மதுவென்று !

http://www.jihtn.org/wordpress/wp-content/uploads/2010/12/madu-copy.jpg1_.jpg

எத்தனை பேருக்கு தெரியும் 
ஏழைகளின் 
கண்ணீர் துளியில் 
நனையும் ...
தலையணைக்கு சொந்தக்காரன் 
மதுவென்று !

வானவில் ...!இதுவரை 
யாருமே எழுதாத கவிதை 
சொல் என்றதும் ...
ஊருக்காக அழுகும் வானம் 
நீ என்றால் ...
உன்னை 
உடுத்திக்கொள்ளும் 
வானவில் நான் என்பேன் !

என்னை மீட்டெடுக்க !
பாலிதீன் உண்ட மண் 
பாய்சனாகிக் கொண்டிருகிறது 
பசியே ?
எந்த மருத்துவரிடம் 
அழைத்துப் போவாய் 
என்னை மீட்டெடுக்க !

இடம் பெயர்ந்தது ...!உலகையே 
துயிலெழுப்பும் சூரியன் 
உன் 
நினைவுக்கு முன்னாள் 
இடம் பெயர்ந்தது 
இரண்டாம் இடத்திற்கு ...!

ஆயிரங்கால் ஜடை !ஆயிரங்கால் ஜடையை 
அசால்டாக 
பின்னி முடித்த எனக்கு 
ஆறறிவு படைத்த உன்னை 
பின்னி எடுக்க 
தடையாக இருக்கிறதோ 
இந்த தாலி ...!

இளையராஜா - 1000 !


இளையராஜாவின் 
இசை நூலில் 
நெய்த சேலையை 
உடுத்தியிருக்கும் 
சரஸ்வதி தாயே 
ஆயிரம் ஆயிரம் காலமாக 
இசைக்கு ஒருவன் 
அவன் இவன்தான் 
என்று 
மீட்டுகிறதோ உந்தன் வீணை !

அடடே ...!அடடே ...
யார் சொல்லியும் 
பலிக்காத கனவு
நீ
வந்து படித்ததும் 
பலித்ததே ..
எப்படி !

கரையான் அரிப்பது ...!கரையான் அரிப்பது
கலப்பையை மட்டுமல்ல 
காலத்தையும் 
அரித்துக் கொண்டிருகிறது
மக்களே ....
கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் 
செய்வதற்கு முன் 
கண் விழித்துப் பாருங்கள் !

சென்ரியு !எந்த சாதிக்காரன் 

செய்த அருவாளோ ? 

குறி பார்த்து வெட்டுகிறது!

வராத சாமி சொன்னது !


மெட்டி நரம்பு 
மெல்ல மெல்ல 
தளர்கிறது 
தாயே ...
கெட்டி மேளம் கொட்ட 
என்ன தடை என்று 
குலதெய்வம் முன் 
குறிகேட்ட போது 
வரதட்சணை என்று 
வராத சாமி சொன்னது !

தமிழ் வாசல் - மார்ச் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)


Paiya Movie Stills 35

கொட்டும் மலை அருவி 
விழுந்து ஓடுகிறது
மனங்களின் மகிழ்ச்சி
தினம் தினம் 
தத்தெடுக்கிறேன் 
ஒரு வாக்கு தத்தத்தை !
எண்ணி முடிக்க வில்லை 
எழுதிக்கொண்டே செல்கிறது 
வாழ்க்கை ...!
மழலை மொழியில்
எழுத தொடங்கியது
புதுப்புத்தகத்தில் கிறுக்கல்கள் !
பசி மறந்தனர் 
ஏழைச் சிறுவர்கள் 
கோரைக் கிழங்கு !
மூடு பனி 
மெல்லத் திறந்தது 
ரோஜா !
கரைவேட்டியை 
வெளுத்துக் கட்டினான் 
உதவாக்கரை !
கழிவுக் கிடங்குகள் 
சுத்தம் செய்ய செய்ய...
வாழ்க்கை மணமாகிறது!
விவசாயின் விடியலுக்கு 
கூவியது 
செவல்கொண்டைப்பூ !

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !கொட்டும் தேனீ 
வலிக்காமல் உண்ணும் 
பணக்காரன் !
ஆடிப்பெருக்கு 
ஆட்டிப்படைத்தது 
மூடநம்பிக்கை !
தீர்த்த யாத்திரை 
மிதக்கிறது
சடலங்கள் !

பெண்மையைப் போற்றுவோம் ....!


பெண்கள் ....
சதவீதத்தில் மட்டுமல்ல 
சகவீதியிலும் 
உயர்த்தப்படவேண்டும் !

பெண்கள் ...
சமஉரிமையில் மட்டுமல்ல 
சதை உயிரிலும் 
மதிக்கப்படவேண்டும் !

பெண்கள் ...
சகல துறையில் மட்டுமல்ல 
சன்மார்க்க நெறிமுறையிலும் 
போற்றப்படவேண்டும் !

பெண்கள் ...
ஆஸ்தியில் மட்டுமல்ல 
அந்தஸ்திலும் 
வாழ்த்தப்படவேண்டும் !

பெண்கள் ...
பால் பிரிவினையில் 
வேறுபட்டாலும்
பார் பிரிவினில் 
ஒன்றுபட்டு 
வாழவேண்டும் என 
வாழ்த்துங்கள் ....!

மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !

Womens-Day-wallpapes-images-pic

உலகின் 
முதல் பெண் 
ஆதி வாசி 
மெல்ல மெல்ல 
ஆடை வாசியானாள் !
கிள்ளி எரியும் 
கள்ளிப் பால் 
சங்கிலிருந்து 
மீண்டும் பிறந்து 
பாரத மங்கையானாள் ! 
இறுக்க மூடிக்கொள்ளும் 
கல்விக் கண்ணை 
உருக்கமெனப் படித்து 
பலம் பெரும் பட்டதாரியானாள் ! 
சரிக்கி விழும் 
வாழ்க்கை சுமையை 
இறக்கி வைக்கும் 
பூமி தாயானாள் !
விஞ்ஞானம் மெஞ்ஞானம்
பிரித்து 
அமுதம் கடைந்து 
அகிலமே பருகும் 
வண்ணம் 
சக்தி ரூபமானாள்  !
எருதுகள் பூட்டிய 
கைகளோ இன்று 
விருதுகள் படைக்கும் 
அதிசயப் பிறவியானாள்  !
நடை உடை பாவனை 
மாறினாலும் 
நல்லொழுக்கமே 
நாட்டின் கண்ணென 
திகழும் ஒவ்வொரு 
மகளீர் களுக்கும் 
எனது
மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !  

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !அழுகியதைக் கண்டு 
அழுவதில்லை 
கண்ணீர் பூக்கள் ..!
காக்கையின் எச்சம்
படிந்திருந்த கல்
பிரதிஷ்டைக்காக நிற்கிறது...!
சிறைசாலை 
சேர்ந்து பயணிக்கும் 
திருடனும் தியாகியும் ..!
கையுறை மீறி 
களவாடியது 
தெற்று நோய் ...!
நிஜமது தெரியாமல் 
நிழலை தேடும் 
வானம் ...!
உச்சி நீதி மண்டையில் 
மாட்டிக் கொண்டது 
மாட்டுப்பொங்கல் ...!
குயவன் கையில் 
சோறு போட்டது 
களிமண் ...!
பாதைகள் பல 
ஒரு வழிப் பயணமாய் 
வறுமை ...!
மனிதர்கள் நடுவில் …    
அசையாமல் இருக்கிறது 
வானம் ...!
நீர்நிலைகளுக்கு 
எமனாக மாறியது 
ஆகாய தாமரை ...!
வியர்வையில் வளர்கிறது 
வறுமையின் விதை ... 
துளிர்க்கும் நிம்மதி...!
ஒளிவு மறைவின்றி 
விற்கப் படுகிறது 
புகை மது ...!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...