ஹிஷாலியின் ஹைக்கூ

கள்ளிப்பாலில் தப்பித்து 
விழுந்தது 
பாலியலில் ..!
ஆந்தை கூட்டத்தில் 
அலைமோதும் 
புறாக்கள் ...!
முடிந்த பின்பும் 
வாழ்க்கை கொடுக்கும் 
பூக்கள் ...!
விதையாக இருக்கிறேன் 
விளை நிலமாக்கும் 
பயிராக அவள் ?
குளத்தை வெறுத்ததில்லை 
காத்திருக்கும் 
கொக்கு ...!
நூறு மடங்கு பலன் 
ஒற்றை 
விதையில் ...!
இழந்து போன 
என்னை தேடிவந்தது 
உண்மை காதால் ...!

சுவற்றில் ...!விரலை அலங்கரிக்கும் 
மோதிரத்தை 
கழட்டி கழட்டி 
மாட்டுவது போல் 
சுவற்றில் 
என்னையும் கழட்டி 
மாட்டிவிட்டாயோ !

அருவி இதழ் எண் : 22நிலவை வைத்து 
எழுதினேன் 
பால் நிலவானாய் 
நினைவை வைத்து 
எழுதினேன் 
தேன் நிலவானாய் 
காற்றை வைத்து 
எழுதினேன் 
கதிரியக்கமானாய் 
கல்யாணத்தை வைத்து 
எழுதுகையில் 
"கல் " மனம் மானாய்  ..! 

மரண நேயம் ...!


விபத்தில் நசுங்கிய 
உடலை 
ஸ்ட்ரச்சரில் ஏற்றப் 
போவதற்குள் 
கீழோர் மேலோர் 
என்று பார்ப்பதில்லை 
மரண நேயம் ...!

சென்றாயோ !மனதைத் தொட்ட 
வார்த்தை 
உடலை விட்டு 
சென்றாலும் 
உள்ளத்தை விட்டு 
செல்லாத போது 
நீ மட்டும் எப்படி 
இவ் உலகத்தை விட்டு 
சென்றாயோ !

தெரிவதில்லை ...!மேயும் கண்களுக்கு 
தெரிவதில்லை 
கண்ணை குருடாக்கியது 
காதல் என்று ...!

ஹிஷாலியின் ஹைக்கூ (பொங்கல் ...!)

குலவை சத்தத்தில் 
பிறந்தது 
பொங்கல் ...!


(அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்)

கடல் ராணி ...!
தோல்வியை 
மறந்துவிட்டு 
சிரிக்கிறது அலை 
தன் கரை ராஜாவை 
தொட்டு தழுவப் 
போவதை நினைத்து...!

முதிர்கன்னி ...!

முதிர்கன்னி

வயதாகியும் 
நிறம்மாறா 
நிலவைப் போல ...
வயதாகியும் 
மணமாகாமல் 
காத்திருக்கும் 
முதிர்கன்னி ...!

கருப்பு பணமாக ...!


India’s move to shore up rupee hits stocks, bonds

அடிமை சங்கிலியை 
உடைத்தெறிந்த 
காந்தி 
அடிமை பட்டு கிடக்கிறார் 
அயல் நாட்டு வங்கியில் 
கருப்பு பணமாக ...!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...