சீரழியும் பண்பாடு ...!

வாழ்க்கையில் 
ஒளிந்திருக்கும் 
பண்பாட்டை 
மீட்டெடுக்க 
முயற்சிப்பதற்குள் 
கடிந்து கொண்டிருக்கிறது 
காலத்தின் அலச்சியத்தோடு
சுருங்கிக்கொண்டே 
செல்லும் ஆடை 
அலங்கராத்தில் 
நிரம்பி வழியும் 
மதுக்குடுவைகள் 
தள்ளாடிக் கொண்டிருகிறது 
தன்மானத்தின் கண்ணீரோடு
வானம் பூமி 
தவிர வரைமுறைகள் 
எல்லாம் வழி தவறும் 
உறவு முறையில் 
உலவிக் கொண்டிருக்கிறது 
இன்னொரு உறவை 
முறித்துவைக்கும் முயற்சியோடு
ஓவியமோ காவியமோ 
வரைந்து முடிப்பதற்குள் 
வழிந்துகிடக்கிறது 
அங்கிங்கும் அரைகுறை 
கலை நயத்தோடு
கட்டடக்கலை 
படித்து அரிவதற்குள் 
முடித்துவிட்டது 
பிணமா பணமா 
என்ற பட்டிமன்றத்தோடு
இப்படி ...
எல்லாம் அறிந்த மனம் 
காலத்தோடு இணையும் 
கர்ம வினையைத் தேடி 
எதிர்த்து நிற்கிறது 
ஏமாறவில்லை காலன் ...!

2 comments:

  1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145