கண்ணீர் அஞ்சலி - Dr ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ...! மாணவர்களே  
இளைஞர்களே 
 எனது … 
 துணைக்காலை 
 காலத்தில் ஊன்றியுள்ளேன் 
 பற்றிக்கொண்டு நடைபோடுங்கள் 
 வெற்றிப் பாதையை நோக்கி 
 உங்களை 
 கைதட்டி வரவேற்க 
 "கா"லம் காத்திருக்கும் க"லா"ம்  ..! 

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ...!இன்று 
கர்ப்பம் தரிக்கும் 
ஒவ்வொரு தாய்மார்களின் 
கருவறையில் 
கால்பதித்துள்ளார்   
கலாம் என்று 
கனவு காணுங்கள் 
இளைஞனே 
வானீர் உப்பாகலாம் 
தேநீர் கசப்பாகலாம் 
பூநீர் மனம் மாறலாம் 
என்றும் மாறாது  நீவிர் வரலாறு 
என்னைக் 
கண்ணீர் கொண்டு கழுவாதீர்கள் 
முன்னேற 
முந்நீர் கொண்டு முயற்சியுங்கள் 
வான் சென்ற விண்கலம் போல் 
வல்லரசாக்கிக் காண்பீர் ...!

(அவரின் ஆத்துமா சாந்தியடையட்டும் )

தும்மல் வழியாக ...!


உன் 
சிரிப்புக்குள் இருக்கும் 
ஆனந்தத்தை 
என் 
சிந்தைக்குள் 
இருத்தி வைத்திருக்கிறேன் 
நீ 
வெறுப்பு கொள்ளும் நேரத்தில் 
அதை விதையாக துவிடுவேன் 
தும்மல் வழியாக  ...!

எம்.எஸ்.வி. பற்றி கருத்து ...!மெல்லிசையின் 

தாய்ப் பால் வற்றினாலும் 

தாலாட்டு வற்றாத 

நதியைப்போல்  சுற்றிக் கொண்டிருக்கும் 

பூமி சுற்றும் வரை ...! 

சாலையோர ஓவியன் ...!ஓவியத்தில் 
ஒதுங்கி நிற்கும் கண்கள் 
மெல்ல மெல்ல நகர்வதை 
உணர்கிறான் 
சாலையோர ஓவியன் ...!

பத்தும் பறந்தோடும் ..!சிரிக்க 
கத்துக் கொடுக்கும் 
பூக்களை விட

சிந்திக்க 
காத்திருக்கும் 
மழையை நேசி 
பத்தும் பறந்தோடும் ..!

பயந்தாங்கொள்ளி ...!காதலில் 
பயந்தாங்கொள்ளியாய் 
இருந்தவனுக்கு 
"கொள்ளி" வைத்தது 
சாதி ...!

சபிக்கும் போது ...!துரோகத்தில் 
வாழ்த்திய 
காதலியை
நினைவுட்டிய தாய் 
கோவத்தில் 
சபிக்கும் போது ...!

ஹிஷாலியின் ஹைக்கூ ...!ஒரு மனதாய் 
தேர்ந்தெடுத்தனர் 
மோதிரவிரல் ...!
எந்த நூற்றாண்டின் 
கண்ணீரோ 
உப்புகரிக்கிறது கடல் ...!
திசைக்கு ஒரு ஜாதி 
வழிகாட்டியது 
தபால் காரனுக்கு 
என்றும் பழைய ஆறு 
புதுப்பொலிவுடன் 
அரசியல்வாதி ...!
முத்தான தமிழ் 
வெட்கப்பட்டுகிடக்கிறது 
சிப்பிக்குள் ...!
ஆங்காங்கே தெரிகிறது 
வறுமைக் கோடு 
வரைபடத்தில் ...!
அழுகையை தவிர 
சிலுவை
நிலுவையில்  உள்ளது ...!
யாருக்கு கும்பாபிஷேகம்
நைவேத்தியம் செய்கிறது 
மழை ...!
சிறு விதை 
பெரிய வரலாறு படைத்தது 
இறங்குவரிசையில் ...!
என்ன சாதியே மதமோ
கணக்கெடுப்பு செய்கிறது 
காலம் ...!
வெயில் காயிது 
மையில் இறகாய் 
அவள் ...!
எங்கிருந்தோ எரிக்கிறான் 
உருகுகிறேன் 
மெழுகாய் ...!
ஆடும் கிளைகள்  
அசையமருப்பதில்லை 
கிளையறிந்து ...!
கிழே விழுந்த சூரியன் 
மேலே எழும்பி 
ஓடியது கிழே ...!
திராவிட வேதம் 
மாறி படிக்கிறது 
குருகுலத்தில் ...!
மனக்காத செடியில் 
எத்தனை மணக்கும் 
மலர்கள் ...!
உடலை வருத்தும் 
வேண்டுதல் தேற்றியது 
பலி ஆடு 
தாய் பாலை மறந்த 
வண்டுக்கு பாடம் கற்பித்தது 
தேன் கூடு 
விதைத்தது தவறானாலும் 
வீண் போவதில்லை 
அறுவடை ...!
வலிகள் அறியா 
மொழிகள் 
மருந்தானது காகிதத்தில் ...!

உலகமே இருண்டிருக்கும் ...!என்றோ
எழுதப்பட்ட காதல் எல்லாம்
இன்று வரை
எடுத்துக் காட்டாகத் தான் உள்ளது
யாரும் எடுத்துரைக்கவில்லை 
படித்தும் பயன் பெறவில்லை
பிடித்திருந்தால்
பிழையை
உலையில் போட்டு
கொதிக்க விட்டுருப்பான்
தேவதாஸ் ...
புரிந்திருந்தால்
அம்பிகாவதி அமராவதி
மருந்தாக உண்டிருப்பார்கள்
அடிமைக்கு விலை போன
சாதி மதங்கள் எல்லாம்
அகதி முகாமில் மாண்டிருக்கும்
மிஞ்சிய செல்கள் எல்லாம்
வஞ்சிக் கொடிக்கும் வாழ்க்கை
தந்திருக்கும்
வாங்கப்படாத வார்த்தைகள்
எல்லாம்
விற்கப்பட்ட கவிஞர்களிடம்
வெட்கப்பட்டு அழுதிருக்கும்
கிழித்து எரியும் பத்திரிக்கை
ஒளிந்து விளையாடும் மெட்டி
ஒத்திகை பாராதிருந்தால்
உலகமே இருண்டிருக்கும்
ஆனால் 
இடைப்பட்ட நேரத்தில்
ஈர்க்கபட்ட 
ஆதம் ஏவாள் 
என்னவென்று 
இதுவரை குறிக்கப்படவில்லை 
பள்ளி சான்றிதழில் ...!

சில்லுனு ஒரு காதால் ...!
ஒரு முறை புசிக்கபட்ட 
இதயம் 
மறு முறை ருசிக்க 
தொடங்கியது 
சில்லுனு ஒரு காதால் ...!

மூடப்பட்டது பாச அறை ...!


பூஜையறை 
சமையலறை 
படுக்கையறை 
கழிவறை 
என்று வாஸ்து பார்த்து 
கட்டிய வீட்டில் 
மூடப்பட்டது பாச அறை ...!

ஏழையின் இரத்தம் ..!செங்கல் மணல் 
சிமெண்ட் ஜல்லி
கலவையுடன் சேர்த்து 
வண்ணம் கொடுக்கிறது 
ஏழையின் இரத்தம் ..!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...