கடல் ...!


நீல வண்ண சோலையே
உன் நிழல் படம் காண
என் விழிபடம் வந்தபோது
உன் இதழ் படம் சிரிக்கையில்
என் இமை படம் சிந்திக்க
தொடங்கியதால்

நீ சந்திக்க வரும் நொடியில்
நான் கரையில் நின்று உன்னை
கையசைக்கிறேன்

என் நிழல் பட்ட இடத்தை
உன் அலை பட்டு
கரை தொட்ட நொடியில்
காற்றும் குளிர்கிறது என்
கவலையும் மறைகிறது

இதை காணும் நொடியில்
உலகும் மறைகிறது உன்
உறவும் விரிகிறது அது மட்டுமா
இரவுகள் கூட இசைபடுகிறது
உன் இன்ப நாதத்தில்

வெள்ளி சலங்கையில் பள்ளி
கொள்ளும் பருவ பெண்ணாய்
தோன்றும் உருவத்தை கண்டு ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு