![]() கங்கா புத்திரன் நினைவு பரிசுப்போட்டி: |
உடைந்தது கன்னிக்குடம் |
உடையாத நீர்க்குமிழி |
குழந்தை .... |
சீம்பால்
குடிக்கும் சிசுவின்
|
பசிக்கு தாயின் மறு பிறவி ... |
அழியா அட்சைய பாத்திரம் ! |
தாலாட்டு பாடும் தாயின் |
தியாகத்தில் பிறக்கும் |
தந்தையின் முதலெழுத்து ... |
அள்ள அள்ள குறையாத |
அறிவு பெட்டகம் ! |
புது குமிழி சூட்டில் |
மழைத்துளியாய் சிரிக்கும் |
மருமகள்... தலைமுறை |
பொக்கிஷத்தின் தாய்மடி ! |
பேரனோ பேத்தியோ வென |
ஏங்கும் பெற்றோருக்கு |
தாத்தா பாட்டியின் சொத்து ... |
உடைந்த மனதை ஊக்குவிக்கும் |
தியாகத்தின் முடிவுரை ! |
தளர்ந்த தாய் தந்தைக்கு |
வளர்ந்து ஆளாகும் |
மகனின் கைப்பிடிப்பு |
கடைசி யாத்திரையின் நெய்ப்பந்தம் ! |
மண்ணில் மக்கும் உடலும் |
சொக்கும் அழகும் என்றுமே |
உடையும் நீர்குமிழியென |
உணர்ந்தவனுக்கில்லை இவ்வுலகம் ! |
உடையாத_நீர்க்குமிழி
Labels:
போட்டிகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...