பொழுதுகள் சாய்ந்தது...!


பொழுதுகள் சாய்ந்தாலும் 
விழுதுகளாய் வாழ்கிறாய் 
கனவிலும் என் உணவிலும்

அழுதுகொண்டே நிற்கிறேன் 
காதலோடு ஜாதியையும் சேர்த்து 
நீ நேசிப்பதால் யோசிக்கிறேன் 

உணர்வை தரும் முன் 
உன் உயர்வை தந்திருந்தால் 
கண் திறவாமல் போயிருக்கும் 
என் காதல் 
நல் நண்பனாய் மட்டுமே 

உரிமையை தந்த பின் 
உணர்வை கொன்றுவிட்டதால் 
செவிடாய்  நிற்கிறேன் 
என் காதலில் இன்னும் 
ஜாதி ஒழியவில்லையே என்ற 
சோகத்தில் ....

எதிரியாகவில்லை நீ இன்னும் 
என் இதயத்தில் என்றுமே 
காதல் வளர்வதால் 
No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)