சென்ரியு.


பார்வையால் 
ததும்பியது நிறைகுடம்
இடையழகு ...!

அடித்த வெள்ளத்தில் 
மூழ்கியது 
மதுக்கடை போராட்டம் ...!
இரண்டு பொண்டாட்டிக்காரன் 
எழுதினான் 
ஸ்ரீராமஜெயம் ...!
பணத்தில் தெரியாத ஜாதி 
தெரிந்தது 
பத்திரிகையில் ...!

கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் - 44

விரைவுச் செய்திகள் 
மறைத்தது 
விளம்பரம் ...!
வெற்றி மாலை 
உதிர்ந்ததும் 
தோல்வியில் நார் ...!
இடையழகைக் கண்டு 
ததும்பியது 
நிறைகுடம் ...!
புதிய தலைமுறையின் 
கோயிலானது 
பழைய வீடு ...!

வள்ளுவனே ...!மயிலையில் உதித்த ஆதவனே என்றும் 
மாணவர் போற்றும் தேவனே !

வான் புகழ் பொழிந்த வள்ளுவனே என்றும் 
வையகம் போற்றும் முதல்வனே !

தேன் மலர் கசிந்த தமிழனே என்றும் 
தேவலோகம் போற்றும் புலவனே !

முப்பால் சுரந்த மூலவனே என்றும் 
மூவுலகம் போற்றும் நாயனானே !

ஈரடி யளந்த வாமனனே என்றும் 
ஈகை போற்றும் திருகவிஞனே !

வல்லரசு பிறக்கட்டும்...!

உச்சி காற்றை தொடும் 
பறவையின் எச்சத்தில் 
பிறக்கும் 
பசுமையை அழிக்கும் 
மனித இனமே ! 
நீ 
கட்சி காற்றை தின்று 
பாமரரின் எச்சில் 
சோற்றில் 
பிறக்கும் வரிதலைமையை 
அழிக்க மறந்ததேனோ ?
சிந்தியுங்கள் ...
நிலைமையை மாற்றுங்கள் 
ஊழல் இல்லா 
வெளிச்சத்தில் 
உலா வரட்டும் நம் 
கிழக்கு சூரியன் !
நிந்தியுங்கள் ...
சமதர்ம சாம்ராஜ்யத்தில் 
சிரித்து மகிழும் 
இரவு காற்றில் உலா வரும் 
ஜாதி மதங்களிடமிருந்து 
சுதந்திரம் பிறக்கட்டும் !
இனிமேலும் வேண்டாம் 
இளைய சமூகமே 
வான் முறை 
துணை கொண்டு 
வன் முறை அழியட்டும் 
வல்லரசு பிறக்கட்டும்...!

மீண்டும் மீண்டும் ...!

மாண்டோர்கள் மீண்டதில்லை
மானிடனே
மனதில் தோன்றும்
மாண்புகள் மீள்கிறது
அரியணை சுகத்திற்கு
அரிவாள் வெட்டு
ஆண்மை சுகத்திற்கு
பாலியல் மொட்டு
பணத்தை ஆளும் 
ஜாதிக் கட்டு - இதை 
படித்துக் காட்டுகிறது 
பட்டணத்து சிட்டு 
என பாவங்கள் 
மீண்டும் நீண்டு கொண்டே இருக்கிறது 
நதியுதவிக்கு நிதியுதவி
நானும் நீயும் செத்தால் 
பணவுதவி  - இதை 
எண்ணிப் பார்க்கிறது 
வானிலை மறுவி 
எழுதிக் காட்டுகிறது 
தேர்தல் துருவி 
என கர்மங்கள் 
மீண்டு நீண்டு கொண்டே போகிறது 
மதுவே எங்கள் 
மாநிலத்தின் வித்து 
என உரக்க கத்துது பார் 
குடும்ப குத்துவிளக்கு 
குடிக்காவிட்டால் 
குடும்பம் கெத்து இதுவே 
மனைவிமார்களின் சொத்து 
என அறிந்தும் 
அழிவை தேடும் அதர்மங்கள் 
மீண்டும் நீண்டு கொண்டே செல்கிறது 
மீண்டும் மீண்டும் 
வானம் 
பொழிவதை மறக்கவில்லை 
பூமி 
விளைவதை நிறுத்தவில்லை 
சாமி 
வணங்குவதை மாற்றவில்லை 
காற்று 
வீசுவதை அளக்கவில்லை 
ஆனால் 
காமத்திலும் ஏமத்திலும்
சாமத்திலும் 
அடுத்தவனை கொன்று 
படைத்தவனையே மிஞ்சும் அளவிற்கு 
பிறந்து பிறந்து இறக்கும் 
மனிதன் மட்டும் 
மாறிவிட்டான் ...!
                                                  -

கல்லறையில் ...!கல்யாணத்தில் 
முடியாதெனத் தெரிந்தும் 
காதலை சுமக்கும் 
இதயங்கள் 
பிரசவமாகிறது 
கல்லறையில் ...!

பிரிப்பதில்லை ...!விடை பெறாத காற்று
இடை விடாத வானம்
எடை குரையாத பூமி
தடைபடாத நீர்
அளவிடாத தீ 
இவைகள் மட்டும் 
பிரிப்பதில்லை 
ஜாதி மதம் இனம் மொழியென ...!

விடுமுறையே இல்லை ...!பள்ளி கல்லூரி 
அலுவலகம் அரசாங்கம் 
இவைகளுக்கு 
விடுப்பு விட்டாலும் 
விடுமுறையே இல்லை 
ஊழலுக்கு மட்டும் ...!

கலிகாலம் !கடலை விற்று 
கடனை அடைக்கும் 
காலம் வரும் போது 
கார் மேகமே 
கடனாகக் கூட 
களைந்து விடாதே 
பிழைத்து விடும் கலிகாலம் !

மருதாணி ...!

மருதாணி ஏன் பூசுகிறோம்?

மச்சானை நினைத்து 
அரைத்து வைத்த 
மருதாணி சிவப்பில் 
தோன்றும் 
கரும் புள்ளியைக் கண்டு 
பித்தம் என 
கேலி செய்யும் தோழிக்கு 
எப்படி 
புரியவைப்பேன் 
எனக்கு மட்டுமல்ல 
என் விரல்களுக்கும் 
பித்து பிடித்திருக்கிறது என்று ...!

அணைகள் ...!எனக்காக ...
சண்டையிட்டோர் எத்தனை 
ஜாதி கலவரத்தில் 
சமாதியானோர் எத்தனை 
கட்சி பெயரைச் சொல்லி 
களவாடியவர்கள் எத்தனை 
அத்தனை பேருக்கும் சேர்த்து 
அமைதியாக 
தூங்கிக் கொண்டிருந்த நான் 
இப்போது 
அடை மழை என்ற பெயரில் 
ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறேன்  
எங்கே இன்று .... 
சண்டையிடுங்கள் பார்ப்போம் 
தண்ணீர் தரமுடியாது என்று 
அவ்வளவு தான் 
அடையாளம் தெரியாமல் போய்விடுவீர்கள் 
என்றது அணைகள் ...!

கார்த்திகை பெண்ணே ...!கார்த்திகை பெண்ணே 
எனக்கு மட்டும் 
எட்டியிருந்தால் 
நிலவை கொண்டு 
விளக்கேற்றியிருப் பேன் 
விடியும் வரை ...!

mhishavideo - 21