
| கருணாநிதியே ... |
| புறஜாதிப் பூக்கள் |
| உன் திருவடி தொழுகையில் |
| கண்டோம் பாரதியாக ...! |
| பகல் இரவு பாராது |
| பச்சி முதல் பாமரருக்கும் |
| உழைக்கையில் |
| கண்டோம் பெருமாளாக ...! |
| சட்ட திட்டங்கள் |
| சாட்சி மாறுகையில் |
| சட்ட சபை ஏறி |
| சவால் விடுகையில் |
| கண்டோம் அம்பேத்கராக..! |
| விழுந்த விதை |
| எழுந்து வருகையில் |
| விழுந்து வணங்கும் |
| மக்கள் நடுவில் |
| கண்டோம் சூரியனாக ...! |
| வயது தளர்ந்தாலும் |
| வரலாறு படைக்கும் |
| பேனாவின் |
| அகிம்சை மொழியில் |
| கண்டோம் காந்தியாக ...! |
| தூற்றுவோர் தூற்றினாலும் |
| துவண்டுவிடா திராவிடனின் |
| மூச்சுக் காற்றில் |
| கண்டோம் போதிமர புத்தனாக ...! |
| ஏன் பிறந்தோம் |
| ஏன் வளர்ந்தோம் |
| என்றில்லாமல் |
| எல்லோர் நலன் கருதி |
| வாழ்வதில் |
| கண்டோம் கர்ணனாக ...! |
| எட்டாத இடத்தில் |
| இருந்தாலும் |
| தி.மு கா வில் பட்டா போட்ட |
| தலைவனே |
| தமிழ் உள்ளவரை |
| உன் தலை வாழ்ந்திருக்க |
| கண்டோம் சரஸ்வதியாக ...! |
| தமிழுக்கு பசியூட்டிய |
| கவி செம்மலே உன்னை |
| காவல் தெய்வமென்று |
| வணங்குவதில் |
| கண்டோம் கடவுளாக ...! |
| திறமைக்குப் பரிசளித்து |
| வறுமைக்கு |
| விடை கொடுக்கும் |
| விருதாகக் கண்டோம் |
| அதிசயங்களின் ஒன்றாக ...! |
| ஈரடியால் வாழும் |
| வள்ளுவனுக்கு |
| ஆறடி சிலை வைத்த |
| கன்னியாகுமரியில் |
| கண்டோம் |
| கலங்கரை விளக்கமாக ...! |
| இப்படி கண்டெடுத்த |
| அஞ்சுகத்தின் முத்தே |
| தி மு கவின் சொத்தே |
| நின் புகழ் வாழ்க நூறாண்டு ...! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...