
| கணினிக்கேது |
| கட்டுப்பாடு |
| கண்ணகி பிறந்த |
| மண்ணில் கலவிக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| அலைவரிசையில் |
| புலன் பெயரும் |
| அண்ணன் தங்கை |
| காதலுக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| எளியவர் பயணத்தில் |
| வலியவர் கொள்ளும் |
| சில்மிஷத்திற்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| காக்கைக்கும் |
| தன் குஞ்சு |
| தாய் குஞ்சு |
| என உணர்த்தும் |
| அப்பாக்களுக்கு |
| வேண்டும் காட்ப்டுபாடு |
| ஏழைகளின் |
| கோமணத்தை |
| களைந்து |
| சாசனத்தில் |
| தோள் கொடுக்கும் |
| அரசியலுக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| மக்காத நெகிழி |
| மதுகுவலையில் |
| குடித்து மடியும் |
| அஸ்தமனங்களின் |
| ஆண்மைக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| அங்கத்தை அளக்கும் |
| தங்கத்தின் மோகத்தை |
| தணிக்கும் சமூகத்திற்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| சர்வமத கூட்டனியில் |
| ஆதிகம் செலுத்தும் |
| ஜாதிகளுக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| சமுகமே |
| நீ பாடு நீ பாடு |
| தமிழர் பண்பாடு |
| நீ கூடு வெறும் கூடு |
| மரணித்தப்பின் எலும்புக்கூடு |
| இதை புரிந்து |
| ஓடு நீ ஓடு |
| தமிழர் பண்பாட்டை |
| காக்க ஓடு ...! |
வணக்கம்
ReplyDeleteஅற்புதமாக உள்ளது வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteதங்களும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
வணக்கம் நண்பரே! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! நான் புதியவன் உங்கள் தளத்திற்கு நன்றி!!!
ReplyDeleteஅன்பான வருக்கைக்கும் ஆதரவான பாராட்டிற்கும் அன்பு நன்றிகள் பல
Deleteதாங்களும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்