புதையல் - 2






ஹாய் பாட்டி ஹௌ ஆர் யு  ...

நான் நல்லா இருக்கேன் தங்கம் நீ எப்படி இருக்க படிப்பெல்லாம் முடிஞ்சதா 

ம்ம்ம் முடிஞ்சது பாட்டி நான் தான் மாநிலத்திலே முதல வருவேன் ....

என் ராசாத்தி இனிமேல் உனக்கு கல்யாண யோகம் தான் 

போ பாட்டி எப்ப பாத்தாலும் கல்யாணம் கல்யாணம் சொல்லியே என்ன வெறுப்பேத்துற 

இல்லடிமா எனக்கும் வயசாகிடுச்சி உனக்கும் ஒரு துணை வேணுமில்லா அதான் 

ஒகே ஒகே அப்படினா நான் சொல்லுற மாதிரி தான் நீ மாப்பிளை பாக்கணும் சரியா 

ம்ம்ம் சொல்லடி தங்கம் ...

ஆல்ஹஹால் கலக்காத ஆணழகனா 

பெண் வாசமே காணாத பேரரசனா 

மண் வாசம் குறையாத மன்மதனா 

புகை பிடிக்காத பேரழகனா 

மொத்தத்துல 
புராண ராமனா இல்லாம
புதிய ராமனா
வன வாசம் தராத 
வாழ்க்கை துணைவனா வேண்டும் 

உன்னால முடியுமா ? முடியாது பாட்டி இருந்தாலும் அப்படி ஒருத்தன நீ தேடிக் கொண்டிரு 

நான் தோண்டிக் கொண்டிருக்கிறேன் சரியா என்று அங்கிருந்து நகர்ந்தாள் 

இறைவா என் பேத்தியையும் ஆனாதையாக ஆக்கிவிடாதே என்று புலம்பினாள் பாட்டி 

அனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் தாத்தாவின் இறுதி கட்டளைப்படி அந்த புதையலை தேடிச் சென்றாள் அங்கே வெறும் ஸ்ரீ விவேகனந்த சுவாமி  என்று தான் இருந்தது அந்த ஓலைச் சுவடியில் மனதில் ஒரு குழப்பம் அப்படி இப்படி என்று ஒரு வழியாக முயற்சித்தாள் 

ஸ்ரீ வி வே  க  ன  ந்  த  சு  வா  மி  
1     2     3      4   5    6   7   8     9     0

ஸ்ரீ + மி = 10
வி +வா = 11
வே +சு = 11
க +த = 11
ன + ந்  =11

சோ 11 ன  1+1 போட்டா = 2 அப்படினா முதலிடம் வருவது 10 

பாட்டி ...

என்னடா தங்கம் தாத்தாவோட பட்டப் பேரு என்ன?

ராவணன் 

அவரோட சொந்த ஊர் ? இலங்கை தானே 

ஆமாம் டா இப்ப ஏன் இதெல்லாம் கேட்குற 

சும்மா தான் பாட்டி ஒகே நன்றி பாட்டி தாத்த சொன்ன மாத்திரி "தலையறுத்து தங்கை மண் புதைத்த மன்னா உன்பின்னால் தான் என் புன்னகை" என்ற வரி ஞபகம் வந்தது 

உடனே பூஜை அறைக்கு சென்றாள் அங்கிருந்து எதிர் நோக்கினாள் எதிரே இராவணன் புகைப்படம் தொங்கியது 

குழப்பத்துடனே பூஜை அறையில் இருந்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தாள் பத்தடியில் இராவணன் போட்டோ வந்தது 

சற்று சிந்தித்தாள் புன்னகை என்றால் பெண்கள் எத்தனை நகைகள் அணிந்தாலும் புன்னகைக்கு ஈடே கிடையாது சோ புன்னகையுடன் போட்டோவை விலக்கிவிட்டு தட்டிப் பார்த்தாள் சத்தம் வித்தியாசமாக இருந்தது அங்கே தோண்டினாள் நவரத்தினங்களும் மின்னியது பாட்டியை அழைத்தாள் பாட்டியும் தன் பேத்தியின் அதித புத்தியைக் கண்டு பாராட்டினாள் 

சரிடா தங்கம் இதை வைத்து என்ன செய்யப் போகிறாய் 

அதுவா பாட்டி என்னைப் போல் இந்த மண்ணில் எத்தனையோ பேர் அனாதையாகவும் ஆதரவு இல்லாமலும் தவிப்பவருக்கு நானே கூட இருந்து உதவப் போறேன்  

உன் கல்யாணம் 

இறவன் விட்ட விதி பாட்டி ....

சுபம் !


5 comments:

  1. ராசாத்திக்கு தங்கமான மனம்... நல்ல கதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா ...

      Delete
  2. சுவையான கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா ...

      Delete
  3. மிக்க நன்றிகள் அண்ணா ...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145