நாய்படாத பாடுதான்'


புதுமாப்பிள்ளை : சோசியரே 12 ராசியில நல்ல ராசிப் பொண்ண பார்த்து சொல்லுங்க 

சோசியர் :எந்த ராசிப் பொண்ணக் கட்டினாலும் கடைசிவரைக்கும்  உன் ராசி  'நாய்படாத பாடுதான்'   

காதல் சில தத்துவம்

வெட்ட வெட்ட 
வளரும் நகமல்ல காதல்...

கொட்டக் கொட்டக் 
குனியும் நாணலே காதல்

செருப்பாய் தேய்ந்தாலும் 
நெருப்பாய் வளர்வது தான் காதல்...

வெறுப்பாய் போகாமல் 
பொறுப்பாய் இருப்பது தான் திருமணம் 

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

வெட்டியான் : டேய் மகனே இந்த ஒரு ரூபாயக்கூட விட்டு வைக்கலையா...?

வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான் 


உடைந்தது காதல்...!
வாழ்க்கையில் யெல்லாம் 
பொய்த்த போது 
வாழ துடிக்கிறேன் உன்னுடன் 

இனி வாழும் வாழ்க்கையாவது 
இன்பமாய் இருக்கும் 
என்ற ஆசையில் 

என் 
உணர்வை கொடுக்க நினைத்தேன் 
உண்மை புரிந்தது 

நீ 
இன்னொரு குழந்தைக்கு 
தகப்பனாய் வாழ்ந்துவிட்டாய் 
என்ற செய்தியை கேட்டதும் 

இடிந்தது இதயம் 
பொழிந்தது கண்ணீர் 
உடைந்தது காதல் 
ஆனால் 

உணர்வை மட்டுமே 
மறக்க முடியாமல் 
உளறுகிறேன் உயிரே 

இறைவன் சன்னதியில் 
இன்னொரு ஜென்மம் 
வேண்டாமென்று...! 

தொப்பைய குறைக்க...தொப்பைய குறைக்க என்ன பண்ணனும் 

பாப்பையாவ பட்டி மன்றம் வைக்க சொல்லும் போது 


கொஞ்சம் குறைக்க  சொன்ன போச்சி 


புண்ணாக்கு வியாபாரம்அண்ணே அண்ணி எப்படி பட்டவுங்க 
தங்கம் வாங்கிக்  கொடுத்தாத்தான் தங்கமான புருசனு சொல்றா 
இல்லேனா தவுட்டுக்கு வித்துடுவாளம் 

அப்படியா ஏன் பொண்டாட்டி பரவா இல்லையே 
பகட்டுக்காக என்ன புண்ணாக்கு வியாபாரம் பண்ண சொல்லிட்டா
அப்ப தானே திட்ட வசதியா இருக்கும் 


நப்பாசை தான்...!

கடவுள் நேரில் வந்தால் 
என் கை ரேகையை 
மாற்றச் சொல்லி கேட்பேன் 
அப்படியாவது 
என் தலை எழுத்துக்கு முன்னால் 
என்னவன் 
முதல் எழுத்து வாழும் 
என்ற நப்பாசை தான்...!
சருகுகள் ஹைக்கூ


வாயில்லா ஜீவராசிக்கு 
வாழக் கற்றுத்தந்தது 
சருகுகள்...!
இறந்தகாலத்தில்  
உரமானது 
சருகுகள்...! 
பசுமையை நோக்கிய   
சுறாவளிப் பயணங்களில்
உதிரும் சருகுகள்!
சுனாமியில் 
பிணமானது 
சருகுகள்...! 
வெள்ளை சருக்குக்கு 
வேராய் நின்றது 
பிள்ளைகள்...!
கிளையின் ஆடையை 
களைந்தது காற்று 
சொர்க்கத்தில் வேர்கள்...!

இராணுவத்தால் 
குருதியில் குளித்தன 
சருகுகள்...!


உடைந்த பலுனாய்...!

இதயம் இருந்த போது 
இளமை இல்லை...
இளமை முடிந்த போது 
இதயம் இருக்கிறது...
வெறும்... 
உடைந்த பலுனாய்
எதற்கும் உதவாமல்   
நினைவுகளை மட்டும் 
சுமந்தபடியே...!

அருவி இதழில் எண் - 12ஆறில் விதைத்தது 
அறுபதில் அறுவடை 
முடியாத வரவும் செலவும்..

பாயும் வாகனத்தில் 
தூய காற்றும் துயரப்படுகிறது 
கண்ணுள்ள மனிதனால் 

எண்ணங்கள் ஆயிரம் 
வண்ணங்கள் நூறாயிரம் 
முடிவில்லா ஆசை ....!

ஆவிகளின் கண்ணீர் 
நீராக பிறக்கிறது 
மழை துளி.....!

மனதை விட அதிகமாய் 
வலித்தது மானம் 
இதயமற்ற பெண்களால் .....!

காணமுடியா இசையில் கூட 
கருணை மறைந்திருக்கிறது 
காற்றின் அசைவில் .....!

மழையில் பிரசவம் 
ஒரே செல் காளான் 
மனிதனுக்கு நல் மருந்து.

தினமும் ஒரு முறை 
பிறக்கும் இறக்கும் 
முடிவில்லா எண்ணிக்கை.

அடிக்கும் இமைகள் 
இடியே இல்லாமல் 
பொழிகிறது மழைபொழுதுகள் சாய்ந்தது...!


பொழுதுகள் சாய்ந்தாலும் 
விழுதுகளாய் வாழ்கிறாய் 
கனவிலும் என் உணவிலும்

அழுதுகொண்டே நிற்கிறேன் 
காதலோடு ஜாதியையும் சேர்த்து 
நீ நேசிப்பதால் யோசிக்கிறேன் 

உணர்வை தரும் முன் 
உன் உயர்வை தந்திருந்தால் 
கண் திறவாமல் போயிருக்கும் 
என் காதல் 
நல் நண்பனாய் மட்டுமே 

உரிமையை தந்த பின் 
உணர்வை கொன்றுவிட்டதால் 
செவிடாய்  நிற்கிறேன் 
என் காதலில் இன்னும் 
ஜாதி ஒழியவில்லையே என்ற 
சோகத்தில் ....

எதிரியாகவில்லை நீ இன்னும் 
என் இதயத்தில் என்றுமே 
காதல் வளர்வதால் 
ஹிஷாலீ ஹைக்கூ - 39

எம்மதமும் சம்மதம்
உணர்த்தியது 
முதியோர் இல்லம்...!

சமாதியில் கூட 
சமத்துவமில்லை 
சாதி மதம் பேதம்...!

தினமும் 
அன்னதானம் 
வேலைக்காரி கையில்...!

திட்டமிட்ட சலுகைகள் 
வசூல்
வரி விலை ஏற்றத்தில்...! 

தீயிக்கு இரையாகவில்லை 
இரவு 
திருப்தியில் நிலா...!

உணர்வை 
கனவுக்கு விற்றாள்  
முதிர்கன்னி...!


அருவி இதழில் எண் - 13
உன்னை கண்ட நாள் முதல் 
என்னை மரணம் துரத்துகிறது.

காலை முதல் மாலைவரை 
கண்ணே உன்னை காணாமல் என்
கண்களுக்கு மரணம்!

காகிதமாய் கடந்து செல்லும் 
கனவுகள் விடிக்கையில் கண்ணீருக்கு 
மரணம்...

முத்தமிட்டு சத்தம்மில்லாமல் 
யுத்தம் செய்யும் இதயத்திற்க்கு
மரணம்...

இப்படி 
மரணமே கண்ட 
என் இதயம் 
மறு வாழ்வு வாழாதா 
சொல் ...

உயிரே! 
எத்தனை 
மரணங்களை தாண்டியும் 
யுகங்களாய் காத்திருப்பேன் 
உன் 
இதய சுரங்களில் 
உதயமாகும் 
காதல் மரணங்களை 
சந்திக்க ...

மச்சி "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....

மச்சி "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....

ஏழரைப் பனி ல இருந்த சுடுகாடு 

ஏழரைச் சனி பிடிச்ச  திருவோடு  அலைன்ஸ் க்கும் லைப் இன்சூரன்ஸ் என்ன மச்சான் வித்தியாசம்


அலைன்ஸ் க்கும் லைப் இன்சூரன்ஸ் என்ன மச்சான் வித்தியாசம் 

கல்யாணத்துக்கு முன் வாங்குறது அலைன்ஸ் 

கல்யாணத்துக்கு பின் வாங்கவேண்டியது லைப் இன்சூரன்ஸ் 

கண்ணில் துளி....!
உன் நினைவுகளால் நலமாகிறேன் 
உன் பிரிவுகளால் சுகமாகிறேன் 
கனவுகளால் உயிர் வாழ்கிறேன் 
காதலியாய் என்றும் உன் காதலியாய் 

இறகுகள் இல்லாமல் பறக்கிறேன் 
இதயம் இரண்டாய் துடிக்கிறேன் 
உறவுகள் எல்லாம் நீயாகவே 
என் உயிரில் கலந்த பூவாகவே 
சருகுகள் ஆகும் காதலிலும் 
சரித்திரம் படைத்து வாழ்ந்திடுவோம் 


ஆயிரம் முறை துடிக்கும் 
இதயத்துக்கு தெரிவதில்லை 
காதலின் வலி  ...
ஐந்து நொடி பிரிவுக்கு 
தெரிந்து விட்டது 
கண்ணில் துளி....! புக்ஸ் எண்ணி படிடா

டேய் மச்சி என்ன லைப்ரேரி பக்கம் 

அது ஒன்னுமில்லடா மொத்தம் எத்தன புக்ஸ் இருக்குனு எண்ண வந்தேன் 

ஏன்டா.....?

எப்பபாரு அப்பா புக்ஸ் எண்ணி படிடா  எண்ணி படிடான்னு திட்டிக்கிட்டே இருக்காரு  அதன் 

ஹ ஹ ...... 

இணைந்துவிடு இன்றே...!

இனி ஒரு பிறவி வேண்டாம் அன்பே 
இணைந்துவிடு இன்றே 
கனியொரு வண்ணம் தொட்டு 
காதல் கொள்வோம் ....

ஜாதியில்லா 
சுதந்திரப் பறவையாய் 

மதமில்லா 
மத்தாப்பூ பூவாய் 

அழகை ஆதரிக்கா
அன்பின் ஊடலாய்   

பண்பின் தோட்டத்தில் 
பருகும் தேனாய் 

உலகங்கள் இரண்டானாலும் 
உள்ளங்கள் ஒன்றாய் 

எண்ணங்கள் தோறும்
ஏறி இறங்கிடிவோம் 

வாழ்க்கை ஏணிப்படியில் 
வாழும் காதலர்களாய்...! 

உன் காதலியாக...!
அவனாகி நின்றேன் என்றும் 
அவனாகி நின்றேன்
ஆடைகொடுத்த தாயை மறந்து 
ஆசை கொடுத்த 
அவனாகி நின்றேன் என்றும் 
அவனாகி நின்றேன் 

இன்று நானாகும் பொழுது 
இதயம் தூணாகவில்லை 
இளமை தேனாகவில்லை 

மானாக துள்ளிக் குதித்தவள் 
மறைவாக சொல்லி அழுகிறாள் 
மாற்றம் ஒன்றே போதுமென்று 

ஊணாக  உருகி என்றோர் மூளையில்
உயிராகவே வாழ்கிறாள் என்றும் 
உன் காதலியாக...! சூப்பர் பஞ்ச...!


ஆணின் பேச்சும் 
ஐநா சபையின் பேச்சும் 
உண்மையானதா சரித்திரமே இல்லை

லைப்ரேரினா புக்ஸ் 
கேண்டினா டிப்ஸ் 
காதலித்தால் கிஸ் 
கடைசியில் லைப்பு மிஸ்... 

எக்ஸாம்னாலே போரடிக்குடா...!

  

ஸ்டுடன்ட் 1: டேய் இந்த எக்ஸாம்ல முட்ட வாங்குன எங்க அப்பா அடிப்பாருடா 
ஸ்டுடன்ட் 2: ஆப்புக்கா கோட்டாருக்கா...
ஜோக்ஸ் :2
ஸ்டுடன்ட் 1:  எக்ஸாம்னாலே  போரடிக்குடா 
ஸ்டுடன்ட் 2: எனக்கு அதுதாண்டா மச்சி லாபம் அப்பதானே

நல்ல படிக்கிற பொண்ண லவ் பண்ண முடியும்.... 

சோப்பு வாங்க மறந்துட்டேன்....!
ஆசிரியர்: கோம் வொர்க் பண்ணாதவுங்கெல்லாம் கிளாஸ் ரூம விட்டு வெளிய போங்க

ஆயா : என்ன அருண் வெளிய நிக்கிற...

அருண் : நேத்து டீச்சர் தந்த கோம் வோர்க்ல சோப்பு வாங்க மறந்துட்டேன்....

ஆசிரியர் :?????????????? 

உன்னை நினைத்து ...!


காதலித்த போது 
உன்னை நினைத்தேன் 
நம் காதலை மறைத் போது 
உன் வாழ்க்கைக்கு வழிகாட்ட 
என் காதலை மறைத்தேன் 

திருந்தி மீண்டும் 
முன் காதலை சொன்னாய் 
நானோ என் பின் காதல் 
ஒன்றே போதும் என்று 
மெய்க்காதலில் கை கோர்த்தேன் 
இப்பாடலை ரசித்தபடியே 
சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நீ என் மின்னலா மணிகள் தூங்கும் வரை...!
முன் விரல் கொண்டு 
கண் விரல் தீண்டும் 
கள்வனே....

பொய் விழி மேடையில் 
நான்கு கண் மொழி பேசும் 
நாடகத்தில்...

ஐய் விரல் நான்கும் அணைக்க 
ஆசையில் தேகம் சிலிர்க்க 
மை விழி கோலம் காண்போம்
மணிகள் தூங்கும் வரை...!


 


மீண்டும் உயிர் வாழ...!அவள்சூடும்தோட்டத்தில் 
விதையாகிறேன்இதே மண்ணில்
மீண்டும் விதையாய் முளைக்க 

அவள் தேடும் நிழலில் 
சருகாகிறேன் அதே கண்ணில் 
மீண்டும் நீராக முத்தமிட 

அவள் போகும் பாதையில் 
நிணைவாகிறேன் இதே இதயத்தில் 
மீண்டும் மனப்பாடம் செய்ய 

அவள் வாழும் வாழ்க்கையில் 
நாளாகிறேன் அதே கனவில் 
மீண்டும் உயிர் வாழ...!


காதல் மணி...!


பூனைக்கு மணி கட்டியது போல் 
என் சொக்கா பையில் 
செல்லை கட்டி கொண்டு 
காத்திருந்தேன்.... 
அவன் அழைப்புக்காக 
அழுகை தான் வந்தது 
ஏமாற்றிவிட்டானோ என்றில்லை 
ஏமாந்திருப்பானோ என்று...! 

மழை - ஹைக்கூ

மழை விட்ட நேரம் 
பசி தீர்த்தது 
மழலை...!
யாசித்தது மழை 
நேசித்தது காற்று 
யோசித்தது இயற்கை ...!
கார் மேகம் 
கற்பக தரு 
மழை...! 
நிர்வாண தூறல் 
நிலத்தின் போர்வை 
ஏக்கத்தில் நிலா 
மழை நின்றதும் 
தேங்கிய நீரில் 
முகம் பார்த்தது வானம்
பென்சிலின்
முதல் தாய் 
மழை...!
கொடுக்குற தெய்வம்
கூரையைப் பிய்த்தது...
நிவாரண நிதி
மழைக்குளியல்
மலர்களுக்கும் கொண்டாட்டம் 
வண்டுகளுக்கு திண்டாட்டம் 
மழையை 
தீண்டுவதில்லை 
வானவில்ஆயுதம்...
பச்சை நாற்று
மழைத்துளி கண்ணாடி
இச்சை மனிதன் 
காயிந்த மண்ணில் 
கக்கியது வானம் 
அமுத மழை 
காதலர் கல்வெட்டை 
அழிக்க முயன்றது மழை 
வெற்றியில் பாசி
மின்னல் குத்தி 
கொப்புளங்கள்
குளத்தில் மழை
மழை ஓய்ந்த நேரம்
மலரை கொய்தது 
மண் வாசனை 
விட்டது மழை 
மரக்கிளையில் 
வானத்தின் கவிதை 
ஜூன் மழை 
ஜான் வயிறு 
ஆண்டவன் கணக்கு 
ஏணி இல்லாமல் 
இறங்கியது மழை 
தன்னம்பிக்கை
மின்னல் வெட்டியது 
விழு மழையின் 
அமைதியென்னே...!
கதறியது மழைத்துளி 
காதலர்களின் இறுக்கத்தில் 
காமம் சுதந்திரமானதால் 
மழை ஆரம்பம் 
மருகியது மனம்
விற்ற நிலம்...!
மழைக்காலங்களில்
சுத்தமானது 
மாசடைந்த ஆறு ஏரி 
குடைக்கு வெளியே மழை 
சாலையோரப் பூக்கள் 
கப்பல் கவிந்தது 
மழையை ரசித்தபடியே நடந்தவன் 
சற்றேன மறைந்தான் 
சாலையில் மரணக்குழி 
அடை மழை 
அலுவலகம் விட்டுச் சென்றவன் 
காலை செய்தியில் கண்ணுறங்கினான் 

பூக்களும் அதன் குணங்களும்...!


நான் தான் உங்கள் பூ பேசுகிறேன் எனக்கு பூ என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா...?


தெரியாதே...


ம்ம் சொல்கிறேன் நான் பூமியிலே பிறந்து பூமியிலே இறப்பதால் எனக்கு பூ என்று பெயர் வைத்தார்கள் நம் முன்னோர்கள் 


ஒ அப்படியா... ஒகே மற்ற பூக்களும் அடை மொழி உள்ளதே அது எப்படி வந்தது 


அதுவா சொல்கிறேன் கேள் கனகாம்பரம்: என் இதயம் கனமானது நான் இரண்டு மூன்று நாள் உயிர் வாழ்கிறேன், என் அறிவியற் பெயர் க்ராசோண்ட்ரா இன்ஃபண்டிபிலிபார்மிசு காலம் முழுவதும் பூப்பதால் கனகாம்பரம் என்று பெயர் வந்தது 


ரோஜா :ரோமியோ ஜூலியட் மாதிரி காதல் கொள்ளும் இதயங்களுக்கு அழகை கொடுத்து அமைதியை பெறுகிறேன் அதனால் ரோஜா என்று பெயர் வந்தது 

முல்லை : பிள்ளை உள்ளம்போல் பேசும் வாசத்தில் மூளை முடுக்கெல்லாம் மூக்கை துளைத்து மணம் வீசுகிறேன் மேலும் பெண்களின் பால் நோயை விடுத்து வாழ்வதால் எனக்கு முல்லை என்று பெயரும்

அல்லி : ஒரு நாள் அழகு ராணி நான் இரவில் மலர்ந்து காலையில் குவிந்திருப்பேன் எண்ணில் 50 வகைகள் இருப்பதால் நான் அள்ளி என்ற பெயர் கொண்டேன் 


சாமந்தி: அந்திப் பொழுதில் காதல் கொண்டு சாந்திகொள்ளும் இறைவனுக்கு சந்தன மாலையாய் சூடுவதால் என் பெயர் சாமந்தி 
சாமந்தி பூவிலிருந்து கிடைக்கும் பைரித்ரம் பூச்சிக்கொல்லி யாகவும் கிரைசாந்திமம் சினரேரி போலியம் தயாரிக்கப்படுகிறது. 
மேலும் வியாபாரிகளுக்கு நான் இலாபம் ஈட்டு தரும் நல் மலராய் பூக்கிறேன் 


மல்லி :மயக்கும் இல்லறத்தில் துள்ளி விளையாடி சொல்லி பேசும் காதலில் கள்ளி கள்ளி என்று அணைக்கு அன்பு உள்ளங்களுக்கு ஆசையை தூண்டும் அமிர்த ரசமாய் மேலும் எண்ணை கொண்டு அர்ச்சனை செய்தால். எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவீர்கள் அதற்க்கு மேலும் நான் உங்களின் குடற்புழுக்களை அழிப்பதற்கும் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம் உதவி செய்கிறேன் 

மரிக்கொழுந்து: நாங்கள் வாடினாலும் வாசம் தந்து வாழும் வரை வாசத்துடன் வீழ்கிறோம் அதுமட்டுமா செம்பட்டை முடி நிறம் மாற என் இலைகள் உதவுகிறது. மலைகளையே மணக்க வைப்பதால் மரிக்கொழுந்து என்ற பெயர் கொண்டோம் 

குறிஞ்சிப்பூ: பருவப் பெண்கள் போல் நான் பன்னிரெண்டில் பருவமடைந்து உலகின் அதிசய மலராய் காதல் கொண்டு குறிஞ்சி நிலமாய் வளம் கொளிக்கிறேன்.

வேப்பம்பூ: நான் அனைத்து வகையான நோயிகளுக்கும் வேர் முதல் நுனிவரை மருந்தாய் பூப்பதால் என் பெயர் வேப்பம்பூ 
எண்ணை பற்றி அறியாதோர் இவ்வுலகில் யாரும் இல்லை.

அரளி பூ: நான் மிக அழகான அற்புத வடிவம் கொண்ட பூ எண்ணை பூஜைக்கும் பயன் படுத்துவார்கள் மேலும் நான் ஆட்களை கொள்ளும் விஷத்தன்மை கொண்டதால் அரளிபூ என்று பெயருடன் வாழ்கிறேன்.

வாழைப்பூ : நான் எண்ணற்ற நார்ச் சத்துக்களை கொண்டும் கொழுப்பு அமிலங்களும் போக்கும் நல் மருந்தாகவும் பழங்களை உருவாக்கும் ஊன்று கோலாய் நிலைத்து நிற்கிறேன்...! 

இப்போது அறிந்தாயா நீ நாங்கள் அழகுக்கு பயன் படுகிறோம் மருத்துவ குணங்களுக்கும் பயன்படுகிறோம் மேலும் கவிஞர் களுக்கும் காற்றுக்கும் வானுக்கும் பேர் உதவியாகவும் ஓர் நாள் வாழ்ந்தாலும் உலகையே ஆண்டு வெற்றி பெறுகிறோம். அதே போல் மனிதர்களும் மனிதில் அழகும் ஈகை திறனும் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை என்றுமே சிறக்கும். 

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...