஈதலே நன்று.

நல்வழி பொருளைவிட 
வாழ் நாள் வரை 
வாரி வழங்குவதே சிறப்பு 

குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலனுடையான் கண்ணே யுள.


ஏழ்மையிலும் 
ஈகை செய்தால்  
இதயம் நூறாகும் 

குறள் 224:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
இன்முகங் காணும் அளவு.

இன்முகத்துடன் 
ஈகை செய்வதே 
வாழ்வில் இன்பம் 

குறள் 225:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்.

தவ வலிமையை 
வென்றது 
பிறர் பசி தீர்ப்பது 



ஹிஷாலீ ஹைக்கூ - 36


கன்று ஈன்றது
பாலூட்டவில்லை
சோறுட்டியது...!
பூக்களின் வட்ட மேஜை மாநாடு 
அமுலாக்கம்
தூக்கு தண்டனை   
எறும்பு ஊற 
பாறையும் தேயும்..
கல்லுக்குள் ஈரம்

வார்த்தை  வழிவிட 
வாழ்க்கை பயணமானது 
பணத்தில்...! 

பசி 
சுவை அறியவில்லை 
முதுமை...!



சென்ரியுவாய்த் திருக்குறள்-216-220


குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் 
நயனுடை யான்கண் படின்.

ஊரைக் காக்கும் 
அச்சையக் கனி 
ஈ.ர நெஞ்சம் 


குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.



வலியவருக்கு உதவினால் 
தலைமுறை கிளையும் 
மருந்தாகும்

குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் 
கடனறி காட்சி யவர்.

வறுமையிலும் 
வாரி வழங்கும் கர்ணன் 
கடமை அறிவாளி

குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர 
செய்யாது அமைகலா வாறு.

உதவியால் செயலிழந்தவன்
அஞ்சினால் 
பிறவிப் பேர் வெல்லும் 

குறள் 220:
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் 
விற்றுக்கோள் தக்க துடைத்து.

கொடை விற்று 
கேடு வாங்கினான் 
உதவும் கரத்தால் 

சென்ரியுவாய்த் திருக்குறள்-211-215

குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு.


பருவம் தவறா
மழை போல் 
யாவருக்கும் உதவு 

குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

ஊனமுற்றோருக்கு 
உதவும் பொருள் 
சிறப்பு 

குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற.

உழைப்பில்ல பெற்றோருக்கு 
உதவுபவன் 
கடவுளின் மனிதன் 

குறள் 214:
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் 
செத்தாருள் வைக்கப் படும்.

உழைக்கும் சக்தியுள்ளவன்
சக்தியில்லா மக்களின் 
ஊன்று கோல் 

குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
பேரறி வாளன் திரு.

தன் நாட்டின் வளர்ச்சிக்கு  
பாடுபடுபவனின் செல்வம் 
ஊருணி போல் ஊரும் 

சென்ரியுவாய்த் திருக்குறள்-206-210

குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால 
தன்னை அடல்வேண்டா தான்.


சுழா துன்பமரிந்தவன் 
பிறர்க்குத் தீமை 
செய்யமாட்டான் 

குறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்.

கொடியபகையில் தப்பித்தவர் 
தீமை பகையால்  
அழிந்தார் 

குறள் 208:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அஇஉறைந் தற்று.

நிழல் போல் 
பின்வருவது   
தீமையின் அணிகலன் 

குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்.

மண்ணாக்கும் தீமை 
பொன்னாக்கும் 
தன்னை காதலிப்பவன் 

குறள் 210:
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்.

வழி தவறிய 
தீவினை 
கேடில்லை 



ஹிஷாலீ ஹைக்கூ - 35







அவளுக்காக வாங்கியுயிர்
அவனுக்காக தூங்கியது 
கல்லறையில்



தீண்டத்தகாதவர்
அச்சாணி 
சலுகை

வளைவு சுழிவு 
வாழ்க்கை

சுதந்திரதினம்


தேனீக்களின் கழிவு 
கர்ப்பிணிக்கு 
நல் மருந்து...!


பருத்தி தாய் 
பட்டு மனைவி 
பணத்திற்கு புருஷன் / துட்டுப் பிள்ளை 

சென்ரியுவாய்த் திருக்குறள்-201-205


குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு.
தீவினைக்கு  
அஞ்சுபவர் சான்றோர்
அஞ்சாதவர் தீயவர்
குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.
தீயினும் கொடியது 
பிறர் தீமை 
தன் நன்மை 
குறள் 203:
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல்.
வருத்தும்‌ நட்புக்கு 
தீமை செய்யாமை 
முதல் அறிவு 
குறள் 204:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் தீமை 
செய்தால் 
தன்னையே அழித்துவிடும் 
குறள் 205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
இலனாகும் மற்றும் பெயர்த்து.
வறுமையிலும் 
தீமை செய்யாதவனே 
இன்பத்தின் பணக்காரன் 

சென்ரியுவாய்த் திருக்குறள்-191-200


குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் 
எல்லாரும் எள்ளப் படும்.
வெறுப்பின் 
முதல் படி 
பயனற்ற சொல் 
குறள் 192:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது.
தீமையை விடக் கொடியது 
பலர் முன்  
பயனில்லா சொல் 
குறள் 193:
நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை.
பயனற்ற சொற்களை 
விளக்கி பேசுபவன் 
நீதியற்றவன் 
குறள் 194:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பண்பற்ற பயனை 
பலரிடமும் சொன்னால்
மகிழ்ச்சி குலையும் 
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
நீர்மை யுடையார் சொலின்.
இனிய குணம்  
கசந்த சொற்கள் 
மதிப்பில்லா நிலை 
குறள் 196:
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் 
மக்கட் பதடி யெனல்.
பயனற்ற சொல்லால் 
பயன் பெற நினைப்பவன் 
மக்களுள் பதர் 
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.
அநீதிக்கு முன் 
பயனனுற்ற சொல் 
நல் சான்றோர் 
குறள் 198:
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.
அரிய பயன்களை
பேசும் பண்புள்ளவர் 
சிறந்த அறிஞர் 
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த 
மாசறு காட்சி யவர்.
மயக்கத்திலும் 
தெளிந்த சொல் 
மாசற்ற அறிவுடையவர் 
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்.
நாவின் முப்பயன் 
பயனைற்றதை விடுத்து 
பயன் பெற பேசுதல்  

ஹிஷாலீ ஹைக்கூ - 34


கடும் பசி 
உமிழ்நீர் 
ஈறுயிர்கள்


நெற்பயிர்கள் 
பிறந்த இடத்தில் 
வீட்டுமனைகள்

ஆயுஷ் மா பவ 
அருள் பாலிக்கும் புத்தர் சிலை 
ஆயுளற்ற ஈழத் தமிழன் 

யுத்தமரியா 
புத்தன் மண்ணில் 
வீழும் ஈழம் 

புத்தர் தியானம் 
வன்முறை வரம் 
பழியில் இலங்கை 

பத்துமாதம் 
வாடகை 
டெஸ்ட் டியூப்  குழந்தை 

கல்லுக்கு பாலபிஷேகம் 
பெண்சிசுக்கு  கள்ளிப்பால் 
மானங்கெட்ட மக்கள்



சென்ரியுவாய்த் திருக்குறள்-181-190


குறள் 181:
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
துன்ப கண்ணீரை துறககும் 
இன்ப தாழ்பாள்
புறம் பேசா பண்பு 
குறள் 182:
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை.
நேரில் சிர்த்தவனை 
புறம் குத்துவது 
மனிதக்கேடு 
குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
கண்ட இடத்தில் புகழுதல்
காணா இடத்தில் பழித்தல் 
இறந்த இதம் 
குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்.
நேருக்கு நேர் 
திட்டுவது குறையல்ல 
பின் குறை கூறுவது தவறு.
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
புன்மையாற் காணப் படும்.
அறவழி பயணத்தில் 
சிருமையாவன் 
புறம் பேசும் இழியவன் 
குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 
திறன்தெரிந்து கூறப் படும்.
இவன் குறை அவன் பேச 
அவன்  குறை  இவன் பேச 
தவளை தன் வாயால் கெடும் 
குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
நட்பாடல் தேற்றா தவர்.
நட்பை வளர்க்கத் 
தெரியாதவர் நட்பு 
நாக பாம்பிற்கு சமம் 
குறள் 188:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் 
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
உயிர் நண்பனின் குறையை 
புறம் பேசி திரிந்தவன் 
அடுத்தவரை மேடைபோட்டு பேசுவான் 
குறள் 189:
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை.
இழி சொல் பேசுபவனின் 
உடல் பாவத்தை 
இப்பூமி சுமப்பது அறம் 
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
நிம்மதியான வாழ்க்கை வாழ 
பிறர் குற்றத்தை
தம் குற்றமாக போற்றுக 

mhishavideo - 145