![]() குலசாமி திருவிழா இங்கே |
| கூடியிருப்போருக்கு ஓர் விழா |
| வானம் படியா போனவுங்களையும் |
| வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா |
| மண்ணும் பொண்ணாக |
| மக்கள் பஞ்சம் காணாது |
| நின்னு நிதானமாய் |
| நொருப்பு பந்தம் கைபுடிச்சி |
| வேட்டைக்கு போய் வரும் |
| வீரகுல கருப்பனே .. உனக்கு |
| உண்ணும் படையலிட்டு |
| உருமி மேளம் குலவையிட்டு |
| கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை |
| காத்து நிற்கும் கருப்பனே |
| நல்வாக்கு சொல்லுமையா |
| வெள்ளாட்டம் குட்டி அடிச்சு |
| ஓலப்பாயில் சோறு குவிச்சு |
| எல்லைக் காத்த அய்யனாருக்கு |
| எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு |
| உண்ணா விரதமிருந்து |
| ஊருக்கே பந்தியிட்டு |
| ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து |
| கரகாட்டம் ஒயிலாட்டமென |
| கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை |
| காக்கும் மாடனே உனக்கு |
| காவு கொடுக்கும் சாமத்துல |
| குறி கேட்க வந்தோமையா எங்கள் |
| குறையெல்லாம் தீர்த்துவையும் |
| எங்க குல தெய்வமே ...! |
எங்க குல தெய்வமே ...!
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...