தன்முனைக் கவிதைகள் நானிலு - 44

நீ ஒரு முறை 
வைத்த தீ எாிகிறது
நான் 
சாம்பலாகும் வரை

தன்முனைக் கவிதைகள் நானிலு - 42

நீ எனக்கில்லையென்ற
போதும் எப்படி
முடிச்சுப் போட்டது
அந்த ஒருதலைக் காதல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 41

என்
கொலுசொலியில் கேட்கிறது
உன் 
உயிரின் சங்கமம் 

கொலுசு - ஜனவரி - 2018

வேலிக்கு அப்பால் 
நெடிது வளர்ந்திருக்கும் 
கல்யாண முருங்கை 
பாவாடை விரித்தாற் போல் 
உதிர்ந்து கிடக்கும் 
பவளமல்லிப் பூக்கள் 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 40

உன்
நகக்கண்ணில்
தெரிகிறது என் 
அகக் கண்ணின் குறும்பு !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 39

நீ
சிறைவைத்த இடத்தில் தான்
கறைபடிந்திருக்கிறது
நம் முதல் காதல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 38

நீ
நடிக்கும் போதெல்லாம்
நான்
துடிக்கின்றேன் காதலில்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 37

நீ மன்னிப்பை
பரிசாகக் கொடுத்துவிட்டு
மெளனத்தை 
சுதந்திரமாக எடுத்துக் கொண்டாய்

எப்போதும் ..!

எப்போதும்
நன்றி சொல்வேன்
உன்னை
பத்திரமாக தரையிறக்கிய
மேகத்திற்கு

தன்முனைக் கவிதைகள் நானிலு - 36

தொட்டால் சிணுங்கும்
செடியை கேள்விப்பட்டிருக்கேன் 
அதென்ன தொடாமலே
சிணுங்குகிறது உன் கைபேசி

தன்முனைக் கவிதைகள் நானிலு - 35

தொட்டு பார்க்கும் 
ஆசையில் கெட்டுப்போனது
கள்ளம்கபடமில்லா 
பிள்ளை மனம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 34

விடாமல் துரத்தும்
முட்களுக்கு 
எப்படி தெரியும் 
ரோஜாவின் சுதந்திரம்

வாழ்ந்து காட்டு ...!

அன்பு 
வாழவிடாமல் 
வாழவைக்கும்
அம்பு
எத்தனை முறை
அறுவை சிகிச்சை
செய்தாலும்
மாறாத வடு

அவ்வப்போது
ஊசி போட்டாலும்
மறுத்துப்போன
வலி

இவைகளுக்கு மத்தியில்
மரணத்தை தழுவாமல்
வாழ்ந்து காட்டுவதுதான்
வாழ்க்கை வாழ்க ....!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...