சென்ரியுவாய்த் திருக்குறள் - 256 to 260




குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் 
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.


ஹிஷாலீ சென்ரியு 

அய்யனின் திருப்பணி 
இறைச்சியை 
விடு பணி...!

கறிக்கடை பிணம் 
உயிர்க்கொல்லி பணம் 
மகிழ்ச்சியில் காய்கறிகாரன் ...!

குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் 
புண்ணது உணர்வார்ப் பெறின்.

ஹிஷாலீ சென்ரியு 

புண் இறைச்சி
புழுபோல் தின்றது 
கண்ணிருந்தும் குருடனாய் 

குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

ஹிஷாலீ சென்ரியு 

காய் உண்டு
கறி உண்ண மாட்டான்  
கருவறை கடன் பெற்றவன் 

குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

ஹிஷாலீ சென்ரியு 

வேள்வி அறுத்து 
உயிர் காப்பவன் 
பிரம்மன் ...!

குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிருந் தொழும்.

ஹிஷாலீ சென்ரியு 

பாருயிர்கள் தொழுபவன்  
பாவம் செய்யா 
பைத்தியக்காரன் ...!



2 comments:

  1. நல்ல முயற்சி! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீங்களும் எங்களுடன் சேர்ந்து தொடருங்கள் இது என் வேண்டுகோள் அல்ல ஆசை

      நன்றிகள் அண்ணா !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145