மனித! மருந்திற்காக
ஆடு தின்றாய்
மாடு தின்றாய்
கோழி தின்றாய்
மீன் தின்றாய்
வரும் காலத்தில்
மனிதனே மனிதனைத் தின்றால்
மரணமில்லை யென்றொரு நிலை
வரும் அப்போது
விலங்கினங்கள் முதலிடத்திலும்
மனித இனம் பூஜ்யத்தில் இருக்கும்
இறைவா இப்போது சொல்
இயற்கை எந்த இடத்தில்
இருக்கும் ?
புல்லாகி புழுக்களாகி
கல்லும் காணாமல்
கடலும் பேணாமல்
வான் சுரந்த மழைகள் எல்லாம்
தான் பதித்த மண்ணில்
நோய் சுமந்து செல்லும் போது
சூரியன் உதிப்பது மேற்கு
சுற்றி மறைவது கிழக்கு
விண்மீன் கூட்டம் எதற்கென்று
விரட்டியடிக்கும் நிலவு
இரவு பகலாக
துன்பம் இன்பமாக
இருண்ட உலகம்
எடுக்கும் புதிய ஜெனனம்
அதில் நீ ஆண் நான் பெண்
சுழற்சி முறையில் இருந்தால்
உலகம் எப்படி இருக்கும் என்று
வடித்து பார்த்தேன்
வார்த்தைகள் ஊமையானது
வரிகள் உயிர்த்தெழுந்தது
இனியாவது உயிரை வதைத்து
உண்ணாதே மனிதா...!
கருத்துள்ள கவிதை... பாராட்டுக்கள்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…
இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_31.html) சென்று பார்க்கவும்...
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…
வலைச்சரம் வழியே இங்கு வந்தேன்.
ReplyDeleteபுலால் மறுப்போம் மறப்போம் எனும்
புலவன் வள்ளுவனின் கருத்தினை
பொன்னான வார்த்தைகளால்
பூ வைத்து பொட்டிட்டு
புனிதமாய் அலங்கரித்த
புதுமையும் என்னே !! என்னே !!
வாழ்த்துக்கள்.
உங்கள் பெயருக்கோர்
விளக்கமோ
உன்னதம்.
அதைப் படித்தபின்
நான் அடைந்ததோ
பரவசம்.
ஹி + ஷி + ஆல் + இ
அவனும் அவளும் இரண்டறக் கலந்த இறைவன்
அவன் ஒருவனே என்பது மறை.
படித்தவரோ பலவிதமாகப் பகர்வர்.
அவ்வளவே.
வாழ்க வளமுடன்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
தங்கள் வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல
Deleteமேலும் கவிதைக்கு கவிதையாய் பாராட்டியமைக்கு நன்றிகள்
என் பெயரின் விவரத்தை எனது நண்பர் ஒருவர் கூறினார் அதையே நானும் எனது பதிவில் இட்டுள்ளேன் ஆகவே இந்த நன்றி எல்லாம் எனது நண்பருக்கே அர்ப்பணம்.
மேலும் தங்கள் வருகையை அன்புடன் எதிர்பார்கிறேன்
நன்றிகள் ஹிஷாலீ
உங்கள் தளத்தை வலைசரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/08/blog-post_31.html
என் தளம்
http://kovaimusaraladevi.blogspot.in/
அப்படியா அன்பு நன்றிகள் பல
Deleteதங்கள் தளத்தையும் காண வருகிறேன்
வலைச்சரம் வழியே இங்கு வந்தேன்.
ReplyDeleteபுலால் மறுப்போம் மறப்போம் எனும்
புலவன் வள்ளுவனின் கருத்தினை
பொன்னான வார்த்தைகளால்
பூ வைத்து பொட்டிட்டு
புனிதமாய் அலங்கரித்த
புதுமையும் என்னே !! என்னே !!
வாழ்த்துக்கள்.
உங்கள் பெயருக்கோர்
விளக்கமோ
உன்னதம்.
அதைப் படித்தபின்
நான் அடைந்ததோ
பரவசம்.
ஹி + ஷி + ஆல் + இ
அவனும் அவளும் இரண்டறக் கலந்த இறைவன்
அவன் ஒருவனே என்பது மறை.
படித்தவரோ பலவிதமாகப் பகர்வர்.
அவ்வளவே.
வாழ்க வளமுடன்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
I could not know whether the comments I sent an hour ago reached or not, since power went off suddenly, and my desktop computer shut down on its own. So I am sending this again.
Sorry for interruption.
நிச்சியம் செய்கிறேன் தங்களின் மேலான ஆதரவுக்கு என் அன்பு நரிகள் பல
ReplyDelete