குளிர்காயலாம் ...!



அணையும் நிலா 
ஒளிரும் சூரியன் 
மிளிரும் பறவைகள் 
சாட்சியுடன் 
மணமுடிக்க 
மனம் தேடுகிறது 
மயிலே 
தோகை விரிப்பாயா 
கொஞ்சம் குளிர்காயலாம் ...!

அந்திநேரத்தில் ...!



உன் சத்தத்தில் 
உதிர்ந்த பனித்துளியை 
கோர்த்து 
சட்டை தைத்திருக்கிறேன் 
அந்திநேரத்தில் 
போர்த்திக்கொள்ள ...!

கண் திருஷ்டி சுடராக ...!



கற்பூரம் ஏற்றி
கை தொழுத 
காதலை 
தூக்கி எறிந்துவிட்டாள் 
கண் திருஷ்டி சுடராக ...!

வாட்சப்பில் ..!


ஒரு கணம் 
பறவையாய் மாறினேன் 
கடல் தண்டி 
இருக்கும் உனைக் காண 
கண்டதும் 
தெறித்து ஓடும் சிறகுகள் 
மெய்சிலிர்த்துப்போனது 
வாட்சப்பில் ..!

தஞ்சாவூர் பொம்மை ...!



பட்டாம்பூச்சி போல்  
தொட்டத்தில்லை 
பனித் துளியாய் 
முத்தமிட்டதில்லை 
சலவை துணியாக 
இறுக்கி அணைத்ததில்லை 
இருந்தும் 
கண்ணீரில் கொதிக்கும் 
காதல் மறுக்கிறது 
வேறொருவன் கையில் 
தஞ்சாவூர் பொம்மை போல்
தலையசைக்க ...!

எதிர்ச்சொல் ...!




உன்னை 

பிடிக்கும் என்றதும் 

இலக்கணத்தை தேடினேன் 

முடித்துவிட்டான்/ ள் 

எதிர்ச்சொல்லில் ...! 

கண்ணீர் அஞ்சலி ...!

கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red )

அலச்சியத்தில் 

தண்ணீர் கொடுக்கா பிள்ளை 

ஆண்டுதோறும் 

கொடுக்கிறது 

கண்ணீர் அஞ்சலி ...!

சரித்திரத்தில் ...!



நரகமோ கிரகமோ 
நான்கு நிமிடம் தான் 
அதற்குள் 
நாலாயிர திவ்ய பிரபந்தம்
எழுதிவிடுகிறது 
சரித்திரத்தில் ...!

கல்லறை நினைவுகளை ...!



அனுபவமே இல்லா 
ஆசையின் 
கேள்வி கணைகளை 
தொடுக்கையில் 
அரக்கியானேன் 
எச்சில் நனையாத 
விசும்பின் 
வார்த்தை ஜாலங்களை 
தடுக்கையில் 
 ராட்சசியானேன் 
சுவையோ அறியாத 
தேக நீரின் உருகு நிலை 
குறையும் தருவாயில் 
பேயானேன் 
ஆனாலும் 
முறித்துக் கொள்ளவில்லை 
காதலில் பிரியும் 
கல்லறை நினைவுகளை ...!

கருணாநிதிக்கு 92-வது பிறந்த நாள் வாழ்த்து ...!




கருணாநிதியே ...
புறஜாதிப் பூக்கள்
உன் திருவடி தொழுகையில்
கண்டோம் பாரதியாக ...!
பகல் இரவு பாராது
பச்சி முதல் பாமரருக்கும்
உழைக்கையில்
கண்டோம் பெருமாளாக ...!
சட்ட திட்டங்கள்
சாட்சி மாறுகையில்
சட்ட சபை ஏறி
சவால் விடுகையில்
கண்டோம் அம்பேத்கராக..!
விழுந்த விதை
எழுந்து வருகையில்
விழுந்து வணங்கும்
மக்கள் நடுவில்
கண்டோம் சூரியனாக ...!
வயது தளர்ந்தாலும்
வரலாறு படைக்கும்
பேனாவின்
அகிம்சை மொழியில்
கண்டோம் காந்தியாக ...!
தூற்றுவோர் தூற்றினாலும்
துவண்டுவிடா திராவிடனின்
மூச்சுக் காற்றில்
கண்டோம் போதிமர புத்தனாக ...!
ஏன் பிறந்தோம்
ஏன் வளர்ந்தோம்
என்றில்லாமல்
எல்லோர் நலன் கருதி
வாழ்வதில்
கண்டோம் கர்ணனாக ...!
எட்டாத இடத்தில்
இருந்தாலும்
தி.மு கா வில் பட்டா போட்ட
தலைவனே
தமிழ் உள்ளவரை
உன் தலை வாழ்ந்திருக்க
கண்டோம் சரஸ்வதியாக ...!
தமிழுக்கு பசியூட்டிய
கவி செம்மலே உன்னை
காவல் தெய்வமென்று
வணங்குவதில்
கண்டோம் கடவுளாக ...!
திறமைக்குப் பரிசளித்து
வறுமைக்கு
விடை கொடுக்கும்
விருதாகக் கண்டோம்
அதிசயங்களின் ஒன்றாக ...!
ஈரடியால் வாழும்
வள்ளுவனுக்கு
ஆறடி சிலை வைத்த
கன்னியாகுமரியில்
கண்டோம்
கலங்கரை விளக்கமாக ...!
இப்படி கண்டெடுத்த
அஞ்சுகத்தின் முத்தே
தி மு கவின் சொத்தே
நின் புகழ் வாழ்க நூறாண்டு ...!

செமிப்பாக மாறும் செய் கூலி சேதாரம் ...!



1 gm     8 gm
2544     20352
8 x 35 280
Total 712320
15% 106848
vat 1% 7123.2

Total 826291.2
என்னங்க மேல கணக்கு போட்டிருக்கேனா
இந்த காலத்தில் வரதட்சனை என்பது அத்தியாவசமான ஒன்றாகிவிட்டது அதற்கு காரணம் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தான்.
அதை கொஞ்சம் மாற்றும் முறையில் ஒரு திருமணத்தில் பிறந்த கருத்தை இங்கே தெரிய படுத்த விரும்புகிறேன்
சுமார் 35 பவுன் நகை கேட்டால் அதற்கான மொத்த செலவு சுமார் ரூ 8,25,000/- ஆக்கும்
அதன் விவரம் மேலே சொல்லியிருக்கிறேன்
இதில் செய்கூலி சேதாரம் என்று சுமார் 1,25,000/- சரி நகை வாங்கிவிட்டோம் அடுத்து இந்த நகையை வீட்டில் வைத்தால் திருடன் தொல்லை கழுத்தில் அணிந்தால் வழிப்பறி தொல்லை சரி விடுங்கள் வங்கியில் வைத்தால் மாதா மாதம் வட்டி கட்ட வேண்டும். எவ்வளவு நாளைக்கு அந்த வட்டியை கூட்டி பாருங்கள் உங்களுக்கு புரியும்.
இல்லை எதோ அவசர செலவு என்று வங்கயில் அடமானம் வைக்க போனால் அதற்கும் வட்டி !!
சரி அடமான தொகை பத்தவில்லை என்றால் வெளியில் கடன் வாங்க வேண்டும் பின் அதற்கும் வட்டி கட்ட வேண்டும். இதை சமாளிக்க விற்கப் போனால் அப்போது வாங்கிய தொகையை விட சுமார் (1,25,000/- ) குறைத்து தான் விற்க வேண்டும். அதுவும் போதவில்லை என்றால் கடன் தான் தீர்வு
ஏன் இந்த போராட்டம்
நகைக்கு பதில் பணமாகவே கொடுத்து பாருங்கள் அது உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை கூறுகிறேன்
முதலில் அந்த 8,00,000/- யை வங்கியில் FD போடுங்கள் சுமார் ஒரு வருடத்திருக்கு 
(100000 /- க்கு ரூ 800 வீதம் வட்டி தொகை (800x8=6400 x12 = 76,800/-) கிடைக்கும் .

இதில் வருட வட்டி 10,000/- க்கு மேல் போனால் வங்கி வரி 10% (7680) போக உங்களுக்கு எவ்வளவு லாபம் இருக்கிறது இதனால் நாடும் வருமான வரியால் பயன் பெரும்.
இல்லை இருவர் கணக்கிலும் பாதிப்பாதியாக போடுங்கள் இன்னும் வருமான வரி குறையும் வாய்ப்பு உள்ளது.
இந்த இலாபத்தை வைத்துக்கொண்டு உங்களின் சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்
இல்லை என்றால் உங்கள் வருங்கால குழந்தையின் கல்வி செலவிற்கு பயன்படுத்தாலம்,மாதம் மாதம் Insurance தொகை கட்டலாம், சீட்டு போடலாம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இல்லை அதே வங்கியில் மறு சேமிப்பில் சேமிக்கலாம், இதனால் உங்கள் மனைவி வீட்டில் இருந்துகொண்டு மாதம் ஒரு வருமானத்தை ஈட்டுவது போல் தன்னம்பிக்கைபிறக்கும்.

கொஞ்ச நாள் சுய கழித்து தொழில் தொடங்க உதவியாக இருக்கும்
சும்மா அறையில் பூட்டி கிடக்கும் நகை எவ்வளவு உதவியாக இருக்கிறது 
இதனால் நிச்சயம் ஒரு குடும்பம் வளரும் என்றால் நாடு வளராதா ?

யோசியுங்கள் இப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் நகையின் மீது இருக்கும் மோகம் குறையும், விலையும் குறையும் கீழ் மட்டத்தில் இருக்கும் குடும்பங்களும் பயனைடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.

mhishavideo - 145