ஹிஷாலியின் ஹைக்கூ

கள்ளிப்பாலில் தப்பித்து 
விழுந்தது 
பாலியலில் ..!
ஆந்தை கூட்டத்தில் 
அலைமோதும் 
புறாக்கள் ...!
முடிந்த பின்பும் 
வாழ்க்கை கொடுக்கும் 
பூக்கள் ...!
விதையாக இருக்கிறேன் 
விளை நிலமாக்கும் 
பயிராக அவள் ?
குளத்தை வெறுத்ததில்லை 
காத்திருக்கும் 
கொக்கு ...!
நூறு மடங்கு பலன் 
ஒற்றை 
விதையில் ...!
இழந்து போன 
என்னை தேடிவந்தது 
உண்மை காதால் ...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு