ஹைக்கூக்கள் ...!

கழுவி கவிழ்த்த பாத்திரம்
நிரம்பி வழிகிறது
தாய்வீட்டு சீதனம்.....!
அலையின் பாரத்தை 
இறக்கி வைக்கிறது 
கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...!
லாரியின் பின்னால் 
ஓடுகிறது 
மணலாறு !
ராமர் பானம் 
வானவில்லாக மாறும் 
சீதை !
தொடும் வானம் 
தாகம் தணிக்க .
மெல்ல கொத்தியது பறவை ...!

ஹைக்கூக்கள் ...!

கர்ப்பக்கிரகம்
தாயைத் தேடும்
கேவிலி சத்தம்…!
மசூதியை தேடி 
மகாலட்சுமி மகன் 
ஏசுதாஸ்...!
ஈர நிலம் தேடி 
அலைகிறது 
வரகு விதை ...!
பரம்பரை பரம்பரையாக 
கூடுவிட்டு கூடு பாயுது 
வறுமையும் பசியும் ...!
முன் நீளும் நிழல்
பொய்த்துப்போனது...
உலக அழகி மனம் ...!
களையின் நிழலில் 
துளிர்விடுகிறது
வெட்டி வேர்
வில்லேந்திய ராமன்
அகப்பட்டுவிட்டான்
ராவணன் ...!

பூங்காற்று
கட்டி இழுக்கிறது
கன மழை .....!ஹைக்கூக்கள்

அடக்க விலையையே   
மிஞ்சிவிட்டது 
ஆடம்பர விலை !
தேர்வாகாத நாள் காட்டி 
தேர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது 
காலம் ...!
மலடியின் வெளிச்சம் 
ஒளிந்திருக்கிறது 
அனாதை இல்லத்தில் !
சட்டமன்றத் தேர்தல் 
பாஞ்சாலியை தேடும் 
கிருஷ்ண பரமார்த்மா !
தொட்டில் குழந்தையை 
மறந்து கோயில் கோயிலாக 
ஏறி இறங்கும் தாய் !
எந்த அலையின் பிரசவமோ 
கரை ஒதுங்கியது 
சிற்பிகள் !
தானாகவே சரியாகிறது
எதிரே நிற்கும்போது
கண்ணாடியில் முகம் ...!
நள்ளிரவு மழை 
நச்சத்திரங்களை தேடும் 
நிலா ...!
நீர் கோழி 
ஜலதோசத்தோடு 
புகைப்படக் கலைஞன்  ....!
மொட்டை மாடி 
விடியலுக்கு காத்திருக்கும் 
மொட்டை நிலவு  ...!

ஹைக்கூக்கள் ...!

கடவுள் துணை 
வாசகத்தை வாசிப்பதற்குள் 
கிழித்துவிட்டான் எமன் !
விருந்தினர் பக்கத்தில் 
பரிமாறப்படுகிறது  
அபசகுனம் !
தூவாரங்கள் அடங்கிய உடல் 
தூர் வாருகிறது 
நோய்கள் !
கழிவை தள்ளும்
பசிக்கு ....
பலியாகிறது உலகம் !
வாழையடி வாழையாக 
வழுக்குகிறது 
வறுமை !
இறுதி ஊர்வலம் 
தொடர்கிறது 
கண்ணீர் அஞ்சலி !
வெளுத்துக்கட்டாமலும்
சாயம் போகிறது
கரை வேட்டிகள் ...!
பாலியல் வன்கொடுமை 
தடுப்பு மருந்தாக 
கருத்தடை மாத்திரை !
அவளுக்கான கோயில் 
இடம் கொடுக்க மறுக்கிறது 
ஜாதி வெறி !
அலையின் பாரத்தை 
இறக்கி வைக்கிறது 
கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...!

கவிச்சூரியன் மின்னிதழ் - செப்டம்பர் 2016.

அவளுக்கான கோயில்
இடம் கொடுக்க மறுக்கிறது
ஜாதி வெறி !

உதிர்ந்த இடத்திலே
எழுகிறது
வருங்கால விதைகள் ...!

பயணியர் நிழற்குடை
வியர்த்து கொட்டியது
கோடைவெயில்...!

எந்த பெயரை சொல்லி
அழைத்தாலும்
ஓடுவதே இல்லை வறுமை !

அரிச்சந்திரர்களாக நடித்து
இராவணர்களாக மாறும்
அரசியில் வாதிகள் !

கலிகாலம்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது
திரைப்பயணம் ...!

காதல் கடவுளின் வரம் ...!நிஜமாகவே உன்
நிழல் படத்திற்கு கூட
முத்தமிட்டதில்லை
அவ்வளவு பௌத்திரமான
அன்பை பிரித்து வைத்த
சாதி வெறிக்கு தெரியாது 
காதல் கடவுளின் வரமென்று ....!

பத்துக்கு பத்து ...!நொடிக்கு நொடி
உன்னை 
பின்தொடர்ந்த
நேரத்தைக் கொண்டு
வரைபடம் வரைந்து
வாட்ஸப் அளவு. 
பேஸ்புக் அளவென
வறைமுறை வகுத்துள்ள
எனக்கு 
பத்துக்கு பத்து மார்க்கு
போட்டு பாஸாக்கிவிடு ....!

அதிகமான ஏக்கம் ...!

Image result for அதிகமான ஏக்கம்

அதிகமான ஏக்கம்
ஆற்பரிக்கும் மனசு
இடைஇடையே
துள்ளி குதிக்கும் கவிதை
நின்னு நிதானமாய்
ஏறி இறங்கும் ஞாபகம்
தடபுடலாய்
ஓடி ஓளியும் இதய துடிப்பு
மிருகமாய் அவ்வப்போது
எட்டிப்பார்க்கும் கோபம்
தனக்கு தானே
சிரித்து மகிழும் புன்னகை
இவைகளை தாண்டியும்
தன்னலத்தோடு தேடுகிறது
தலைமறைவாக பதுக்கி வைத்த
முதல் காதலை.....!

புதுப்பிக்க ....!

Image result for kajal with karthik
சதையோடு 
ஓட்டிக்கொள்ளும் நினைவுகளை 
பிரித்து எடுக்கும்
பாதரசம் இருந்தால்
கூறுங்கள் 
சேதாரம் செய் கூலி இல்லாமல்
புதுப்பித்துக் கொள்ளலாம் ....!

ஏக்கம் ...!

Image result for alaipayuthey
சன்னல் ஒரம் 
மெல்ல 
நழுவத் துடிக்கும் 
ஞாபகத்தை 
இழுத்து பிடிக்கும் 
தென்றலை மீறி 
உள்ளே
நுழைந்து விடுகிறது
ஏக்கம் ...!

சிவன் பாடல் ...!

Image result for siva images

முக்கண் வேந்தனே 
மூவுலகத்தின் தலை மகனே 
எக்கண் உன்னை போதித்தாலும் 
இரங்கியருள் புரியும் சிவனே போற்றி 
நந்திக்கு முதல்வனே 
நடனத்தின் கலை மகனே 
சிலையாக உன்னை பாவிப்போருக்கும் 
சித்தம் தெளியவைக்கும் சிவனே போற்றி 
சக்தியின் துணைவனே 
சரித்திரத்தில் சிறந்தவனே 
முக்தி வேண்டுமென்று கேட்போருக்கு 
சக்தியளித்திடும் சிவனே போற்றி 
அனைத்துயிரிலும் சிறந்தவனே 
யாணை முகத்தின் அப்பனே 
அரும் பசியாற்றுவோர் நெஞ்சில் 
அமர்ந்திருக்கும் சிவனே போற்றி 
மயானத்தின் மாயவனே 
மந்திரத்தின் மூலவனே 
எந்திர மயமான உலகத்திலும் 
மந்திர திருநீறணிந்த சிவனே போற்றி 

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...