உடையாத_நீர்க்குமிழி

Image result for நீர்க்குமிழிகள்

கங்கா புத்திரன் நினைவு பரிசுப்போட்டி: 

உடைந்தது கன்னிக்குடம் 
உடையாத நீர்க்குமிழி 
குழந்தை ....
சீம்பால் குடிக்கும் சிசுவின் 
பசிக்கு தாயின் மறு பிறவி ...
அழியா அட்சைய பாத்திரம் !
தாலாட்டு பாடும் தாயின் 
தியாகத்தில் பிறக்கும் 
தந்தையின் முதலெழுத்து ...
அள்ள அள்ள குறையாத 
அறிவு பெட்டகம் !
புது குமிழி சூட்டில் 
மழைத்துளியாய் சிரிக்கும் 
மருமகள்... தலைமுறை 
பொக்கிஷத்தின் தாய்மடி !
பேரனோ பேத்தியோ வென 
ஏங்கும் பெற்றோருக்கு 
தாத்தா பாட்டியின் சொத்து ...
உடைந்த மனதை ஊக்குவிக்கும் 
தியாகத்தின் முடிவுரை !
தளர்ந்த தாய் தந்தைக்கு 
வளர்ந்து ஆளாகும் 
மகனின் கைப்பிடிப்பு 
கடைசி யாத்திரையின் நெய்ப்பந்தம் !
மண்ணில் மக்கும் உடலும் 
சொக்கும் அழகும் என்றுமே 
உடையும் நீர்குமிழியென 
உணர்ந்தவனுக்கில்லை இவ்வுலகம் !

கைவிரல் ...!

Image result for kanneer

காதலியின் 
உருவம் வரைந்தேன் 
உயிர் கொடுத்தது 
கண்ணீர் துளிகள் 
துடைக்க முயலுகிறேன் 
இனித்தது கைவிரல் ...!

குருவிக் கூடு ...!

Image result for குருவிக் கூடு

காற்று வந்து 
குறி சொன்னதும் 
அய்யோவென 
உதிரும் கிளைக்கு 
அடைக்கலம் கொடுத்தது 
குருவிக் கூடு ...!

பக்கத்து வீட்டு ரோஜா செடி !

Image result for vaali movie

முறிந்த காதலியின் 
முகத்தை நினைவு 
கூறுகையில் 
அதிர்வில்லா "அலைபேசியா "
வருகையில்லா "வாட்ஸப்பா "
டூவிட்ட "டுவிட்டரா "
முகம் காட்டிய "பேஸ்புக்கா "
சிரித்துப் பேசிய "ஜிமெயிலா "
என பட்டி மன்றம் நடத்துவதற்குள் 
வளர்ந்து விட்டது 
பக்கத்து வீட்டு ரோஜா செடி !
முறிந்த காதலியின் 
முகத்தை நினைவு 
கூறுகையில் 
அதிர்வில்லா "அலைபேசியா "
வருகையில்லா "வாட்ஸப்பா "
டூவிட்ட "டுவிட்டரா "
முகம் காட்டிய "பேஸ்புக்கா "
சிரித்துப் பேசிய "ஜிமெயிலா "
என பட்டி மன்றம் நடத்துவதற்குள் 
வளர்ந்து விட்டது 
பக்கத்து வீட்டு ரோஜா செடி !

அருவி சிறப்பிதழ் - 2016

செடியின் வாசத்தை 
கிள்ளி வந்தது 
பறித்த மலரின் காம்பு ...!
வரப்பு இருந்த இடம் 
பரபரப்பாக பேசப்படுகிறது 
வீட்டு மனைகள் ...!
மண் குதிரை 
ஏறி இறங்கியது 
சிறுவர் மனசு ...!
தாண்டுவதற்குள் 
நீண்டுகொண்டே செல்கிறது 
வறுமை ...!
கோரைப்புல் 
மினுமினுக்கிறது 
பனித்துளி ...!

முதல் அலை ...!

Image result for கால் தடம்

முதல் அலை 
முத்தமிட்ட 
ஈரம் காய்வதற்குள் 
இழுத்து வருகிறது 
இன்னொரு பேரலையை 
அடக்கி முத்தமிடுவதற்குள் 
அழித்துவிட்டது 
எதோ ஒரு கால் தடம் ...!

விவசாயி மட்டும் ...!

Image result for விவசாயி மட்டும்
பணப் பட்டு வாடா 
பால் பாக்கெட் போடும் முன்னே 
பாங்க் வாசலில் கூட்டம் 
அன்று 
கருவில் இருக்கும் குழந்தைக்கு 
சீட் வாங்க 
வரிசையில் நின்றான் 
இன்று 
பிறந்த குழந்தைக்காக சேமித்த 
பணத்தை மாற்ற 
வரிசையில் நிற்கிறான் 
அட மதிகெட்ட சமூகமே 
ஓசிக்கும் வரிசை 
காசுக்கும் வரிசை
ஆனால் 
எந்த வாரிசுமே இல்லாமல் 
விவசாயி மட்டும் 
வரிசை வரிசையாக 
உயிரை இழக்கிறான் 

கண்ணன் பாட்டு ...!

Image result for கண்ணன் பாட்டு

கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் 
எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ 
தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை 
தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா !
எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை 
அமைதி காத்திட நீயருள்வாயோ ! என 
சொல்லி புலம்பிட வரவில்லை நான் 
சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா 
பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை 
பக்தராய் மாற்றிட மனமில்லையோ என 
கேள்வி கேட்டிட வரவில்லை நான் 
கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா 
கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் 
சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ 
எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ 
எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா 

பரிசாக கொடுக்க ....!

நினைவையெல்லாம் 
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் 
நம் பதிவு திருமணமன்று 
பரிசாக கொடுக்க ....
பயனளிக்காமலே பயன் பெற்றது 
பக்கத்து வீட்டு பெண்ணுடன் ...!

தமிழ் வாசல் - நவம்பர் 2016 !

புகை மூட்டம்
நடுக்கத்துடன் 
இளங்குஞ்சு ...!
வரப்பு இருந்த இடம் 
பரபரப்பாக பேசப்படுகிறது 
வீட்டு மனைகள் ...!
கசக்கி எறிந்த குப்பையில் 
சிரிக்கிறது
அழகு ஓவியம்...! 
அளவற்ற உலகம்
அளந்தே வைத்தான்
வயிற்றை ....! 
காட்சி தரும் கடவுள்
ஆசி வழங்கும் பிச்சைக்காரன்
கட்டண சலுகை ...!
செடியின் வாசத்தை
கிள்ளி வந்தது 
பறித்த மலரின் காம்பு.' 
கதவுகளற்ற வாசல் 
மூடிச் செல்கிறது 
மனஅழுத்தம்...!
சாலை வியாபாரிக்கு
வாசம் வீசுகிறது
காகித பூ ...!

எங்க குல தெய்வமே ...!

Image result

குலசாமி திருவிழா இங்கே 
கூடியிருப்போருக்கு ஓர் விழா 
வானம் படியா போனவுங்களையும் 
வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா 
மண்ணும் பொண்ணாக 
மக்கள் பஞ்சம் காணாது 
நின்னு நிதானமாய் 
நொருப்பு பந்தம் கைபுடிச்சி 
வேட்டைக்கு போய் வரும் 
வீரகுல கருப்பனே .. உனக்கு 
உண்ணும் படையலிட்டு 
உருமி மேளம் குலவையிட்டு 
கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை 
காத்து நிற்கும் கருப்பனே 
நல்வாக்கு சொல்லுமையா  
வெள்ளாட்டம் குட்டி அடிச்சு   
ஓலப்பாயில் சோறு குவிச்சு 
எல்லைக் காத்த அய்யனாருக்கு 
எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு 
உண்ணா விரதமிருந்து 
ஊருக்கே பந்தியிட்டு 
ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து  
கரகாட்டம் ஒயிலாட்டமென 
கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை 
காக்கும் மாடனே உனக்கு 
காவு கொடுக்கும் சாமத்துல 
குறி கேட்க வந்தோமையா எங்கள்   
குறையெல்லாம் தீர்த்துவையும் 
எங்க குல தெய்வமே ...!

ஞாபகம் ...!

உனக்கும் எனக்கும் 
நடந்த சூர சம்ஹாரத்தில் 
காதல் என்ற வாழ்க்கை 
மட்டும் தான் அழிந்தது 
ஆனால்இன்னும் 
உயிர் பெற்றுக்கு கொண்டே தான் 
இருக்கிறது ஞாபகம்   ...!

சென்ரியு,


தாண்டுவதற்குள் 
நீண்டு கொண்டே செல்கிறது 
வறுமை ...!

mhishavideo - 145