| கடவுள் துணை |
| வாசகத்தை வாசிப்பதற்குள் |
| கிழித்துவிட்டான் எமன் ! |
| விருந்தினர் பக்கத்தில் |
| பரிமாறப்படுகிறது |
| அபசகுனம் ! |
| தூவாரங்கள் அடங்கிய உடல் |
| தூர் வாருகிறது |
| நோய்கள் ! |
| கழிவை தள்ளும் |
| பசிக்கு .... |
| பலியாகிறது உலகம் ! |
| வாழையடி வாழையாக |
| வழுக்குகிறது |
| வறுமை ! |
| இறுதி ஊர்வலம் |
| தொடர்கிறது |
| கண்ணீர் அஞ்சலி ! |
| வெளுத்துக்கட்டாமலும் |
| சாயம் போகிறது |
| கரை வேட்டிகள் ...! |
| பாலியல் வன்கொடுமை |
| தடுப்பு மருந்தாக |
| கருத்தடை மாத்திரை ! |
| அவளுக்கான கோயில் |
| இடம் கொடுக்க மறுக்கிறது |
| ஜாதி வெறி ! |
| அலையின் பாரத்தை |
| இறக்கி வைக்கிறது |
| கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...! |
ஹைக்கூக்கள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...