ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த ராஜா மேல உயிரையே வச்சிருந்தா |
ஒரு நாள் அந்த ராஜா தன் பழைய காதல் தோல்வியில இந்த ராணியை தேடி வந்தான் ஆனாலும் அந்த ராணி பழச மறக்காமல் அந்த ராஜா கூட நல்ல நட்போடு பேசினாள் |
இப்படியே இவர்கள் நட்பு தொடர்ந்தது |
ஒரு நாள் அந்த ராணி இன்பச் சுற்றுளா செல்ல வேண்டி சூழல் இந்த விசயத்தை அந்த ராஜாவின் காதில் போட்டாள் அந்த ராஜாவும் போய் வா என்றான் |
அப்போது அந்த ராணி சொன்னாள் நான் எது செய்தாலும் உன் அனுமதி வாங்கியப் பின் தான் செய்கின்றேன் காரணம் என்னை நீ எப்போதும் நம்ப வேண்டும் அதே சமயம் நான் இன்னும் உன் விஷயத்தில் மாறவில்லையென நீ புரிந்துகொள்ள வேண்டும் ஆனால் நீ மட்டும் அப்படி இல்லையே ஏன் என்றாள் |
நீ என்ன பைத்தியமா என் பழக்க வழக்கம் வேறு நீ அப்படி இல்லை எனக்கு குட்மார்ணிங்,குட் நைட் சொல்ல ஒரு பிரண்ட்ஸ் சாப்டையா என கேட்க ஒரு பிரண்ட்ஸ இப்படி லிஸ்ட் போய்ட்டே இருக்கும் ஆனால் நீ மட்டும் எனக்கு எப்போதூமே ஷ்பெசல் தான் |
அப்ப நான் எந்த லிஸ்ட் ல இருக்கேன் ? |
நீ அந்த லிஸ்ட்டில் இல்லை உன் கிட்ட எப்படி பேசனும் மத்த பொண்ணுங்க கிட்ட எப்படி பேசனும் என்று எனக்குத் தெரியும் ஏனா நீ ஒரு பழம் சோ நீ வேர அவுங்க வேர |
ஒ அப்படியா நீ திருந்தவே மாட்டையா ஏன்டா இப்படி இருக்க |
நான் அப்படித் தான் எனக்கு அட்வைஸ் பண்ணுனா பிடிக்காது நீ சுற்றுலா போய் ஜாலியா எஞ்சாய் பன்னு ஒகே அப்புறமா நாம ஒரு நாள் கோவாவுக்கு போவோம் |
கோவா வா எத்தனை நாள் ஆகும் |
ஐந்து நாள் ஆகும் |
என்ன ஐந்து நாளா ம்ம்ம்கும் நான் வரலப்பா |
ஏன்? |
ஒரு பிரண்ட்டு கூட வெளியில் போய் தங்குற அளவுக்கு தைரியம் எனக்கு இல்லை அதே சமயம் அந்த மாதிரி பொண்ணும் நானில்லை அதற்கு வேர ஆள பாரு வேண்டுமென்றால் கோவிலுக்கு போகலாம் என்றாள் |
ம்ம்ம் சரி சரி நீ வர மாட்டேனு தெரியும் சும்ம தான் கேட்டேன் |
அதானே பார்த்தேன் நீயே ஒரு கஞ்சன் ஒரு காப்பி கூட வாங்கி தரமாட்ட நீ கோவாவுக்கு கூப்பிட்டு போறவனா |
இல்ல ராணி நான் அப்போம் பிச்சைக் காரண இருந்தேன் |
இப்போம் கோடீஸ்வரான இருக்கையோ ? |
ம்ம்ம் ஆமாம் |
எல்லாம் பணத்தின் ஆசை சரி எனக்கு வேலை இருக்கு அப்பரமாக பேசலாம் |
ம்ம்ம் ஓகே ஓகே |
உடனே அந்த ராணி தன் தோழிகளிடம் நடந்ததைச் சொல்ல அத் தோழிகள் ராணி இந்த நட்பு வேண்டாம் அந்த ராஜா நல்லவரா தெரியல விட்டுடுங்கள் என்றனர் |
ஏன்? |
அவர் எனக்கு குட்மார்ணிங் குட் நைட் சொல்ல ஒரு பிரண்ட்ஸ் சாப்டையா என கேட்க ஒரு பிரண்ட்ஸ, மத்தபடி வேற மாதிரி பேச ஒரு பிரண்ட்ஸ் என லிஸ்ட் போட்டு பேசும் போதே தெரிகிறது அவர் நிச்சயம் கெட்டவராக தான் இருக்க முடியும் அவரும் தங்களை எப்படியாவது அந்த லிஸ்ட்டில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முயற்சி செய்கிறார் இது உங்களுக்கு புரியவில்லை |
அடுத்ததாக கோவா -வை கூகுளில் பாருங்கள் என்ன கண்டராவியாக உள்ளது ஏன் இந்த ஊரை அவர் தேர்வு செய்ய வேண்டும் அங்கேயும் அவர் எண்ணம் சபலப் பட்டுவிட்டது |
அதை விடுங்கள் இதே போல் இன்னும் எத்தனை பேரை அங்கு அழைத்துச் சென்றாரோ யாருக்கு தெரியும் அதனால் தான் சொல்கிறோம் ராணி கொஞ்சம் கவனமாக இருங்கள் உங்களுக்கு வெளி உலகம் தெரியவில்லை இனியும் அவரை நம்பி பழகாதீர்கள் அப்பழக்கத்தை இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள் அது தான் உங்களுக்கும் நல்லது உங்கள் குடும்பத்திற்கும் நல்லது |
சரி தான் நீங்கள் கூறுவதும் ஆனால் இதுவரை என்னிடம் அவன் தவறாக பேசியதில்லை மேலும் அவன் என்னிடம் கண்ணியமாகத் தானே நடந்துகொள்கிறான் அப்படி இருக்கையில் என்னால் அவனின் நட்பை துண்டித்துக்குக் கொள்ள விருப்பம் இல்லை ஒன்று வேண்டுமானால் இந்த கேள்விக்கான விடையை அவனிடமே கேட்டு விட்டால் என்ன ? |
வேண்டாம் ராணி நீங்கள் கேட்டால் வீணாக சண்டை தான் வரும் பின் உங்கள் மனம் வாடும் சோகத்தில் மூழ்கிவிடுவீர்கள் பின் அவர் சொன்னது போல் உங்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் வரும் இது தேவையா காலம் பதில் சொல்லும் வரை கடவுளிடம் விட்டுவிடுங்கள் |
ம்ம்ம் நீங்கள் கூறுவதும் சரிதான் என்னால் அவனை மறக்கவும் முடியாது அதே சமயம் மன்னிக்காமல் இருக்கவும் முடியாது கரணம் முதல் காதலுக்கு வலு அதிகம் வயதும் அதிகம் தான் அதுவே நட்பாக மாறும் போது மௌனத்தின் சித்திரவதை அதைவிட அதிகம் இது உங்களுக்கு புரியாது |
ஆக எல்லோரும் தயாராகுங்கள் நாளை இன்பச் சுற்றுலா செல்ல |
சரிங்கள் ராணி நீங்கள் எப்போதும் போல் இப்படியே இருங்கள் அது போதும் எங்களுக்கு |
ஒரு ஊர்ல ஒரு ராணி !
Labels:
சிறுகதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் தந்தையிடம் கூறினாள் ...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
-
புயல் அடித்த சந்தோசத்தில் கரை புரண்டது அலை தந்தான் சுனாமி என்பதை மறந்து ...! ...
எழுத்துப்பிழை அதிகமா இருக்கு சகோ. கவனிங்க.
ReplyDeleteமத்தபடி கதை அருமை
திருத்தம் செய்துவிட்டேன் தகவலுக்கு மிக்க நன்றிகள்
Deleteநல்ல கதை...
ReplyDeleteபுதிய முயற்சிக்கு ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள் அண்ணா
Delete