| கடவுளின் காலடி |
| செருப்பாக தேய்கிறது |
| பக்தையின் பாதம் |
| நூறு நாள் போராட்டம் |
| கூலியாக.... |
| துப்பாக்கி சூடு |
| கழட்டி விட்டும் |
| ஜோடி மாறாமல் கிடக்கிறது |
| காதறுந்த செருப்பு |
| புலி வந்த தடத்தில் |
| மான் வேட்டை |
| இறந்தது முயல் |
| வளையல் ஓசை |
| மெல்ல மறைத்தது |
| வானவில் |
| இரங்கல் மாலை |
| சிரித்தபடி அசைகிறது |
| மயானத்தில் |
| நீண்ட வரிசையில் யாசகன் |
| குறுக்கே புகுந்தது |
| கட்டெரும்பு |
| உயிர் சேதம் ஆன பின்பும |
| சித்ரவதை |
| தூத்துக்குடியில் |
| நகரும் நிலா |
| நாலாபுறமும் |
| ஒரே வெளிச்சம் |
| லேசான மழை |
| பலமாக நனைகிறது |
| குழந்தையின் மனம் |
| வெந்த சோறு |
| விஷமாக மாற்றியது |
| ஸ்டெர்லைட் |
தமிழ்நெஞ்சம் - ஜுலை 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
உண்மை...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete