சென்ரியுவாய்த் திருக்குறள்-201-205


குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு.
தீவினைக்கு  
அஞ்சுபவர் சான்றோர்
அஞ்சாதவர் தீயவர்
குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.
தீயினும் கொடியது 
பிறர் தீமை 
தன் நன்மை 
குறள் 203:
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல்.
வருத்தும்‌ நட்புக்கு 
தீமை செய்யாமை 
முதல் அறிவு 
குறள் 204:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் தீமை 
செய்தால் 
தன்னையே அழித்துவிடும் 
குறள் 205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
இலனாகும் மற்றும் பெயர்த்து.
வறுமையிலும் 
தீமை செய்யாதவனே 
இன்பத்தின் பணக்காரன் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...