இம் மனிதர்களினும் விலங்குகளே மேல் !

















எளிமையாய் 
பெருகுது பாலியில் அதை 
எழுதும் விலையே நாளிதழ் 

பழமையாய் நாறுது 
வழக்கியில் பின் 
பாவத்தின் தீர்ப்போ கணக்கியில் 

யாகத்தின் வெருப்பில் 
கசக்கி எறிந்த குப்பையை 
காளை மாடு சுவைத்ததில் 

தூக்கிய சாணியில் 
துக்க சரித்திரம் வரைந்தது
இம் மனிதர்களினும் 
விலங்குகளே மேல் !





விளையாட்டு ...!



விளையாட்டில் மட்டும்
விளக்கி வைத்தோம்
ஜாதி மாத பேதத்தை

முடிந்ததும்
தொடர வைத்தோம்
வெற்றிப் பரிசு
எந்த ஜாதி மாத பேதத்துக்கு என்று !

அடடே ...
இறைவனி‎ன் திருவிளையாட்டில்
இதுவும் விளையாட்டானது

இப்போது புரிந்ததா
உலகம் அழிவை நோக்கி
விளையாடுகிறது என்று ...!


ஹைக்கூ - விளையாட்டு




விலை மருவி
விளையாட்டானது
விளம்பர நாட்டில் ...!


மட்டை பந்திற்குள்
கத்தை நோட்டுகள்
களவாடும் அம்பயர் ...!



பாலியில் வைரஸ் ...!


பறவைகள் கூட 

பசியாறப் பயப்படுகிறது 

எங்கே ...

பாலியில் வைரஸ் 

தொற்றிக்கொல்லுமோ என்று !



பெரியது கொடியது ?

Photo


கல்வி கடல் அளவை விடப் பெரியது 
வறுமை வான் அளவை விடக் கொடியது 
முயற்சி மட்டுமே முற்றுப் புள்ளியைத்  
தடுத்துவிடும் !

சுயநலம் ...!

Photo: Still from my next Telugu movie Yemito Ee Maaya with Sharwanand


உனது பொய்கள்
சிரித்தப் போது
காதலர்களாணோம் ...

உனது மெய்கள்
வலித்தப் போது
கணவன் மனைவியானோம்

இரண்டிற்கு நடுவில்
இளைப்பருகிறது சுயநலம் ...!


மறிக்காதே மரணிக்காதே...!

Photo: http://www.facebook.com/smartherodhanush



மரம் மனிதனின் பாதி 

மறித்து விட்டால் 

மரணம் தான் மீதி 

மறிக்காதே மரணிக்காதே...!

வரவேற்கக் காத்திரு ...!




நாடு இரவில் 
நட்ச்சத்திரங்கள் பேசியது 
உன் நிலாப் பெண் வருகிறாள் 
வரவேற்கக் காத்திரு 
இல்லையே
விடிந்து மறைந்திடுவாள்
என்றது ...

என் ஒருவன் சந்தோசத்திற்காக 
எண்ணற்ற உயிர்கள் 
பகல் இழந்து வாட வேண்டாம் என்று 
விழித்து உறங்கினேன்

நான் வாழும் 
நாளில்லா நாள் வரை 
நீ வரைந்து கொண்டே இரு என்று ...!


சிதைத்துவிட்டாய் ...!

ரெண்டாவது படம்


சிதை 
அலங்காரத்தின் முன்

உன் 
சிலை அலங்காரம் 
தோற்றுவிட்டது  - காரணம் 

நீ என்னை
சிதைத்துவிட்டதால் ...!



சவப் பேசி ...!





சாலைப் பேசி 

சவப் பேசி 

அதற்கு முன்

சற்று யோசி 

சாதிக்கலாம் நூறு ஆசி ...!

அட ஈனப்பிரவியே ...!



நிழலின் தொடர்ச்சி 
மண்ணிற்கு தெரியாது 

நிஜத்தின் வளர்ச்சி 
மனிதனுக்கு புரியாது 

அட ஈனப்பிரவியே ...

இரண்டும் அளவிட்டால் 
இருண்டு விடும் உலகம் ...!

புரிதலா ?





காற்றில்லா இடமில்லை 

காதலில்லா உலகமில்லை 

கண்ணே ...


நீ 

இல்லா இதயம் மட்டும் 

இன்னும் இயங்குகிறது 

இதற்கு பேர் தான் புரிதலா ?

எழுதா ஓவியம் ...!




எழுதாத ஓவியங்கள் 

என்னுள் புதைந்து

கிடக்கிறது ...

எழுதும் காவியமாக

நீ வந்தால்

அழகிய ஓவியம்

படைப் போம் உலகில் ...!


பள்ளியல்ல பார்சியாளிட்டி ...!



டிரிங் .... டிரிங் ... 

ஹலோ சொல்லுங்க மேம் 

நீங்க மோகன் அம்மாவா ? 

எஸ் 

ஒகே நாளைக்கு 9 மணிக்கு ஸ்கூலுக்கு வாங்க 

ஏன் மேடம் எதாவது பிராபலமா ? 

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும் கே 

ஒகே மேடம் ...

போனை வைத்த அந்தப் பெண் புலம்பிக் கொண்டே இருந்தாள் ஐயோ என் பையன் எதாவது தவறு செய்துவிட்டானோ என்னவோ என்று 

அன்றைய பொழுது விடிந்தது மறு நாள் காலையில் 9 மணிக்குப் பள்ளிக்குச் சென்றாள் அங்குள்ள அலுவலகத்தில் பணிபுரியும் மேல் அதிகாரியைக் கண்டார் அங்கு .... 

உங்கள் பையன் நல்லாப் படிக்கிறான் ஆனால் ரெம்பச் சேட்டைச் செய்கிறான் எல்லாப் பசங்களையும் அடிக்கிறான் அடுத்துப் போவது 6 வது வகுப்பு இப்படியே சேட்டைச் செஞ்சா TCயைக் கொடுத்து அனுப்பிவிடுவோம் என்றார்கள் 

என்ன மேடம் இப்படிச் சொல்லிடேங் அவன் நல்லாப் படிக்கவேண்டும் என்று தான் இங்க சேர்த்தோம் நீங்களும் இப்படிச் சொன்னா எப்படி மேடம் 

புரியுதுமா இருந்தாலும் இங்க படிக்கின்ற எல்லாப் பசங்களும் பெரிய பெரிய பணக்காரங்க அவுங்கப் பையன உங்க பையன் அடிச்சா எப்படிச் சொல்லுங்க நீங்களும் ரெம்பக் கஷட்டப்பட்டுத் தான் பீஸ் கட்டுறேங்க ஏன் கவர் மெண்ட்பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டியது தானே இங்க வந்து ஏன் கஷ்டப்படுறேங்க என்றனர் 

அதற்கு அவள் நான் ஏழைதான் இல்லேன்னு சொல்லல மேடம் இவனாவது நல்லாப் படிக்கணும் என்ன மாதிரியே கஷ்டப்படக் கூடாது என்று தான் கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க மேடம் இனிமேல் இப்படி நடக்காமல் கண்டிச்சி வைக்கிறேன் 

சரி விடுங்க நாளைக்கு வந்து ஒரு லட்டர் எழுதிக்கொடுங்க இந்த மாதிரி என் பையன் இனிமேல் எந்தச் சேட்டையும் செய்யமாட்டான் அப்படிச் செய்தால் TCயைப் பாதியில் கொடுத்துவிடுங்கள் என்று கே 

சரிங்க மேடம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தாள் தன் பையனை அடியடியென அடித்து விட்டாள் 

அதற்கு அவள் மகன் அம்மா அடிக்காதே நானா வம்புக்கும் போகவில்லை எல்லாப் பசங்களும் என்னை அடித்ததால் தான் நானும் திருப்பி அடித்தேன் என்றான் 

சரி டா நாளைக்கு உங்க மேடமிடம் சொல்லலாம் என்றாள் 

சரி அம்மா என்றான் 

மறு நாள் சொன்று நடந்ததை விவரமாகக் கூறினார்கள் இருந்தும் என் மகனும் தவறு செய்யமாட்டான் என்று கூறவில்லை மேடம் அவனும் தவறு செய்திருக்கலாம் அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா? சொல்லுங்கள் என்றாள் அதற்கு அந்த மேடம் 

அதையெல்லாம் பொருட்படுத்த முடியாது அவுங்கப் பெரிய இடம் நீங்க யாரைக் கூட்டி வந்தாலும் இது தான் முடிவு ஒகே என்றதும் 



சரியென்று திரும்பியவர்கள் கண்ணீர் மல்கக் கடவுளை வதைத்தார்கள் கடவுளே பாதியில் என் கணவன் என்னை விட்டுப் பிரிந்தது என் தவறா? இப்போது நான் கூலி  வேலை செய்து என் குழந்தைகளைப் படிக்க வைப்பது என் தவறா இலலை நான் அந்தப்பள்ளியில் உண்மையைப் பேசியது என் தவறா ? இப்படி எல்லாத் தவறையுமே விதி என்ற ஒரே வார்த்தைக்குள் அடக்கி என்னை ஆட்டிபடைக்கிறாயே நான் என்ன பாவம் செய்தேன் சொல் என்னையும் என கணவன் இறந்த அன்றே எடுத்துக் கொண்டால் இப்போது இவ்வளவு கொடுமையை நான் எதிர்கொள்ள வேண்டாமே என்று புலம்பினாள் 

கடவுள் என்ன நேரில் வந்து காட்சிக் கொடுக்க என்ன திரைப்படமா? இல்லையே இது தலை விதிப் படம் பட்டுத் தான் சாக வேண்டும் என்றாள் 

உடனே தன் பையன் ஓடிவந்து அம்மா அழாதே அங்கு எல்லாப் பசங்களும் என்னை அடிக்கிறாங்கமா அதனால் தான் நானும்திருப்பி அடிச்சத் தவறு என்கிறார்கள் அதற்குப் பதிலாக என்னை வேறு பள்ளியில் சேர்த்தால் வேறு பசங்கள் வேறு நடப்புகள் சோ நான் இனிமேல் இந்த மாதிரித் தப்புப் பண்ணாம என்ன யார் அடிச்சாலும் கிளாஸ் டீச்சரிடம் போய்க் கம்ளைண்ட் பண்ணுகிறேன் சரியாமா என்றான் 

அதைக் கேட்டத் தாய்க் கட்டி அனைத்து முத்தமிட்டு கண்ணே உன்னை நான்  வேறு பள்ளியில் சேர்க்கிறேன்  என்றாள் 

இருந்தும் மனதிற்குள் ஒரு பயம் அங்கும் இதே மாதரிப் பார்சியாளிட்டிப் பார்த்தால் என்ன செய்வது என்று ! 

சரி அப்படி இருக்காது என்ற மனப் போராட்டத்தில் வேறு பள்ளியில் அட்மிசன் போட அப்ளிகேசன் வாங்கச் சென்றார்கள் 

அங்கு உள்ள அலுவலக அதிகாரி ஒருவர் ஏன் அந்தப் பள்ளியில் இருந்து இங்குச் சேற விரும்புகிறேர்கள் என்றனர் 

அதற்கு அங்குப் பீஸ் அதிகம் சோ எங்களால் கட்ட முடியல அதான் இங்குச் சேர்க்கலாம் என்று நினைத்தோம் 

ஒகே இந்தாங்க அப்ளிகேசன் பார்ம் ஐநூறு ரூபாய்த் தாருங்கள் அடுத்த நாள் என்ரன்ஸ் எக்ஸாம் 



ஒகே மேடம் ரெம்ப நன்றி என்று திருப்பினார்கள் .! 



நன்றி !
                                                                                                   -~-

இன்றைய சூழலில் ஓர் எறும்புக் கடித்தால் அதைக் கொன்றுவிடத் துடிக்கும் மனது சரியா தவறா என்று யோசிப்பதில்லையே அதே போல் அந்த எறும்புக்கு இவர் பணக்காரர் இவர் ஏழை என்று தெரிவதில்லை அனால் மனித னத்தில் மட்டும் ஏன் இந்த வேற்றுமை இதனால் ஒரு சிறு குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாய் நிற்கிறது இந்தத் தவறுக்கு யார் காரணம் பணமா? பார்சியாளிட்டியா ?) 



சென்ரியுவாய்த் திருக்குறள் - 256 to 260




குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் 
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.


ஹிஷாலீ சென்ரியு 

அய்யனின் திருப்பணி 
இறைச்சியை 
விடு பணி...!

கறிக்கடை பிணம் 
உயிர்க்கொல்லி பணம் 
மகிழ்ச்சியில் காய்கறிகாரன் ...!

குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் 
புண்ணது உணர்வார்ப் பெறின்.

ஹிஷாலீ சென்ரியு 

புண் இறைச்சி
புழுபோல் தின்றது 
கண்ணிருந்தும் குருடனாய் 

குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

ஹிஷாலீ சென்ரியு 

காய் உண்டு
கறி உண்ண மாட்டான்  
கருவறை கடன் பெற்றவன் 

குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

ஹிஷாலீ சென்ரியு 

வேள்வி அறுத்து 
உயிர் காப்பவன் 
பிரம்மன் ...!

குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிருந் தொழும்.

ஹிஷாலீ சென்ரியு 

பாருயிர்கள் தொழுபவன்  
பாவம் செய்யா 
பைத்தியக்காரன் ...!



mhishavideo - 145