என் தலைமுறை செல்லமே இன்று
எங்கள் மார்பில் தவழும்
மூன்றாம் பிறையே உன்
தந்தை வாழ்த்தும் வாழ்த்துகள்
வானைப் போல் உயர்ந்த குணமும்
வாழை போல் தழைக்கும் மனமும்
தாயைப் போல் சிறந்த அறிவும்
தந்தை போல் துனிந்த கரமும் பெற்று
எல்லாம் வல்ல இறைவன் அருளால்
எந்நாளும் பொன்னாளாய் யாரும்
எழுதாத காவியமாய் பேசும் ஓவியமே
ஒரு நூறு வருடங்கள்
ஈருயிர் சுவைதனிலே பிறந்த மகளே - உன்னை
இதயமுடன் வாழ்த்துகிறோம் நாங்கள்
கனியமுதும் நல் குனமமுதும் பெற்று
கடவுள் அருளால் கல்வியமுதும் கிடைத்து
பிழையமுது இல்லா புகழுடன்
பேர் சொல்லும் பிள்ளையாய் - நீ
வேண்டிய செல்வத்துடன்
வேண்டாத துன்பம் அகற்றி
நம் சொந்தக் கூட்டில் பந்தங்களோடு
பாமரரும் போற்றும் வண்ணம்
பாதங்கள் பாதிக்கும் கண்ணே
என் பொண்ணே - நீ
வரைமுறை தமிழோடு இவ்வையம் போற்ற
வாழ்க பல்லாண்டு என் மகளே நீ வாழ்க பல்லாண்டு ...!
supper
ReplyDeleteThanks Brother
Deleteமூன்றாய் பிறையே ethan velakam enna?
ReplyDeleteMoonraam pirai thambi. varukaiku mikka nanrikal
Delete