அறுபதில் அறுவடை
முடியாத வரவும் செலவும்..
பாயும் வாகனத்தில்
தூய காற்றும் துயரப்படுகிறது
கண்ணுள்ள மனிதனால்
எண்ணங்கள் ஆயிரம்
வண்ணங்கள் நூறாயிரம்
முடிவில்லா ஆசை ....!
ஆவிகளின் கண்ணீர்
நீராக பிறக்கிறது
மழை துளி.....!
மனதை விட அதிகமாய்
வலித்தது மானம்
இதயமற்ற பெண்களால் .....!
காணமுடியா இசையில் கூட
கருணை மறைந்திருக்கிறது
காற்றின் அசைவில் .....!
மழையில் பிரசவம்
ஒரே செல் காளான்
மனிதனுக்கு நல் மருந்து.
தினமும் ஒரு முறை
பிறக்கும் இறக்கும்
முடிவில்லா எண்ணிக்கை.
அடிக்கும் இமைகள்
இடியே இல்லாமல்
பொழிகிறது மழை
சிறப்பான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteஅருவி இதலில் கவி அருவியை தந்த அக்கா
ReplyDeleteஅருவில் நனைந்த அனுபவம் புதுமை
nanri Tambi
Delete