கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் |
| எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ |
| தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை |
| தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா ! |
| எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை |
| அமைதி காத்திட நீயருள்வாயோ ! என |
| சொல்லி புலம்பிட வரவில்லை நான் |
| சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா |
| பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை |
| பக்தராய் மாற்றிட மனமில்லையோ என |
| கேள்வி கேட்டிட வரவில்லை நான் |
| கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா |
| கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் |
| சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ |
| எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ |
| எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா |
கண்ணன் பாட்டு ...!
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...