ஹிஷாலியின் ஹைக்கூ ...!

தியாகிகள் எல்லாம் 
வியாதிகள் போல் 
வந்து வந்து  சாகிறார்கள்
நினைவு தினத்தன்று ...!

இடி மின்னலுடன் 
தீ மழை 
கைதட்டி சிரித்தனர் குழந்தைகள் ...!
அடை மழை 
எச்சரிக்கை செய்கிறது 
ஆம்புலன்ஸ் ...!
வெள்ளப் பெருக்கு 
உயிர்கோளம் பூண்டது 
முத்தம் ...!
எந்த கண்களுக்கு 
தெரிவதில்லை 
கண்ணீரும் கழிவென்று ...!
கனமழை 
லேசாகிப்போனது 
உழவன் மனம் 
கனமழை 
மகிழ்ச்சிவெள்ளத்தில் 
உழவன் ...!
வயலோரத்தில் 
அழிகிய மலர்கள் 
நிலைக்கவில்லை  நீண்டகாலம் ...!

3 comments:

  1. முதலாவது புரியலை....
    மற்றவையெல்லாம் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145