![]() வறண்ட நிலத்தை வாங்கிடும் தோழா - நீ வகைவகையான விதைகள் விதைத்தால் விளைந்திடுமா தோழா உழுத நிலத்தில் வீடுகட்டும் தோழா - நீ உடைத்து மீண்டும் விதைக்க நினைத்தால் வளமாகிடுமா தோழா காட்டை அழித்து காற்று வாங்கிடும் தோழா -நீ கார் மேகத்தை கிழித்து பார்த்தால் மழை பொழிந்திடுமா தோழா கண்ணீரை விற்று கடவுளை வாங்கும் தோழா -நீ கதிரவனை மறைத்து கார் மேகத்தை வாங்கிட முடியுமா தோழா எண்ணியதெல்லாம் எடுத்துக்கொடுக்கும் பூமியிருக்கு தோழா - நீ எழுந்து இன்றே வளமாக்க எண்ணிவிடு தோழா ...! |
தோழா - நீ
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
வணக்கம்
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் பல
Deleteகவிதை எதார்த்தம் சொல்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் பல
Delete