தேடி விதைக்கவில்லை |
தெருக்களிலே உயர்ந்து நின்றாய் |
பாடித் திரியும் பறவைக்கெல்லாம் |
படுத்துறங்க இடம்கொடுத்தாய் |
ஓடி களைத்த உழவனுக்கு |
நிழல் முத்தம் கொடுத்து நித்திரையை தந்தாய் |
ஆடி பயிர் விதைத்து |
அடைமழைக்கு காத்திருக்க அன்னபூரணியாய் |
இந்த அகிலத்தையே காத்தாயே |
உனக்கு கைமாறு செய்ய |
உறவுக்கோர் மரம் நடுவேன் தாயே |
உன் உள்ளத்தை குளிர்விக்க ! |
மரம் வளர்ப்போம் !
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
அருமை இயற்கையின் வளத்திற்கு உறுதுணையானதை கவிதையாக்கியதற்கு பாராட்டுகள்
ReplyDeleteஉங்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டுக்கு எனது அன்பு நன்றிகள் பல
Deleteசெடி நட்டுட்டா போதுமா?! அதை காப்பாத்தனும்
ReplyDeleteமுதலில் மரம் நடுவோம் பின் தானாகவே அதை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்
அருமை... அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான பதிவு சகோ
ReplyDeleteமுதல் வருகைக்கும் அன்பு பாராட்டுதலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
Deleteரசித்தேன்.
ReplyDeleteவாருங்கள் ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Deleteஉங்கள் ரசிப்புக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்