சென்ரியுவாய்த் திருக்குறள்-221-225

குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


ஈகையின் இலக்கணம் 
இல்லாதவரை
இருப்பவராக்குவது 

குறள் 222:
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 

இல்லெனினும் ஈதலே நன்று.

நல்வழி பொருளைவிட 
வாழ் நாள் வரை 
வாரி வழங்குவதே சிறப்பு 

குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலனுடையான் கண்ணே யுள.


ஏழ்மையிலும் 
ஈகை செய்தால்  
இதயம் நூறாகும் 

குறள் 224:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
இன்முகங் காணும் அளவு.

இன்முகத்துடன் 
ஈகை செய்வதே 
வாழ்வில் இன்பம் 

குறள் 225:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்.

தவ வலிமையை 
வென்றது 
பிறர் பசி தீர்ப்பது No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)