முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!கணினிக்கேது
கட்டுப்பாடு
கண்ணகி பிறந்த
மண்ணில் கலவிக்கு
வேண்டும் கட்டுப்பாடு
அலைவரிசையில்
புலன் பெயரும்
அண்ணன் தங்கை
காதலுக்கு
வேண்டும் கட்டுப்பாடு
எளியவர் பயணத்தில்
வலியவர் கொள்ளும்
சில்மிஷத்திற்கு
வேண்டும் கட்டுப்பாடு
காக்கைக்கும்
தன் குஞ்சு
தாய் குஞ்சு
என உணர்த்தும்
அப்பாக்களுக்கு
வேண்டும் காட்ப்டுபாடு
ஏழைகளின்
கோமணத்தை
களைந்து
சாசனத்தில்
தோள் கொடுக்கும்
அரசியலுக்கு
வேண்டும் கட்டுப்பாடு
மக்காத நெகிழி 
மதுகுவலையில் 
குடித்து மடியும்
அஸ்தமனங்களின்
ஆண்மைக்கு 
வேண்டும் கட்டுப்பாடு
அங்கத்தை அளக்கும்
தங்கத்தின் மோகத்தை
தணிக்கும் சமூகத்திற்கு
வேண்டும் கட்டுப்பாடு
சர்வமத கூட்டனியில்
ஆதிகம் செலுத்தும்  
ஜாதிகளுக்கு 
வேண்டும் கட்டுப்பாடு
சமுகமே 
நீ பாடு நீ பாடு
தமிழர் பண்பாடு
நீ கூடு வெறும் கூடு
மரணித்தப்பின் எலும்புக்கூடு
இதை புரிந்து 
ஓடு நீ ஓடு
தமிழர் பண்பாட்டை
காக்க ஓடு ...!

குறிப்பு : -
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை (4) புதுகவிதை போட்டிகள்! வளர்ந்து வரும் உலகில் பண்பாட்டின் தேவை!
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
இப்படிக்கு
ஹிஷாலீ .

6 comments:

 1. வணக்கம்
  அற்புதமாக உள்ளது வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா
   தங்களும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

   Delete
 3. வணக்கம் நண்பரே! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்! நான் புதியவன் உங்கள் தளத்திற்கு நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருக்கைக்கும் ஆதரவான பாராட்டிற்கும் அன்பு நன்றிகள் பல

   தாங்களும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...