ஹிஷாலீ ஹைக்கூ - 24


காமம் ரசிக்கப் படாவிட்டால் 
காதல் தொலைந்திருக்கும் 
அகராதியில்
எழுதியவனின் தீர்ப்பில் 
இல்லறத்தை துறந்தவள் 
இளம் விதவை 
அரை இரவில் 
அழகுக்கு தண்டனை 
விரல்களில் மருதாணி
விதி முடியும் வரை 
இல்லை உனக்கு 
விடு தலை 
கோட்டருக்கும் ஹோட்டலுக்கும் 
ஓதுங்கி வாழ்ந்தால் 
உயிர் சிறக்கும் 
கொளுத்தும் வெயில் 
சுருங்கியது நிலம் 
பரவசத்தில் காற்று
நீராவியில் தோரணம் 
நிலங்களின் 
பசுமை புரச்சி 
உலகெங்கும் 
பச்சையாடைகள் 
சமாதான சந்தோசம் 
இயற்கையின் செழிமை
இதயங்களின் வலிமை 
காலத்தின் வரபிரசாதம்  
உருவங்கள் வேற்றுமை 
உணர்வுகள் ஒற்றுமை 
உலக நீதி

6 comments:

 1. வணக்கம் மேடம் . நலமா ?
  உங்களின் ஹைக்கூகள் படித்தேன் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது .. வாழ்த்துக்கள் ..
  கோட்டருக்கும் ஹோட்டாளுக்கும்
  ஒதுங்கி வாழ்ந்தால்
  உயிர் சிறக்கும் ..//

  அது எப்படி எனக்கு புரியவில்லை ..
  கொஞ்சம் விளக்க முடியுமா ?

  ReplyDelete
 2. நான் நலம் சார் தாங்கள் நலமா ?

  // கோட்டருக்கும் ஹோட்டலுக்கும்
  ஓதுங்கி வாழ்ந்தால்
  உயிர் சிறக்கும் //

  ஹோட்டலில் சாப்பிட்டால் குடல் வெந்துவிடும் மேலும் அல்சர் வரும்

  கோட்டர் அருந்தினால் குடல் வெந்து உயிர் போய்விடும் என்பார்கள்
  இப்போது புகிறதா சார்.

  ReplyDelete
 3. ஹோட்டலில் சாப்பிட்டால் குடல் வெந்துவிடும் மேலும் அல்சர் வரும்

  கோட்டர் அருந்தினால் குடல் வெந்து உயிர் போய்விடும் என்பார்கள்
  இப்போது புகிறதா சார்.//


  உங்களை போல நானும் நலமே ...
  உங்களின் இந்த கருத்தை நான் ஆதரிக்க மாட்டேன்
  நானும் தான் கடந்த ஆறு வருடங்களாக ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு வருகிறேன் ..
  ஒன்றும் ஆகவில்லையே ..

  ReplyDelete
 4. அருமையான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 5. தங்கள் அன்பு வாழ்த்துக்கு என் அன்பு நன்றிகள் அண்ணா

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு