எல்கேஜி முதல் எலும்புக்கூடு வரை ...!

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!


எல்கேஜி சாதி 
எலும்புக்கூடு வரை 
எரிகிறது ....
பின் எதற்கு 
வேஷம் !
அன்று 
இனம் கொள்ள 
சாதியைப் படைத்தான் 
இன்று 
இதயம் கொள்ள 
சாதியை வெறுத்தான் 
கோசம் போடும்
மொழியும் வழியும் 
பழியாகும் தேசத்தில் 
உதிக்கும் சூரியனும் 
உயர்ந்தவனில்லை 
உலவும் நிலவும் 
கூட தாழ்ந்ததில்லை - ஏன் 
அழியும்  
உயிர்களுக்கு மட்டும் 
இந்த ஆதங்கம் 
அத்தனையும் 
ஓர் நாள் 
அடங்கிவிடும் பணப் பாதங்கம் 
அய்யோ என்றாலும் 
ஆருயிர் திரும்பாது
அதற்குள் அறிந்துகொள் 
இதுவே ஆரம்பம்
அதுவே உலகின் ஓரின்பம் ...!

10 comments:

 1. இந்த சாதிக் கொடுமை என்று முற்றிலும் தீருமோ...?

  ReplyDelete
  Replies
  1. தீரவே தீராது என்று தான் நினைக்கின்றேன் ...

   Delete
 2. உண்மை..நல்ல கவிதை ஹிஷாலீ

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அக்கா ...

   Delete
 3. கவிதை கருத்தாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் நண்பரே ...

   Delete
 4. நன்று சொன்னீர் சகோ.
  சாரி இரண்டொழிய வேறில்லை
  என்று சொல்லிக் கொடுக்கிறோம்
  ஆனால் நடைமுறையில்...

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்பவர்களே சாதியை பிரித்துப் பார்க்கிறார்கள் என்று தான் நினைக்கிறன்

   Delete
 5. கருத்தாழம் மிக்க கவிதை.வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
 6. அன்று
  இனம் கொள்ள
  சாதியைப் படைத்தான்

  இன்று
  இதயம் கொள்ள
  சாதியை வெறுத்தான்

  அன்றும் இன்றும் அழகு ...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...